Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 09 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 09 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��

    श्री हयग्रीव स्तोत्रम् 09 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    ஸ்ரீ ஹயக்ரீவனே ! ப்ருஹஸ்பதி , உன் அருளால் , தேவ லோகத்தை , வழி நடத்துகிறார் !








    ��











    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��




    वितर्क , डोलाम् , व्यवधूय ; सत्त्वे ,

    बृहस्पतिम् , वर्तयसे , यत: ; त्वम् ।

    तेन - एव ; देव ! त्रिदश - ईश्वराणाम् ,

    अस्पृष्ट , डोलायितम् , आधिराज्यम् ॥



    ��






    விதர்க்க , டோலாம் , வ்யவதூய ; ஸத்த்வே ,

    ப்ருஹஸ்பதிம் , வர்த்தயஸே , யத : ; த்வம் |

    தேந - ஏவ , தேவ ! த்ரிதஶ - ஈஶ்வராணாம் ,

    அஸ்ப்ருஷ்ட , டோலாயிதம் , ஆதிராஜ்யம் ||




    ��






    देव .............. எம்பெருமானே !

    त्वम् ............. நீ ,

    वितर्क ........... ஸந்தேஹத்தால் ,

    डोलाम् .......... மனம் ஊசல் ஆடும் தன்மையை ,

    व्यवधूय ......... ஒழித்து ,

    बृहस्पतिम् ...... ப்ருஹஸ்பதியை ,

    सत्त्वे ............. நல்ல மார்க்கத்தில் ,

    यत: ............. எதனால் ,

    वर्तयसे .......... நிலை நிறுத்துகிறாயோ ;

    तेन एव .......... அதனாலேயே ,

    त्रिदश ........... தேவர் ,

    ईश्वराणाम् ..... தலைவர்களின் ,

    आधिराज्यम् .... தேவ லோக ஆட்சி ,

    डोलायितम् ...... ஊசல் ஆடுவதற்கு ,

    अस्पृष्ट .......... இடம் இல்லாதது , ஆயிற்று !


    ��






    ஶ்ரீ உப. வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * தேவர்களுக்கு எல்லாம் , குரு , பிரகஸ்பதி . அவருடைய , மந்திராலோசனை முதலிய உதவியினாலேயே , தேவேந்திரன் முதலிய தலைவர்கள் , தத்தம் லோகங்களில் , ஆட்சி புரிகின்றனர் .

    * அந்த பிரகஸ்பதியும் , சில சமயங்களில் , தர்ம விஷயத்தில் , சந்தேகம் வந்து , கலங்கி நிற்பதுண்டு . அப்பொழுதெல்லாம் , நீ , அவருக்கு , நல் உபதேசம் செய்து , அவர் கலக்கத்தைப் போக்கி , நேர்வழியில் , நிலைநிறுத்துகிறாய் .

    * அதனால் , அவர் , இந்திரன் முதலியோருக்கு , நல் வழிகாட்டி , அவர்கள் , தத்தம் ராஜ்ஜியங்களை , நன்கு ஆளுமாறு , செய்கிறார் . ஆகவே அசுரர்களால் , அந்த ராஜ்யங்கள் , நிலைகுலையாது இருக்கின்றன .

    * இவை அனைத்தும் , உன் திருவருளால் , அல்லவா , நடக்கின்றன !


    ��





Working...
X