Announcement

Collapse
No announcement yet.

Blowing conch -Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Blowing conch -Spiritual story

    பாஞ்ச ஜன்யம்!


    கண்ணனின் உதவி வேண்டும் என்பதற்காக, அர்ஜுனன்
    துவாரகை சென்றான். அதே சமயம் துரியோதனனும் அங்கு
    போனான்.


    ""உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் கண்ணன்.
    ""போரில் நீங்கள் எமக்கு போர் செய்ய துணையாக வேண்டும்!"
    என்றனர்.


    அதாவது, "வரப் போகும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவ
    வேண்டும்!' என்று இருவரும் கேட்டுக் கொண்டனர்.
    கண்ணன் அவர்களிடம், ""துரியோதனா, நீ முதலில்
    வந்தவனாக இருக்கலாம். ஆனால், நான் அர்ஜுனனைத்தான்
    முதலில் பார்த்தேன்.


    என் படைகளை ஒருவருக்கு அளிப்பேன்;
    நான் ஆயுதம் எடுக்காமல் மற்றவருக்கு உதவுவேன்.


    அர்ஜுனனை முதலில் பார்த்ததாலும், அவன் உன்னை விட
    இளையவன் ஆனதாலும் அவனுக்கு முன்னுரிமை தருகிறேன்.
    உனக்கு எது தேவை அர்ஜுனா?" என்று கேட்டார் கண்ணன்.


    ""கண்ணா, எனக்கு துணையாக நீங்கள் மட்டுமே போதும்!"
    என்று வேண்டினான் அர்ஜுனன்.


    துரியாதனன் மகிழ்ச்சியுடன், கண்ணனின் படைகளைத்
    தனக்கு உதவியாக அழைத்துக் கொள்வதாகச் சொன்னான்.
    கண்ணனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.


    அர்ஜுனன், கண்ணனிடம், ""நீங்கள் எனக்குச் சாரதியாக
    வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டான்.
    அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏனெனில், தேரோட்டும்
    சாரதிக்குத்தான் எஜமானனின் வெற்றியை அறிவிப்பதற்காக
    அடிக்கடி சங்கை ஊதுகின்ற கடமை உண்டு.


    கண்ணனுடைய "பாஞ்சஜன்யம்' என்ற சங்குக்கு எவ்வளவு
    பலம் உண்டு என்கிற விஷயம் துரியோதனனுக்குத்
    தெரியவில்லை.


    போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி என்ன என்பதை
    அவன் புரிந்துக் கொண்டான்.


    போரில் கண்ணன் சங்கு ஊதிய போதெல்லாம்
    ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள்
    என்பதை நேரிலேயே பார்த்தான் துரியோதனன்.


    அதன் பிறகுதான் யோசித்தான். கண்ணனுடைய சங்கும் ஓர்
    ஆயுதமாகிவிட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக்
    கெடுக்கிறானே!' என்பதை உணர்ந்தான் துரியோதனன்.


    இந்த அடிப்படையில் உருவான பழமொழி தான் சும்மா
    இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது.
Working...
X