23-9-2018அனந்த பத்மநாப விரதம்:--
பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.


முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து


அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.


விரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம்.
விரத சூடாமணி புத்தகத்தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.
25-9-2018:--உமா மஹேஸ்வர விரதம்.


பாத்ரபத மாத பெளர்ணமி அன்று உமா மஹேஸ்வரர் என்னும் பெயரில் உமாவுடன் சேர்ந்த சிவனை ஆராதிக்க வேண்டும்..


என்னென்ன விருப்பத்தை குறித்து யார் யார் செய்கிறாரோ அவர் தான் விரும்பும் அனைதையும் அடைவார் என்கிறது சிவ ரஹஸ்யம்.


உமா மஹேஸ்வர விருதத்தில் சிவனை 16 வடிவத்தில் 16 கலசங்களில் 16 பூக்களால் 16 வித நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.15 வருடம் இம்மாதிரி செய்யலாம் .இரு பட்டு கயிரில் 15 முடிச்சுகள் போட்டு பூஜையில்


வைத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. அனைத்து பாபங்கள் விலகி நல்ல தெளிவான ஞானம் பெறலாம். ஒரு ஏழை தம்பதிகளுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.


முடியாவிட்டால் மூன்று வருடங்களாவது செய்யலாம். இந்த விரதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இரவு சிவ புராணம் கதை கேட்க வேண்டும்.அல்லது படிக்க வேன்டும்.


1, உமா மஹேஸ்வரர்; 2. சிவ: 3. சர்வர்; 4. ருத்ரர். 5. பசுபதி. 6. உக்ரர்;7. மஹாதேவர். 8. பீமர்; 9. ஈசானர்; 10. உமாபதி. 11. சம்பு; 12. . சூலி; 13. அம்ருதேஸ்வரர்.14. வாமதேவர்; 15; காலகாமர்; 16. காலாத்மா.


இந்த விரதத்தை முழுமையாக செய்ய இயலாதவர்கள் 15 முடிச்சு போட்ட ஒரு பட்டு கயிறு சிவன் ஸன்னதியில் வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து
நமஸ்தே கிரிஜா நாத பக்தாநா மிஷ்டதாயக ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்


தவ பக்திஞ்ச தேஹி மே என்று ப்ரார்தித்து நம: பஞ்சதச க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்தாய சம்பவே தயாகராய தேவாய சங்கராய நமோ நம: என்று சொல்லி நமஸ்கரித்து ஹர பாபானி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே


க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவன்ணவாத்.என்று சொல்லி பட்டு கயிறை கையில் கட்டிக்கொள்ளவும்..

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்த விரதம் செய்வதால் நல்ல புகழ், செவங்கள், சொத்துக்கள். நல்ல குணங்கள் ஆகியவை நமக்கு திரும்ப கிடைக்கும்..