Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 2adhyaya 10 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத் பாகவதம்-ஸ்கந்தம்2 அத்தியாயம் 10
    அத்தியாயம் 1௦
    சுகர் கூறினார்.
    பாகவதத்தில் பத்து விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன,
    ஸர்கம் விஸர்கம்,ஸ்தானம், போஷணம், ஊதிகள், மன்வந்தரம், ஈசானுகதா , நிரோதம், முக்தி, ஆச்ரயம்.


    இதில் ஆச்ரயம் என்பது பரப்ரம்மம் அல்லது பகவான்,. அவரை அடையும் பொருட்டே மற்ற ஒன்பது லக்ஷணங்களும் மகாபுருஷர்களால் வர்ணிக்கப்படுகின்றன.


    ஸர்கம்- மஹத் அல்லது புத்தி தத்வத்தில் இருந்து பகவானின் சங்கல்பத்தால் மூன்று குணங்களின் வேறுபாட்டின் மூலம் பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள் இவை விராட் ரூப வடிவில் தோன்றுதல் ஸர்கம் எனப்படும். 'தத் இச்சத பஹு ஸ்யாம் பிரஜாயேய,' பிரம்மம் சங்கல்பித்தது, நான் பலவாக ஆவேன் என்று.- உபநிஷத் வாக்கியம்.


    விஸர்கம்- விராட் புருஷனிடம் தோன்றின பிரம்மாவின்.ஸ்தூல சிருஷ்டி.
    ஸ்தானம் –பகவானுடைய இச்சைப்படி உலகை ஒழுங்கு படுத்துதல் ஸ்தானம். அதாவது நாம் ரூபமான பிரபஞ்சம். உபநிஷத் கூறுகிறது. 'அனேன ஆத்மனா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி ,' இந்த ஜீவர்களுள் ஆத்மாவாக பிரவேசித்து பெயர் உருவம் முதலியன கற்பிப்பேன்.


    போஷணம்-அவரை அண்டி வந்த பக்தர்க்கு செய்யும் அனுக்ரஹமே போஷணம்.


    மன்வந்தரம்- மனுக்கள் காட்டிய தர்ம மார்கத்தை மஹாபுருஷர்களின் வாழ்க்கை மூலம் அறிவது.


    ஊதி- கர்மத்தினால் ஏற்படும் ஊழ்வினைகள்.


    ஈசானுகதா- பகவானின் அவதாரங்கள் மற்றும் பக்தர்கலின் சரித்திரங்கள் இவைகளை விவரிப்பது.


    நிரோதம்- பிரளய காலத்தில் பகவான் சயநிக்கும்போது, எல்லா ஜீவர்களும் தங்கள் சூக்ஷ்ம ரூபத்தில் அவரிடம் ஒடுங்குவதே நிரோதம். ( மறுபடி ஸ்ருஷ்டி ஏற்படும்போது ஜீவர்கள் தங்கள் கர்ம வாசனைப்படி பிறவி எடுக்கிறார்கள்)


    அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.


    பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை.


    முக்தி – பிறவித் தளையில் இருந்து விடுபட்ட ஜீவர்கள் அடைவது முக்தி.
    ஆச்ரயம்- 'யதோ வா இமானி பூதானி ஜாயந்தே, யேன ஜாதானி ஜீவந்தி, யஸ்மின் அபிசம்விசந்தி தத் விஜிக்ஞாஸஸ்வ. தத் ப்ரம்ம ' – உபநிஷத். எவரிடம் இருந்து எல்லாம் தோன்றியதோ எவரால் எல்லாம் காக்கப்படுகிறதோ எவரிடம் கடைசியில் ஒடுங்குமோ , அதைத் தெரிந்துகொள். அதுதான் பிரம்மம்.


    பிறகு நாராயணன் கர்போதக சாயியாக வர்ணிக்கப படுகிறார்.
    விராட்புருஷன் பிரம்மாண்டத்தில் ( cosmic shell) இருந்து வெளி வந்து சுத்த சத்வமாகிற நீரை சிருஷ்டித்து ( cosmic waters)அதில் ஆயிரக்கணக்கான வருடங்கள் சயனிக்கிறார். அதனால் நாராயணன் எனப்படுகிறார்.
    நார என்றால் நீர். அயன என்றால் இருப்பிடம். நாரா: அயனம் யஸ்ய இதி நாராயண:
    . பிறகு பலவாக ஆக சங்கல்பித்து தன்னுடைய வீர்யத்தை மூன்றாக்கி அதிதைவம் ( தெய்வ சக்தி) அத்யாத்மம், ( மானிட சக்தி) அதிபௌதிகம் (இயற்கை சக்தி) இவைகளை உண்டாக்கினார்.


    பகவானுடைய பிரபஞ்சத்தை கண்காணிக்கும் சக்தி அதிதைவம்.
    அந்தர்யாமியாக இருந்து ஜீவாத்மாவை நடத்தும் சக்தி அத்யாத்மம்.
    பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகமாக இருப்பது அதி பௌதிகம்.


    இந்த்ரிய சக்தியாகிய ஓஜஸ், மனோசக்தியாகிய ஸஹ:, உடல் சக்தியாகிய பலம் இவை விராட் புருஷனிடம் இருந்து வெளி வந்தபோது அவைகளில் இருந்து பிராணன் அல்லது சூத்ராத்மன் ,( collective self) தோன்றியது.


    ( மணிகள் கோர்க்கப்பட்ட நூல் போல எல்லா உயிர்களுக்கு உட்புகுந்து செயல் படுவதால் சூத்ராத்மன் என்று கூறப்படுகிறது.)


    பிறகு ஸ்தூல பிரபஞ்சமான தேவ , மனுஷ்ய, மிருக, பக்ஷி, ஸ்தாவர உயிர்கள் தோன்றின.
    இங்கு வர்ணிக்கப்பட்ட ஸர்கம் மூன்றாவது ஸ்கந்தத்தில் விஸர்கத்துடன் விரிவாக கூறப்பட்டிருக்கிறது.


    பின்னர் பரீக்ஷித் விதுரரின் தீர்த்தயாத்திரையின் காரணம் , அவருக்கு மைத்ரேயரின் உபதேசம் முதலியவைகளைப் பற்றி கேட்க, சுகர் கூறலானார்.


    ஸ்கந்தம் 2 முற்றிற்று.
Working...
X