Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 3 adhyaya 1 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3. அத்தியாயம் 1


    அத்தியாயம் 1
    விதுரர் ஹஸ்தினாபுரம் விட்டு நீங்கியதும் பிறகு தீர்த்தயாத்திரை முடிந்து திரும்பி வந்ததுமான காரணத்தைக் கேட்க விரும்பிய பரீக்ஷித்திற்கு சுகர் கூறலானார்.


    கிருஷ்ணர் பாண்டவதூதராக ஹஸ்தினாபுரம் சென்ற பொது, அவர் வார்த்தைகள் பீஷ்மர் விதுரர் போன்றவர்களுக்கு அமுதமாக விளங்கிற்று. ஆனால் புண்ணியம் முழுதும் அழிந்துபோனவரான திருதராஷ்டிரர் அதை மதிக்கவில்லை.


    திருதராஷ்டிரர பின்னர் விதுரரை அழைத்து ஆலோசனை கேட்டார். விதுரர் அப்போது கூறியவை மகாபாரதத்தில் விதுர நீதி என்று விளங்குகிறது. கடைசியில் விதுரர் கூறியதாவது,


    " பாண்டவருக்கு நீர் செய்த அநீதி பொறுக்க முடியாதது. பீமசேனன் சகோதரர்களுடன் மலைப் பாம்பு போல சீறிக்கொண்டிருக்கிறான். அதனால் அவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்ஜியத்தை கொடுத்து விடுவது நல்லது.


    பாண்டவர்களை பகவான் கிருஷ்ணர் ஆதரிக்கிறார். ஆதலால் அவர்களை விரோதித்துக்கொள்ள வேண்டாம்.
    ஸ ஏஷ தோஷ: புருஷத்விட் ஆஸ்தே
    க்ருஹான் ப்ரவிஷ்ட: யம் அபத்யமத்யா
    புஷ்ணாஸி க்ருஷ்ணாத் விமுக: கதஸ்ரீ:
    திச அச்வசைவம் குலகோசலாய . (ஸ்ரீமத். பாக. 3.1.13)


    இதன் கருத்து, " புருஷோத்தமராகிய கிருஷ்ணரை பகைத்ததனால் உங்கள் க்ருஹத்தில் தோஷம் புகுந்து விட்டது. கிருஷ்ணரிடம் இருந்து விலகிய உங்களிடம் இருந்து லக்ஷ்மி விலகிவிட்டாள். எவனை புத்திரன் என்று போஷிக்கிறீரோ அவன் அம்ங்கலமே உருவானவன். அவனை குல க்ஷேம்த்துக்காக விலக்கி விடும்."


    சாதுக்கள் போற்றும் விதுரர் இவ்வாறு கூறியதைக்கேட்ட துரியோதனன் சினம் மேலிட்டு விதுரரை, தாசி புத்திரன், கபடன், பாண்டவர்களின் பக்கம் இருப்பவன் என்று நிந்தித்து வெளியேறுமாறு கூறி அவமதிக்கவே விதுரர் இதுவும் பகவானின் மாயையே என்று தெளிந்து, அந்த மாயையே இவர்களை தண்டிக்கும் என்று ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி க்ஷேத்ராடனம் புறப்பட்டார்.


    'கௌரவபுண்யலப்த:,' குரு வம்சத்தின் புண்ணிய வசமாகத் தோன்றிய விதுரர் என்று பாகவதம் கூறுகிறது. அவர் அகன்றபோது அவர்களுடைய பாக்கியமே மறைந்தது என்பது இதன் பொருள்.


    அவர் பல நாடுகளைக் கடந்து யமுனைக்கு வந்த போது உத்தவரை சந்தித்தார். அதற்குள் மகாபாரத யுத்தம் முடிந்து பல வருடங்கள் சென்று விட்டன. பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார். உத்தவரைக் கண்ட விதுரர் துவாரகையில் இருந்த ஒவ்வொருவரை பற்றியும் விசாரித்துப் பிறகு கிருஷ்ணரைப் பற்றியும் விசாரித்தார். அவர் கூறியது,


    அஜஸ்ய ஜன்மோத்பதநாசனாய கர்மாணி அகர்த்து: க்ரஹணாய பும்ஸாம்
    நநு அன்யதா கோ அர்ஹதி தேஹயோகம் பரோ குணாநாமுதகர்ம தந்த்ரம்
    (ஸ்ரீ. பா. 3.1.44. )


    பிறவியில்லாத முக்குணத்துக்கப்பாற்பட்ட பகவான் துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் இவை பொருட்டு தேஹத்தை எடுத்துக்கொள்கிறார்.


    தஸ்ய பப்ரபன்னாகிலலோகபானாம் அவஸ்திதானாம் அனுசாசனே ஸ்வே
    அர்த்தாய ஜாதஸ்ய யதுஷ்வஜஸ்ய வார்த்தாம் ஸகே கீர்த்தய தீர்த்த கீர்த்தே:
    (ஸ்ரீ. பா.3.1. 45)


    சரணடைந்த தேவர்களைக் காக்கவும், பக்தர்களுக்கருளவும் யதுகுலத்தில் தோன்றிய பகவானைப் பற்றிய விவரங்களை கூறுங்கள்.
    இதைக்கேட்ட மாத்திரத்தில் உத்தவர் சோகம் மேலிட்டு பேச்சற்றவர் ஆனார்.
Working...
X