Srimad bhagavatam skanda 3 adhyaya 11 in tamil
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 11


காலத்தின் அளவுகள் இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகின்றன. முதலில் பரமாணு என்றால் என்ன என்று விவரிக்கிறார். இது காலத்தின் சூக்ஷ்ம எல்லையாகும்.


பரமாணு என்பது பிரபஞ்சத்தின் சிருஷ்டியின் ஆரம்ப நிலை. அணு என்று நாம் அறிவது இரண்டு பரமாணு சேர்ந்தது. அது ஸ்தூல சிருஷ்டியின் முதல் நிலை. இது த்வயணு என்றும் அறியப்படுகிறது.


இரண்டு த்வயணுக்கள் சேர்ந்தது த்ரஸரேணு எனப்படும்.இந்த நிலைதான் கண்ணால் பார்க்கப்படும் முதல் நிலை , அதாவது உருவநிலை.


சூர்ய வெளிச்சம் ஜன்னல் வழியாக வரும்போது அதில் சில தூசித்துகள்கள் தெரிகிறதே அதுதான் த்ரஸரேணு. இப்போது இது எவ்வாறு காலத்தின் அளவைக் குறிக்கிறது என்று பார்க்கலாம்.


பரமாணுவை கடக்கும் காலம் பரமாணுகாலம். பிரபஞ்சம் முழுவதையும் வியாபிக்கும் காலம் பரமமஹான் எனக்கூறப்படுகிறது. மூன்று த்ரஸரேணுக்களைக் கடக்கும் காலம் த்ருடி. அதன்பின் காலக்கணக்கு பின்வருமாறு.
1௦௦திருடி= வேத: (वेध
३ வேதா:= லவ:
3லவா: =நிமிஷ:
3 நிமிஷா:=க்ஷண:
5 க்ஷணா: = காஷ்டா
15 காஷ்டா:=லகு
15 லகு= நாடிகா(24minutes) நாழிகை
2 நாடிகா: =முஹூர்த்த:
6அல்லது 7 நாடிகா: = யாம:
2 யாமா: - ஒரு தினம் (24மணி நேரம்)
பிறகு சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் , மாதம், வருடம் இப்படிப்போகிறது.
1௦௦ வருடங்கள் மனிதனின் சராசரி ஆயுட்காலம்.
மனிதனின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு தினம்.
இரண்டு மாதங்கள் ருது எனப்படும். ஆறுமாதங்கள் தக்ஷினயணம் ஆறு மாதங்கள் உத்தராயணம்.இரண்டு அயனங்கள் தேவலோகத்தின் ஓர் இரவு, பகல்.


சூர்ய பகவான் நவக்ரகங்கள் 27 நக்ஷத்திரங்கள் ஆகிய கால சக்கரத்தில் இருந்துகொண்டு ஒரு வருடத்தில் பன்னிரண்டு ராசி ரூபமான உலகை சுற்றி வருகிறார்.


ய: ஸ்ருஜ்யசக்திம் பஹுதா உச்ச்ரவஸயன் ஸ்வசக்த்யா
பும்ஸோ அப்ரமாய திவி தாவதி பூதபேத:
காலாக்யயா குணமயம் க்ரதுபி: விதன்வன்
தஸ்மை பலிம் ஹரத வத்ஸரபஞ்சகாய


எவர் தன்னுடைய காலம் என்னும் சக்தியால் ஒரு வருடத்தை ஐந்து பாகமாகச் செய்துகொண்டு, சூர்யன் என்ற உருவத்தில் ஸ்ருஷ்டி சக்தியை பலவாக உருவாக்கி, மனிதர்களின் மயக்கத்தை தீர்க்கவும், யாகம் முதலியவைகளால் காம்யபலத்தைக் கொடுக்கவும் ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நாராயணனுக்கு பூஜை செய்யுங்கள்.


இவ்வாறு கூறிய மைத்ரேயரைப்பார்த்து விதுரர் கேட்டார்.
மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள் இவர்களின் கால்க்கணக்கைப்பற்றிக் கூறினீர்கள். இந்த மூவுலகுக்கும் அப்பாற்பட்டவர்களின் கால்க்கணக்கையும் பற்றிக் கூற வேண்டுகிறேன். என்றார்.
மைத்ரேயர் கூற ஆரம்பித்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம்3 அத்தியாயம் 11(தொடர்கிறது.)


கிருதயுகம் , த்ரேதாயுகம் , த்வாபர யுகம் , கலியுகம் என்ற நான்கு யுகங்கள் 12௦௦௦ தேவவருஷங்கள் என்று கணக்கிடப்படுகின்றன.
அதாவது 438000 மனித வருடங்கள்.
கிருத யுகம் 4800, த்ரேதாயுகம் 3600, த்வாபரயுகம் 2600, கலியுகம் 1200 தேவவருஷங்கள்.
365 மனிதவருடங்கள் ஒரு தேவ வருடமாகும்.


பிரம்மாவின் ஒருநாள் =1000 சதுர்யுகம் ஒரு பகல் 1000 சதுர்யுகம் ஒரு இரவு. பிரம்மாவின் ஒரு பகல் என்பது 14 மன்வந்தரங்கள் , ஒரு மனுவின் ஆயுட்காலம் (சுமாராக)எழுபத்து ஒன்றரை சதுர்யுகம்.


ஒவ்வொரு மன்வந்தரத்திலும் மனுக்கள், அவர் வம்சம், ரிஷிகள், தேவர்கள், இந்த்ரன், கந்தர்வர்கள் முதலியோர் புதிதாக ஸ்ருஷ்டிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மன்வந்தரங்களிலும் பகவான் சத்வகுணம் கொண்ட அவதாரங்கள் மூலமாகவும் மனு முதலியவர்கள் மூலமாகவும் தன் பெருமையை வெளிக்காட்டி பிரபஞ்சத்தை ரக்ஷிக்கிறார்.


ப்ரம்மாவுடைய இரவில் சிருஷ்டியை தம்முள் அடக்கிக்கொண்டு வாளாவிருக்கிறார். அப்போது மூவுலகமும் சந்த்ரசூர்யன் உள்பட அவரிடம் ஒடுங்கும். பிரம்மாவின் பகல் ஆரம்பிக்கும்போது மறுபடியும் சிருஷ்டி தொடங்கும்.


பிரம்மாவின் ஆயுள் இவ்விதம் நூறு வருடங்கள். அவர் ஆயுட்காலம் இரு பரார்தங்கள் கொண்டது. இப்போது உள்ள ப்ரம்மாவில் முதல் பரார்தம் முடிந்துவிட்டது. இது இரண்டாவது பரார்தம்.முதல் பரார்தம் பிரம்மகல்பம் எனப்படும். இரண்டாவதுபத்மகல்பம், இதன் ஆதியில் ஹரியானவர் வராஹப்பெருமானாக அவதரித்தார்.


இந்த இரு பரார்தங்களும் சேர்ந்து உள்ள காலம் பகவானுக்கு ஒரு நிமிடம் போன்றது. இது ஒரு உருவகத்திற்காகக் கூறப்பட்டதே அன்றி, உண்மையில் பகவானுக்கு காலம் என்பது இல்லை.
அடுத்து பிரம்மாவின் சிருஷ்டி விவரமாக வர்ணிக்கப் படுகிறது.