Announcement

Collapse
No announcement yet.

Bhairavar at Thiruvannamalai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bhairavar at Thiruvannamalai

    Bhairavar at Thiruvannamalai
    பைரவரை நம்பு....J.K. SIVAN .


    திருவண்ணாமலை என்றால் அருணாச லேஸ்வரர் அண்ணாமலையார், உண்ணாமுலையாம்பிகை பெயர்கள் ஞாபகம் வரும். அங்கே ஒரு பெரிய கால பைரவர் இருக்கிறார். டாங் டாங் என்று மணி சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் சந்நிதி. ஏனென்றால் பக்தர்கள் மணி அடித்தால் தீமை பாபம் எல்லாம் பைரவர் விலகச் செய்வார் என்ற நம்பிக்கை. ரொம்ப பெரிய கோவில். அதில் நாலாவது பிரஹாரத்தில் தான் கால பைரவர் இருக்கிறார்.


    வல்லாள மஹாராஜா கட்டிய கோபுரத்திற்கு தென் மேற்கே. பிரம்ம தீர்த்தத்துக்கு வட கிழக்கே.


    இந்த ஆலய கால பைரவர் பற்றிய ஒரு தகவல். அவர் முதலில் இருந்தது இரண்டாவது பிரஹாரத்தில் பள்ளியறை அருகே. ஓஹோ. பின் எதற்காக ரெண்டாம் பிரஹாரத்திலிருந்து 4வது பிரஹாரத்துக்கு காலபைரவர் மாற்றப்பட்டார்?


    அங்கு தான் ஒரு கதை முளைக்கிறது. காலபைரவர் சந்நிதியில் மூலவருக்கு ஒரு பெரிய சிவாச்சாரியார் தான் பூஜை அபிஷேகம் அலங்காரம் எல்லாம் செய்வார். அழகாக மந்திரங்கள் சொல்வார். வேறு சந்நிதிகளும் அவரே மெதுவாக சென்று பூஜைகள் செய்வது வழக்கம்.


    அவர் வீட்டில் அவர் பேரக்குழந்தை ஒரு பையன் ரொம்ப விஷமம். தாத்தாவுடன் ஓட்டிக்கொண்டு விளையாடுவான். அவருடைய நிழல் என்று சொல்லலாம்.


    அவர் அறியாமல் அவர் பின் ஒரு நாள் அந்த ஐந்து வயது குழந்தை தொடர்ந்து வந்திருக்கிறான். இரவு நேரம். அவர் காலபைரவர் சந்நிதியில் பூஜை எல்லாம் முடிந்து தீபத்தை சிறிதாக்கி கதவை பூட்டிக்கொண்டு அடுத்த சந்நிதிகளுக்கு இரவு ஜாம பூஜைகள் முடிந்து கதவை பூட்டிக்கொண்டு சாவியை காலபைரவன் சந்நிதி கதவுக்கருகே காட்டிவிட்டு வீடு நோக்கி நடந்தார்.


    ''சாமு எங்கே?'' பெண் கேட்டாள் .
    ''தெரியாதே.
    ''உங்களைத்தேடி தானே வந்தான். கால பைரவர் சந்நிதிக்கு அருகே உள் படியில் உட்கார்ந்து ஏதோ விளையாடிக்கொண்டிருந்தானே. நான் தானே பார்த்துவிட்டு வந்தேன். எங்கே அவன்?''


    பெண் சொன்னது சிவாச்சார்யருக்கு புதிதான விஷயம். அவர் பையனைப் பார்க்கவில்லை
    ஒருவேளை சிறு குழந்தை அவர் ரெண்டாம் பிரஹாரத்திலிருந்து மற்ற பிரஹாரங்கள் கடந்து எல்லா சந்நிதிகளும் பூட்டிக்கொண்டு திரும்பும்போது எங்காவது போய்விட்டானா. உள்ளேயே கோயிலில் எங்காவது இருப்பானோ.


    சிவாலயங்களில் ஆகம சாஸ்திரப்படி பூஜைகள் முடிந்து ஆலயம் சந்நிதிகள் மூடப்பட்டால் மறுநாள் காலை பூஜைக்காக தான் திறக்கப்படவேண்டும். என்ன செய்வது. எங்கே தேடுவது சாமுவை?


    பெண் ஒப்பாரி வைத்தாள் . அவரை சாடினாள் . எப்படியாவது சாமுவே கொண்டுவா என்று அலறித்தீர்த்தாள்
    உங்களை நம்பி தானே அனுப்பினேன் குழந்தையை. தொலைத்த்துவிட்டு வந்து நிற்கிறீர்களே?


    பெண் ஓடினாள். கால பைரவ சந்நிதிகதவை தட்டினாள் . குழந்தை குரல் கேட்கிறதா என்று பார்க்க ?
    கால பைரவர் சந்நிதிக்குள் ஒரு ஓரமாக சிறுவன் களைத்து தூங்கியிருக்கிறான்.


    ஒரு குரல் உள்ளே இருந்து அவளுக்கு கேட்டது ''போ காலையில் வா. குழந்தை ஜாக்கிரதையாக என்னோடு இருக்கிறான் ''


    பெண் பைத்தியம் பிடித்தவள் போல் ''என் குழந்தை இப்போதே எனக்கு வேண்டும் ''என்று கத்தினாள்.


    ''அப்படியா இந்தா உன் குழந்தை. ... ''


    காலபைரவர் கோயில் காவலர்.அவர் உத்தரவை மீறியதால் என்ன நடந்தது?


    கை கால்கள் பிய்ந்து உயிரிழந்த குழந்தை அவள் அருகே வந்து விழுந்தது.


    விஷயம் கசிந்து கால பைரவர் சிலை நாலாவது பிரஹாரத்துக்கு குளற்றங்கரை அருகே மாற்றப்பட்டது என்பார்கள். கடுங்கோபம் கொண்ட ருத்ரரை குளிர்விக்க சந்தன காப்பு அணிவித்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.


    இந்த சம்பவம் நடந்தது ஒரு பெரியவர் எனக்கு சொல்லி நான் அறிந்தது. எங்கும் படித்ததோ, கேள்விப் பட்டதோ இல்லை.
Working...
X