Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 05 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 05 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ


    ��



    श्री शरणागति दीपिका : 05 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    தீப ப்ரகாசருக்கும் , லக்ஷ்மீ ஸரஸ்ஸுக்கும் , சிலேடை !








    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    स्वामिन् ! गभीर , सुभगम् ; श्रम , हारि , पुम्साम् ;

    माधुर्य , रम्यम् ; अनघम् ; मणि , भंग , दृश्यम् ; ।

    वेगान्तरे , वितनुते ! प्रतिबिम्ब , शोभाम् ;

    लक्ष्मी , सर: ; सरसिज - आश्रयम् ; अंगकम् , ते ॥


    ��






    ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;

    மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |

    வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;

    லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ - ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||


    ��




    स्वामिन् ....... எம்பெருமானே !

    गभीर .......... கம்பீரமானதும் (ஆழமானதும்) ;

    सुभगम् ........ அழகியதும் ;

    पुम्साम् ........ மனிதர்களின் ,

    श्रम ............ தாபத்தை ,

    हारि ........... போக்குவதும் ;

    माधुर्य ......... இனிமையாய் ,

    रम्यम् .......... விளங்குவதும் ;

    अनघम् ........ குற்றம் , அற்றதும் ;

    मणि भंग ...... இந்த்ர நீலத் துண்டம் போல ,

    दृश्यम् ......... காணப் படுவதும் ;

    सरसिज(।)..... தாமரை (பிராட்டி)க்கு ,

    आश्रयम् ....... உறைவிடமாகவும் உள்ள ;

    ते ............... உன் ,

    अंगकम् ........ திருமேனியும்,

    लक्ष्मी सर:..... லக்ஷ்மீஸரஸ் என்ற பொய்கையும் ;

    वेगान्तरे ........ வேகவதி நதியின் நடுவில் ,

    प्रतिबिम्ब ...... சாயலின் ,

    शोभाम् ........ அழகை ;

    वितनुते ........ செய்கின்றன !

    ��




    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��




    [இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திரு மேனிக்கும் , அங்கு உள்ள 'லக்ஷ்மி ஸரஸ்' என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது]




    ��

    * விளக்கொளி எம்பெருமானே !




    ��




    * வேகவதி நதிக்கு , அருகில் உள்ள 'லக்ஷ்மி ஸரஸ்' என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் , நீரில் , தெரிகின்றன .


    * உன் திருமேனி :


    . கம்பீரமான தோற்றம் உடையது .


    . மிக அழகியது .


    . ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது .


    . அனுபவிக்க மிக இனியது.


    . இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது .


    . இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது .


    . பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது .


    . இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .






    * இவ்வாறே , 'லட்சுமி ஸரஸ்' என்னும் பொய்கை :


    . ஆழமானது


    . மிக அழகியது .


    . வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது .


    . இனிய நீர் நிறைந்து .


    . அழுக்கு , அற்றது .


    . இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது .


    . தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது .


    . இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .






    * இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !





    ��




Working...
X