Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 10 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 10 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 10 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    தீப ப்ரகாசனே ! உன்னை அடைய , நீயே , உபாயம் !








    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��










    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    सत्ता , स्थिति , प्रयतन , प्रमुखै: - उपात्तम् ;

    स्वार्थम् , सदा - एव , भवता , स्वयम् - एव , विश्वम् ; ।

    दीपप्रकाश ! तत् - इह , त्वत् - अवाप्तये ; त्वाम् ;

    अव्याज , सिद्धम् - अनपायम् - उपायम् ; आहु: ! ॥


    ��


    ஸத்தா , ஸ்த்திதி , ப்ரயதந , ப்ரமுகை: - உபாத்தம் ;

    ஸ்வார்த்தம் , ஸதா - ஏவ , பவதா , ஸ்வயம் - ஏவ , விஶ்வம் ; |

    தீபப்ரகாஶ ! தத் - இஹ , த்வத் - அவாப்தயே ; த்வாம் ;

    அவ்யாஜ , ஸித்தம் - அநபாயம் - உபாயம் ; ஆஹு: ! ||


    ��


    दीपप्रकाश .... விளக்கொளி எம்பெருமானே !

    भवता .......... உன்னால் ,

    विश्वम् ........ உலகம் முழுதும் ,

    सत्ता .......... ஸ்வரூபம் ,

    स्थिति ......... நீடித்தல் ,

    प्रयतन ......... செயல் ,

    प्रमुखै: ......... முதலியவற்றால் ;

    स्वयम् एव ..... தானே ,

    सदा एव ....... எப்பொழுதுமே ,

    स्वार्थम् ........ தன் பயனுக்காகவே ,

    उपात्तम् ........ படைக்கப் பட்டது ;

    तत् ............ ஆதலால் ,

    त्वत् ............ உன்னை ,

    अवाप्तये ...... அடைவதற்கு ;

    इह ............. இவ்வுலகில் ,

    त्वाम् ........... உன்னை ,

    अव्याज ........ ஒரு காரணமும் இன்றி , இயற்கையாய் வந்த ;

    सिद्धम् ......... முன்பே உள்ள ;

    अनपायम् ..... அழிவு அற்ற ;

    उपायम् ........ உபாயமாகக் ,

    आहु: .......... கூறுவர் !


    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��



    * விளக்கொளி எம்பெருமானே !


    * பிரபஞ்சத்திலுள்ள , ஸகலமான சேதன அசேதனர்களுடைய ஸ்வரூபம், அவை நீடித்து நிற்றல் , அவற்றின் செயல் , முதலிய அனைத்தையும் , உனக்கு வசமாக கொண்டுள்ளாய்.


    * நீ தானாகவே அவற்றை எப்பொழுதும் நடத்துகிறாய் .


    * அவற்றால் வரும் பயனையும் , முக்கியமாக நீயே பெறுகிறாய் .


    * இப்படி , எல்லாம் உன்னாலேயே , நடப்பதால் , மோக்ஷத்தை , ஜீவாத்மாக்கள் பெறுவதற்கும் , நீயே உபாயம் ஆகிறாய் .


    * உன்னை , இடைவிடாது பரமபதத்தில் , அனுபவித்தல் ஆகிய மோக்ஷ ஆனந்தத்தைப் , பெறுவதற்கு , சேதனர்கள் செய்ய வேண்டியுள்ள ஸாத்ய உபாயம் , ப்ரபத்தி ஆகும் .


    * இதைச் செய்து முடித்தவனுக்கு , செய்ய வேண்டியதாய் அன்றி , முன்பே உள்ள , ஸித்த உபாயமாக , நீயே ஆகிறாய் .


    * சேதனன் , முதலில் செய்த ப்ரபத்தியைத் தவிர , நீ வேறு ஒன்றையும் எதிர்பார்ப்பதில்லை .


    * நீயே , அழியாத உபாயமாக, நின்று அவனுக்கு மோக்ஷத்தை அருள்கிறாய் .


    * இவ்வுண்மையைப் , பெரியோர்கள் , அறிந்து , கூறுகின்றனர்.




    ��



Working...
X