Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 11 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 11 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    🙏



    श्री शरणागति दीपिका : 11 / 59


    🙏




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    🙏


    எம்பெருமானே ! யாவையும் படைத்து , பிராட்டியோடு , கண்டு , களிக்கிறாய் !


















    🙏









    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    🙏







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    🙏



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    🙏


    भोग्यम् , मुकुन्द ! गुण , भेदम् - अचेतनेषु ;

    भोक्तृत्वम् - आत्मनि , निवेश्य , निज - इच्छया - एव ; ।

    पांचालिका , शुक , विभूषण , भोग , दायी ;

    सम्राट् - इव - आत्म , समया , सह , मोदसे ! त्वम् ॥


    🙏


    போக்யம் , முகுந்த ! குண , பேதம் - அசேதநேஷு ;

    போக்த்ருத்வம் - ஆத்மநி , நிவேஶ்ய , நிஜ - இச்சயா - ஏவ ; |

    பாஞ்சாலிகா , ஶுக , விபூஷண , போக , தாயி ;

    ஸம்ராட் - இவ - ஆத்மா , ஸமயா , ஸஹ , மோதஸே ! த்வம் ||



    🙏



    मुकुन्द ........... எம்பெருமானே !

    भोग्यम् .......... அனுபவிப்பதற்கு ஏற்ற ,

    गुण भेदम् ....... பல்வகைக் குணத்தை ,

    अचेतनेषु ........ அசேதநப் பொருள்கள் இடத்திலும் ;

    भोक्तृत्वम् ...... அனுபவத் தன்மையை ,

    आत्मनि ......... ஜீவாத்மாக்கள் இடத்திலும் ;

    निज ............. தன் ,

    इच्छया एव ..... ஸங்கல்பத்தாலேயே ,

    निवेश्य .......... ஏற்படுத்தி ;

    पांचालिका ..... (அசேதனம் ஆன ) விளையாட்டுப் பதுமைக்கும் ,

    शुक ............. (சேதனம் ஆன ) கிளிக்கும் ;

    विभूषण ........ ஆபரணங்களையும் ,

    भोग ............. ஸுகங்களையும் ,

    दायी ............ அளிப்பவனான ;

    सम्राट् ........... சக்ரவர்த்தியைப் ,

    इव .............. போல ;

    त्वम् ............. நீ ,

    आत्म ............ தன்னைப் ,

    समया ........... போன்ற பிராட்டி ,

    सह .............. உடன் ,

    मोदसे ........... மகிழ்கிறாய் !

    🙏



    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :




    🙏

    * விளக்கொளி எம்பெருமானே !

    * அசேதனப் பொருட்களுக்கு , ஸத்துவம் , ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களை , ஏற்படுத்தி ; அந்த சேதனப் பொருட்களை , சேதனர் அனுபவிப்பதற்காகவே உள்ளனவாகச் செய்தாய் .

    * ஜீவாத்மாவை , அந்த சேதனப் பொருட்களை அனுபவிப்பவனாக செய்தாய் .

    * உதாரணமாய் பழம் என்ற அசேதனத்தை , சேதனர் உண்டு களிக்கிறான் .

    * அறிவற்ற பொருள் , அறிவுள்ள பிறர் , அனுபவிப்பதற்காகவே உள்ளது . இந்த வரையறை ஏற்படுத்தியதற்கு காரணம் யாது ? உன் ஸங்கல்பமே ஆகும் !

    * இப்படி அசேதனப் பொருட்களையும் , ஜீவாத்மாக்களையும் செய்து , பார்ப்பது , உனக்கு ஒரு லீலை ஆகிறது .

    * உலகில் , சக்கரவர்த்தியாய் உள்ளவன் , ஜடப்பொருளான , விளையாட்டுப் பதுமைக்கு , உயர்ந்த அணிகளைப் , பூட்டுகிறான் . சேதனமாய் உள்ள , கிளியை , வளர்த்து , அதற்கு பால் , பழம் , முதலிய போகங்களை கொடுக்கிறான் .

    * இங்ஙனம் செய்து , பதுமையையும் , கிளியையும் கண்டு , தன் மனைவியோடு களிப்பு அடைகிறான் .

    * அவ்வாறு , இந்த சேதன , அசேதனர்களின் செயலைக் கண்டு , எல்லா வகையிலும் , உனக்குச் சமமான பிராட்டியுடன், மகிழ்ந்து , நிற்கிறாய்.






    🙏



    Last edited by sridharv1946; 13-10-18, 07:57.
Working...
X