Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 21 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 21 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 21 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    ஸாதுக்கள் , த்யாநம் செய்து ; ஸமாதியை அடைந்து ; உன்னைக் , காண்கின்றனர் !


















    ��









    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��







    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��








    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:









    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��




    योग्यम् , यमै: च , नियमै: च , विधाय , चित्तम् ;

    सन्तो , जित - आसनतया , स्व , वश - आसु , वर्गा : |

    प्रत्याहृत - इन्द्रिय , गणा: ; स्थिर , धारणा: ; त्वाम् ;

    ध्यात्वा ; समाधि , युगलेन ; विलोकयन्ति ! ॥


    ��




    யோக்யம் , யமை: ச , நியமை: ச , விதாய , சித்தம் ;

    ஸந்தோ , ஜித - ஆஸநதயா , ஸ்வ , வஶ - ஆஸு , வர்க்கா: |

    ப்ரத்யாஹ்ருத - இந்த்ரிய , கணா: ; ஸ்த்திர , தாரணா: ; த்வாம் ;

    த்யாத்வா , ஸமாதி , யுகலேந ; விலோகயந்தி ! ||


    ��




    सन्त: ............. ஸாதுக்கள் ,

    यमै: च ............ யமங்களாலும் ,

    नियमै: च ......... நியமங்களாலும் ,

    चित्तम् ............. மனதை ,

    योग्यम् ............ (ஸமாதிக்கு) தகுந்ததாக ,

    विधाय ............ செய்து ;

    आसनतया ........ ஆஸனங்களைச்

    जित ............... செய்ததால் ;

    स्व ................. தமக்கு ,

    वश ................ வசப்பட்ட ,

    आसु ............... ப்ராண வாயுக்

    वर्गा : .............. கூட்டத்தை , உடையவர்களாகவும் ;

    प्रत्याहृत ........... அடக்கப்பட்ட ,

    इन्द्रिय ............. இந்த்ரியங்களின் ,

    गणा: .............. குழுவை உடையவர்களாகவும் ;

    स्थिर धारणा: ..... உன்னிடம் , மனதை , நிலை நிறுத்தியவர்களாகவும் ;

    ध्यात्वा ............ தியானம் செய்து ;

    युगलेन ............ இரு வகை ,

    समाधि ............ ஸமாதியால் ;

    त्वाम् .............. உன்னை ,

    विलोकयन्ति ...... நேரில், காண்கின்றனர் !


    ��




    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * விளக்கொளி எம்பெருமானே !

    * பக்தியோகத்தைச் , செய்வதற்கு வேண்டிய , ஞானத்தையும் , சக்தியையும் , உடைய பெரியவர்கள் , எட்டு அங்கங்களை உடையதான , பக்தியோகத்தைச் , செய்து , உன்னை அடைகின்றனர்.

    * அவர்கள் யமங்களையும் , நியமங்களையும் செய்கின்றனர் . அதனால் அவர்கள் மனத் தூய்மை பெறுகின்றனர் . அவர்களின் மனம் பக்தி யோகத்தைச் செய்யத் , தகுதி அடைகின்றனது.

    * பின்பு , அவர்கள் பல்வேறு ஆசனங்களைச் செய்து , ப்ராணன் , அபாநன் முதலிய வாயுக களைத் தம் வசம், ஆக்குகின்றனர் .

    * பின் , இந்திரியங்களை , உலக விஷயங்களிலிருந்து , திருப்பி அடக்குகின்றனர் .

    * பின்பு , உன் திருமேனியையே , மனத்தை நிலைநாட்டி , உன்னையே , தியானித்து , இதன் முதிர்ந்த நிலையான , ஸமாதியினால் , உன்னை நேரில் வந்தால் போன்ற நிலையை அடைகின்றனர் .

    * பக்தி யோகத்திற்கு எட்டு அங்கங்கள் உள்ளன அவையாவன :

    1 யமம் : அஹிம்ஸை , ஸத்யம் , திருடாமை , ப்ரஹ்ம சர்யம் , பொருளைச் சேர்க்க , முற்படாமை

    2. நியமம் : தூய்மை , உள்ளத்தைக் கொண்டு , திருப்தி அடைதல் , வ்ரதம் , தவம் முதலியன செய்தல். , வேதாந்த பரிசயம் செய்தல் .

    3. ஆஸனம் : பத்மாஸநம் , பத்ராஸநம் முதலியன.

    4. ப்ராணாயாமம் : சுவாஸத்தை அடக்குதல் .

    5. ப்ரத்யாஹாரம் : இந்த்ரியங்களை , உலக விஷயங்களிலிருந்து , திருப்புதல் .

    6. தாரணை: எம்பெருமானுடைய , திருமேனியையே , மனதில் , கொள்ளுதல் .

    7. த்யாநம் : இடைவிடாது , பகவானை , தியானித்தல் .

    8. ஸமாதி : அவ்வாறு , தியானித்து , நேரில் கண்டால் போன்ற நிலைமையை அடைதல். இந்த ஸமாதி அங்கியும் இருந்து , மற்ற ஏழையும் , தனக்கு அங்கமாகக் கொள்கிறது.

    * இந்த ஸமாதி , ஸவிகல்ப ஸமாதி என்றும் , நிர்விகல்ப ஸமாதி என்றும் இரு வகைப் படும் .

    * உள்ளத்தில் , திருமேனி , தோன்றிக் கொண்டிருக்கும் வரை , இடைவிடாது செய்யும் யோகம் ஸவிகல்ப ஸமாதி எனப்படும்.

    * திருமேனியும் மறைந்து , பகவத் ஸ்வரூபத்தையே , ப்ரத்யக்ஷமாகக் காண்பது போன்ற , நிலை , நிர்விகல்ப ஸமாதி எனப்படும்.

    * முதலிலேயே , நிர்விகல்ப ஸமாதி வருவது எளிதன்று . ஸவிகல்ப ஸமாதியால் , திருமேனியைக் கண்டு , பழகிப் பழகிப் , பிறகு , ஸ்வரூபத்தைக் காண்டலாகிய , நிர்விகல்ப ஸமாதியைப் பெற வேண்டும் .

    * த்யானம் என்பது , உள்ளத்தால் , நினைப்பது மட்டுமே , ஆகும் . அதனால் , நேரில் காண்டலாகிய , நிலையும் வரும்போது , அந்நிலை ஸமாதி எனப்படும் .

    * தியானத்தின் முதிர்ந்த நிலையே , ஸமாதி ஆகும் .




    ��








    Last edited by sridharv1946; 24-10-18, 10:23.
Working...
X