Atharvana veda - Mundakopanishad in tamil
Courtesy: http://temple.dinamalar.com/news_detail.php?id=44205
🌸வேதம் பயில்வோம்-பாகம்-28-அதர்வண வேதம்
-
முண்டக உபநிஷதம்:
-
அத்தியாயம்-2-மந்திரம்-2
-
யதா லேலாயதே ஹ்யர்ச்சி: ஸமித்தே ஹவ்யவாஹனே
ததாஸஸஜ்யபாகௌ அந்தரேணாஸஸஹுதீ: ப்ரதிபாதயேத் (2)
-
பொருள்
-
2. ஜொலித்துக்கொண்டிருக்கின்ற அக்கினியில் தீச்
சுவாலைகள் ஓங்கி எழும்போது இரண்டு பக்கங்
களுக்கு நடுவில் ஆஹுதிகளைச் சமர்ப்பிக்க
வேண்டும்.
-
யாகங்கள் வேதகாலத்தில் முக்கிய வழிபாட்டு முறையாக இருந்தன. மந்திரபூர்வமாக வளர்க்கப்பட்ட அக்கினியில் மந்திரபூர்வமாக அளிக்கப்படுகின்ற பொருட்கள் <உரியதேவர்களை அடையும் என்று நம்பப்பட்டது. சுவாலைகளுடன் நெருப்பு ஓங்கி எரியும்போது அதில் நெய், நைவேத்தியம் போன்ற ஆஹுதிப் பொருட்களை இட வேண்டும். சுவாலைகள் அடங்கிய பிறகு எதையும் சமர்ப்பிக்கக் கூடாது.
-
ஆஹுதிகளை எங்கே சமர்ப்பிப்பது? ஓங்கி எரியும் அக்கினியின் இடது மற்றும் வலது பாகங்களுக்கு நடுவில் சமர்ப்பிக்க வேண்டும். இது ஆவாப ஸ்தானம் எனப்படும்.
-
மந்திரம்-3-
-
அக்னி ஹோத்ரம்:


யஸ்யாக்னிஹோத்ரம் அதர்சம் அபௌர்ணமாஸம்
அசாதுர்மாஸ்யம் அனாக்ரயணம் அதிதிவர்ஜிதம் ச
அஹுதம் அவைச்வதேவம் அவிதினா ஹுதம்
ஆஸப்தமாம்ஸ்தஸ்ய லோகான் ஹினஸ்தி (3)
-
பொருள்
-
3. தர்சம், பூர்ணமாசம், சாதுர்மாஸ்யம், ஆக்கிர
யணம், வைசுவ தேவ கர்மம் ஆகிய கர்மங்கள்
இல்லாமலும், விருந்தினரை அழைக்காமலும், உரிய
முறையில் அல்லாமலும் ஒருவன் அக்னி ஹோத்ரம்
செய்தால் அவனுக்கு ஏழு உலகங்களிலும் அழிவே
மிஞ்சுகிறது.
-
வைதீக கர்மங்களுள் முக்கியமானது அக்னிஹோத்ரம். இல்லறத்தானின் தினசரிக் கடமைகளுள் இது ஒன்று. இந்த யாகம் காலையிலும் மாலையிலும் செய்யப்படுகிறது. அக்னி ஹோத்ர யாகத்துடன், இங்கே கூறப்பட்டுள்ள யாகங்களையும் சேர்த்து செய்வதால்தான் கடமை பூர்த்தியாகும் என்று இந்த மந்திரம் தெரிவிக்கிறது.
-
1.தர்சம்: அமாவாசையின் மறுநாள் செய்ய வேண்டிய யாகம்.


2.பூர்ணமாசம்: பௌர்ணமியின் மறுநாள் செய்ய வேண்டிய யாகம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
3.சாதுர்மாஸ்யம்: ஒவ்வொரு பருவ காலம் தொடங்கும் போதும், அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகின்ற யாகம். ஆனி, ஐப்பசி, மாசி மாத ஆரம்பங்களில் இந்த யாகம் செய்யப்படுகிறது.
-
4.ஆக்கிரயணம்: அறுவடைக் காலத்தில் செய்ய வேண்டிய யாகம்.


5.வைசுவ தேவம்: பறவை, மிருகம் முதலான உயிரினங்களுக்கு உணவளித்தல் இந்த யாகத்தின் ஓர் அங்கமாகும்.
-
அக்னி ஹோத்ரத்தை மேற்கொண்ட யாகங்களுடனும் நியதிகளுடனும் செய்யாதவனுடைய ஏழு உலகங்கள் அழிகின்றன. 1.பூலோகம், 2.புவர் லோகம், 3.சொர்க்க லோகம், 4.மஹர் லோகம், 5.ஜனலோகம், 6.தப லோகம், 7.சத்திய லோகம் என்பவை ஏழு உலகங்கள், கர்மங்களை உரிய முறைப்படி செய்யும்போது, அந்தந்தக் கர்மங்களின் பலனாக இந்த உலகங்களில் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கர்மங்களை உரிய முறைப்படி செய்யாதபோது அவற்றில் வாழும் பேற்றை ஒருவன் இழக்கிறான்.
-
மந்திரம்-4
-
அக்கினியின் ஏழு பண்புகள்:யாக குண்டத்தில் அக்கினியின் செந்நாக்குகள் கனன்றெழுந்து ஓங்கி எரியும் காட்சியை 1.2.2-இல் கண்டோம். இங்கே அந்த அக்கினியின் அழகு கூறப்படுகிறது.
-
காளீ கராளீ ச மனோஜவா ச
ஸுலோஹிதா யா ச ஸுதூம்ரவர்ணா
ஸ்ஃபுலிங்கினீ விச்வருசீ ச தேவீ
லேலாயமானா இதி ஸப்தஜிஹ்வா: (4)
-
பொருள்
-
4. காளீ, கராளீ, மனோஜவா, சுலோஹிதா,
சுதூம்ரவர்ணா, ஸ்ஃபுலிங்கினீ, விச்வருசீ ஆகிய ஏழும்
ஓங்கி எழுந்து பிரகாசத்துடன் எரிகின்ற அக்கினியின்
ஏழு நாக்குகள் ஆகும்.
-
அக்கினிக்கு ஏழு நாக்குகள். இவை உண்மையில் அக்கினியின் ஏழு பண்புகள். காளீ=கறுப்பு; கராளீ= பயங்கரம்; மனோஜவா= மனத்தைப்போல் வேகமானது; சுலோஹிதா= சிவப்பு; சுதூம்ரவர்ணா= புகையுடன் கூடியது; ஸ்ஃபுலிங்கினீ= நெருப்புப் பொறிகளுடன் கூடியது; விச்வருசீ தேவீ= அழகுடன் எங்கும் பரவுகின்ற ஒளி.
-
கறுப்பும் சிவப்புமாகிய நிறத்தில், புகையுடனும் நெருப்புப் பொறிகளுடனும் பயங்கரமாக எழுந்து, அழகுடன் ஓங்கி வளர்ந்து, மனத்தைப்போல் வேகமாக எங்கும் பரவக்கூடிய அக்கினியின் அழகு இங்கே கூறப்படுகிறது.
-
மந்திரம்-5
-
யாகங்களின்மூலம் போகங்கள்:
-
ஏதேஷு யச்சரதே ப்ராஜமானேஷு
யதாகாலம் சாஹுதயோ ஹ்யாததாயன்
தம் நயந்த்யேதா: ஸூர்யஸ்ய ரச்மயோ
யத்ர தேவானாம் பதிரேகோஸதிவாஸ: (5)
-
பொருள்
-
5. ஒளிர்கின்ற இந்த அக்கினி நாக்குகளில் உரிய
வேளையில் ஆஹுதிகளை அளித்து யார் கர்மங்கள்
செய்கிறானோ, அவனை அந்த ஆஹுதிகள், சூரிய
னின் கிரணங்கள்போல், ஒன்றேயான தேவர்களின்
தலைவன் வசிக்கின்ற இடத்திற்குக் கொண்டு
செல்கின்றன.
-
தேவர்களின் தலைவன் இந்திரன். பல்வேறு உலகங்களுக்குச் செல்வதற்கான யாகங்கள் இந்திரனையும், வருணன் போன்ற மற்ற தேவர்களையும் உத்தேசித்துச் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட தேவர்களுக்கு குறிப்பிட்ட அக்கினி நாக்குகளில் ஆஹுதிப் பொருட்களை அளிக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. யாகங்களில் சமர்ப்பிக்கப் படுபவற்றை அக்கினி தேவன் அந்தந்த தேவர்களிடம் கொண்டு சேர்க்கிறான். இதனாலேயே அக்கினி தேவன் புரோகிதன் எனப்படுகிறான்.(அக்னிம் ஈளே புரோஹிதம்- ரிக் வேதம், 1.1.1.)
பொருள்: புரோகிதனாகிய அக்கினியை வணங்குகிறேன்.
-
அக்கினி தேவன் அவற்றைத் தேவர்களிடம் எப்படிச் சேர்க்கிறான்?
-
சூரியனின் கிரணங்கள்போல் என்கிறது மந்திரம்.
-
மழை பொழிவதற்குக் காரணமாக இருக்கிறான் சூரியன். சூட்டினால் கடல்நீர் ஆவியாகி, மேலே சென்று மேகமாகி மழை பொழிகிறது. கடல்நீரை அப்படியே அவன் மேலே கொண்டு செல்வதில்லை. தனது கிரணங்கள் மூலம் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு செல்கிறான். அதுபோல், அக்கினி தேவனும் ஆஹுதிப் பொருட்களை அப்படியே கொண்டு செல்லாமல் சாராம்சத்தைத் தேவர்களிடம் சேர்க்கிறான்.
-
ஆஹுதிப் பொருட்களை மட்டுமல்ல, ஆஹுதிப் பொருட்களை அளித்து யாகம் செய்பவனையும், உரிய காலத்தில் இந்திர லோகத்தில் சேர்க்கிறான் அக்கினி தேவன். ஆஹுதிப் பொருட்களின் சாராம்சத்தைச் சுமந்து செல்வதுபோல், யாகம் செய்தவன் மரணமடைந்தபிறகு, அவனது நுண்ணுடலைத் தாங்கிச் சென்று இந்திர லோகத்தில் சேர்க்கிறான் அவன்.