லக்ஷம் மஞ்சள் தானம் செய்யும் முறை. முதலில் விநாயகர் பூஜை, 45 நாட்களுக்குள் லக்ஷம் மஞ்சள் தானம் செய்வதாக ஸங்கல்பம். கலச ஸ்தாபனம். ஒரு லிட்டர் தன்ணீர் கொள்ளும் அளவு உள்ள ஒரு பித்தளை சொம்பில் 10 ம் நம்பர் நூல் சுற்றி சந்தனம் குங்குமம் இட்டு தேங்காய் மாவிலை கொத்து, கூர்ச்சம் வைத்து சொம்பினுல் தண்ணீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய் போட்டு தரையில் கோலம் போட்டு அதன் மேல் ஒரு கிலோ கோதுமை பரப்பி, அதன் மேல் வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு கிலோ பச்சரிசி பரப்பி அதன் மேல் இந்த கலச சொம்பை வைக்கவும்.நான்கு சாஸ்திரிகள்//ப்ரோஹிதர் வரசொல்லி, லலிதா தேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து ருத்திரம், சமகம், புருஷ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸூக்தம். பாக்கிய ஸூக்தங்கள் சொல்லி அவர்களுக்கு சாப்பாடு, தக்ஷிணை கொடுத்து சமாராதனை மாதிரி செய்யவும்.நான்கு சுமங்கலி பெண்கள் வரசொல்லி இவர்களுக்கு கால்களில் நலங்கு இட்டு, வெற்றிலை. பாக்கு பழம், புஷ்பம், தக்ஷிணை, சீப்பு, கண்ணாடி,மஞ்சள் குங்குமம் , ரவிக்கை துண்டு, கண்மை, மருதானி பவுடர் கொடுத்து சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும்.லக்ஷம் மஞ்சள் கிழங்குகளை நூறு நூறாக ஆயிரம் பாக்கெட்டுகளில் அல்லது ஐநூறு ஐநூறாக இரு நூறு பாக்கெட்டுகள் செய்து கொண்டு 45 நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும். கொடுக்கும் போது ஒவ்வொருவருக்கும் , குங்குமம், வெற்றிலை பாக்கு, தக்ஷிணை, பழம், புஷ்பம் மஞ்சள் பாக்கெட்டுடன் கொடுத்து வரவும்.அவரவர் financial status க்கு தகுந்த மாதிரி செய்யலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends