Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம்3 அத்தியாயம் 20-21


    அத்தியாயம் 20
    நைமிசாரண்யத்து ரிஷிகள் சூதபௌராணிகரை நோக்கி,
    "பரமபக்தரான விதுரரும் தத்வவித்துக்களில் சிறந்தவரான மைத்ரேயரும் பரஸ்பரம் பேசிக்கொண்ட கங்காஜலம் போல பாவத்தைப் போக்கடிக்கிற ஸ்ரீ ஹரியின் கதைகளை எங்களுக்கு உரைப்பீராக." என்று கேட்க
    , சூதர் கூறலுற்றார்.
    . பகவானின் வராஹாவதாரத்தைக் கேட்டு சந்தோஷம் அடைந்த விதுரர் மரீசி முதலிய பிரஜாபதிகளும் ஸ்வாயம்புவ மனுவும் எவ்வாறு இவ்வுலகை ஸ்ருஷ்டி செய்தார்கள் என்று வினவ,
    மைத்ரேயர் கூறினார்
    பகவானிடம் இருந்து ஆரம்பஸ்ருஷ்டியான் மஹத் தத்துவம் முதலியன் பற்றி மறுபடியும் கூறிவிட்டு, அவருடைய நாபிக்கமலத்தில் இருந்து உண்டான பிரம்மா பிரஜாபதிகளையும் மனுவையும் ஸ்ருஷ்டிக்கும் முன்பு யக்ஷ , அசுரர்களையும்,கந்தர்வர்கள் பித்ருக்கள், ராக்ஷசர்களையும், சித்த்ட வித்யாதர், கின்னர கிம்புருஷர்களையும் ஸ்ருஷ்டித்தார்.


    பிறகு இந்த உலகத்தின் மக்களை சிருஷ்டிக்கும் பொருட்டு மனுக்களையும் ரிஷிகளையும் ஸ்ருஷ்டித்தார்.


    அத்தியாயம் 21
    இதைக்கேட்ட விதுரர் முன் சொன்ன ஸ்ருஷ்டியை விட வித்தியாசமான ( அதாவது ப்ரம்மாவின் உடலிலிருந்தே வந்த முன் ஸ்ருஷ்டிக்கும் மனு பிரஜாபதி இவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட ஆண் பெண் சேர்க்கையால் வந்த சிருஷ்டிக்கும் வேறுபாடு) மனித ஸ்ருஷ்டியைப் பற்றியும் ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தைப் பற்றியும் அறிய விரும்பினார்.
    மைத்ரேயர் கூறினார்.


    பிரம்மாவின் புத்திரரம் பத்து பிரஜாபதிகளுள் ஒருவரம் ஆன கர்தம பிரஜாபதி பிரம்மாவால் ப்ரஜோற்பத்தி செய்ய கட்டளையிடப்பட்டு, சரஸ்வதி நதிக்கரையில் பதினாயிரம் வருடம் தவம் செய்தார்,.
    பிறகு த்யானத்தினாலும் பக்தியாலும் ஹரியை வழிபட்டார். அப்போது கிருதயுகத்திற்கு ஏற்ற வேதச்வரூபனாகக் காட்சி அளித்தார்.


    சூர்யனைபோல காந்தியுடன், நீல , வெண்மை தாமரை மாலைகள் அணிந்து, சுருண்டகேசம் முன் நெற்றியை அலங்கரிக்க, கிரீட குண்டலங்கள் , சங்கு சக்ரம் இவை தரித்து, கையில் தாமரையுடன், பீதாம்பரம்அணிந்து, கருடன்மேல் ஸ்ரீதேவியும் கௌஸ்துபமும் மார்பில் துலங்க, பார்ப்பவர் மனம் கவரும் புன்னகையுடன் காட்சி அளித்தார் .
    அவரைக் கண்ட கர்தமர் ஆனந்தம் மேலிட்டு கீழே விழுந்து வணங்கி அவரைத் துதித்தார்.


    அதனால் ப்ரீதியடைந்த பகவான் அவர் தவம் செய்த நோக்கத்தை உணர்ந்தவராகக் கூறினார்.
    "உங்களைப் போன்ற உண்மை பக்தர்களின் கோரிக்கை நிறைவேறாமல் போகாது. பிரம்மபுத்திரரும், மங்களமான கீர்த்தியுடன் எழுகடலுடன் கூடிய இந்த பூமியை ஆள்கிற சக்ரவர்த்தியும் ஆனா ஸ்வாய்ம்புவ மனு பத்தினியாகிய சதரூபையுடன் உங்களைக் காண நாளை மறுநாள் வருவார். அழகியும் நல்ல நடத்தையும் உள்ள அவர் பெண்ணை தகுந்த பத்தினியை வேண்டும் உமக்குக் கொடுக்கப்போகிறார்.
    அவளுடன் சேர்ந்து ஒன்பது பெண்களைப் பெறுவீர். அவர்கள் ஒன்பது ப்ரஜாபதிகளை மணக்கப் போகிறார்கள்.
    நீரும் அவளுடன் க்ரஹஸ்ததர்மத்தில் என் கட்டளையை நிறைவேற்றி எல்லா கர்மபலனையும் எனக்கே அர்ப்பணம் செய்து என்னை அடையப்போகீறீர்.நானும் உங்கள் அம்சத்தால் உமது பத்தினியிடம் அவதரித்து சாங்க்ய சாஸ்திரத்தை உபதேசிக்கப் போகிறேன்." என்று கூறிவிட்டு பகவான் மறைந்து விட்டார்.


    கர்தமரும் பகவான் சொன்ன காலத்தை எதிர்பார்த்து பிந்துசரஸ் என்னுமிடத்தில் வசித்து வந்தார். ஸ்வாயம்புவ மனு பகவான் சொன்ன நாளில் தேரில் தன் மனைவியுடனும் மகளுடனும் வந்து சேர்ந்தார்.
    தன் ஆஸ்ரமத்துக்கு வந்து நமஸ்கரித்த அவரை ஆசீர்வதித்து அதிதி சத்காரம் செய்தார் கர்தமர். பிறகு கூறினார்.


    மகாராஜனே, நீங்கள் பகவானுடைய பாலனசக்தியின் வடிவாக சஞ்சாரம் செய்து சாதுக்களை ரட்சிக்கவும் துஷ்டர்களை தண்டிக்கவும் செய்கிறீர். நீங்கள் இங்கு வந்த காரணத்தைக் கேட்க விரும்புகிறேன். உங்கள் அபிப்பிராயப்படி நடக்கவும் சித்தமாயுள்ளேன். என்றார்
Working...
X