Announcement

Collapse
No announcement yet.

Mango leaf, betel leaf , banana tree - Why for auspicious occasions?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mango leaf, betel leaf , banana tree - Why for auspicious occasions?

    Mango leaf, betel leaf , banana tree - Why for auspicious occasions?
    காரணம் அறிவோமா..!!!
    அம்மா.. கட்டெறும்பா இருக்கு.. இந்த மாவிலைகளை எதுக்கு தான் பறிச்சு வீட்டுவாசல்ல கட்றிங்களோ??
    எல்லா வீட்லயும் பிளாஸ்டிக்ல விதவிதமா ஸ்டிக்கர்ஸ் இருக்கற தோரணம் கட்டி வச்சுருக்காங்க... கிரிஜா மாமியாத்துல சூப்பரா கோல்ட் கலர்ல இருக்கு.. நீங்க என்னடானா மரத்துல பறிச்சு அத அலம்பி கோர்த்து கட்றிங்க...
    அலுத்துக்கொண்ட விஷ்ணுவிடம்,
    காரணம் இல்லாம அம்மா செய்யல, கண்ணா.
    மனிதன் ஆக்ஷிஜனை சுவாசித்து, கார்பன்டை ஆக்ஸைடை விடறது போல, தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்திட்டு ஆக்சிஜனை வெளில விடும்....
    ஆமாம்மா.. படிச்சிருக்கேன்..
    இந்த மாவிலை இயற்கையிலேயே காற்றை சுத்தப்படுத்தும். மரத்துல இருந்து பறித்த பிறகும் கூட.... நாலு பேர் வந்து போற விஷேச இடங்களில், வீடுகள்ல இத கட்டிவைக்கும் பொழுது, அங்கே காற்றில் கலக்கும் மாசுக்களை கிரஹித்து ஏர் பொலுசனை குறைக்கும்.... இதே பிளாஸ்டிக் இலைகள்ல டஸ்ட் சேர்ந்து தும்மல் தான் வரும்.. இப்ப சொல்லு எத கட்டணும்?
    சூப்பர்மா.. நானே கட்டறேன்...
    சரி சரி.. அப்படியே வெத்தல பறிச்சுட்டு வரேன். உங்கப்பா வந்தப்பறம் வாழைப்பழம் வாங்கிண்டு வர சொல்லணும்...
    வெத்தல, பாக்கு, வாழைப்பழம்... இதெல்லாம் எதுக்குமா ??
    ((ஏய், வெத்தல போட்டா மாடு முட்டும்.. முன்னாடிலாம், சின்னப்பசங்ககிட்ட சொல்லுவாங்க..
    குழந்தைகள், சன்யாசிகள், கணவன்-மனைவியை இழந்தவர்கள் போடக்கூடாது.. இது காம உணர்வுகளை தூண்டும். அதுக்கு தான் முன்பெல்லாம் சாப்பாட்டுக்கு பிறகு, மனைவி கணவனுக்கு வெத்தல பாக்கு மடிச்சு தர்ற பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி அன்யோன்யம் கூடி குடும்பத்தில மகிழ்ச்சி நிலைக்கும். நான் நல்லா இருக்கேன்.. நீயும் சந்தோசமா இரு.. என்றே வெத்தல பாக்கு கொடுக்கும் பழக்கம் உண்டானது..
    இத உங்களுக்கு மட்டும் சொல்றேன்.))
    நம்ம உடம்பில வாதம் , கபம், பித்தம் மூணும் சரியாய் இல்லாதப்ப தான் வ்யாதிங்க வரும். வெத்தல, சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடறப்ப நமக்கு பல விட்டமின்ஸ் மினரல்ஸ் கிடைக்கறதோட இந்த மூன்றின்(வாதம்,பித்தம்,கபம்) பிரச்சனைகளும் சரி செய்யப்படுகிறது. கால்சிய குறைபாடு வராது. முன்பெல்லாம் முதியவர்களுக்கு மூட்டுவலி இல்லாத காரணம் புரிகிறதா?
    வெத்தல கொடில "இலை" மட்டுமே இருக்கும். காயோ, பூவோ, பழமோ வராது.. அதனால தான் அதுக்கு வெற்று இலை - வெற்றிலை என்று பேரு வந்தது.. என்றேன்..
    அதற்குள் வாழைப்பழமும் வாங்கிட்டு வர அடுக்க தொடங்கினேன்..
    ஏம்மா,, வாழைப்பழம் மட்டும் தான் கொடுக்கணுமா, எதுக்கு? வேற பழங்களுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்?
    எல்லா செடி கொடி மரமும் விதை போட்டா வளரும். பறவைகள் எச்சம், மிருகங்கள் கழிவில் வரும் கொட்டைகளின் மூலம் எங்க வேண்டுமானாலும் முளைக்கும்.. ஆனால் வாழை ??
    அது தான் புனிதமானது.
    வாழை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும்.
    முக்கியமாக வாழை மரத்தின் மோட்ச தத்துவம்..
    அதில இருந்து கிடைக்கும் பூ, காய், கனியில் இருந்து மரம் உருவாக முடியாது.
    எல்லா கர்மா பலன்களையும் கொடுத்துட்டு, கடைசில வாடி விடும்...
    நாமும் இதை போல, எல்லாவருக்கும் உதவியாக இருக்க வேண்டும். பாவ-புண்ணியங்களை கரைத்து கடைசில பகவானை அடைய வேண்டும் என்று உணர்த்தவே வாழை பழத்தை பயன்படுத்துகிறோம்.
    விஷேங்கள்ல கோவில், வீடு வாசல்களில் வாழை மரம் கட்டுவாங்க...
    அந்த காலத்துல தகவல் பரிமாற்றம் கடினம். வாழை மரம் கட்டியாச்சுன்னா அவுங்க வீட்ல நல்லது நடக்க போகுதுன்னு பாக்கற எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்க..
    அவுங்க வீட்ல வாழ வச்சுருக்காங்க.....
Working...
X