30-11-2018:--காலபைரவாஷ்டமி. சிவன் ஆலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் நிற்பவர்..பயத்தைபோக்குபவர் என்பதால் பைரவர் எனப்பெயர் .பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்கள்:-- கணபதி, முருகன், வீரபத்ரர், சாஸ்தா, பைரவர். எனப் படுவர்.அந்தகாசுரன் என்னும் அரக்கனை சம்ஹரிக்க , பரமேஸ்வரன் தன்னிடமிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து அறுபத்துநான்காகி அஸுரர்களை அழித்து தேவர்களுக்கு அமைதி வழங்கியது.. இதனால் தேவர்கள் மகிழ்ந்து 64 யோகினிகளை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.காலாஷ்டமீதீ விக்ஞேயா கார்திகஸ்ய ஸிதாஷ்டமி தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம்பூஜாம்மஹாஸம்பார விஸ்தரைஹி நரோ மார்க ஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத் ( ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429 ).கார்த்திக மாதத்திய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது காலபைரவாஷ்டமி எனப்பெயர்.இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் மிகவும் விரிவான முறையில் பல விதமான பொருட்களால் பைரவரை பூஜை செய்ய வேண்டும். இரவில் இவரது சரித்ரம் , ஸ்தோத்ரம் கேட்க வேண்டும். கண்விழித்திருக்க வேன்டும். நிவேத்யம்:- தயிர் சாதம், செவ்வாழைபழம் ; தேன்; அவல் பாயசம் முதலியன பூஜை முடிவில் சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும் .சிவனின் படத்தில் பைரவரை பூஜை செய்யலாம்.பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்கியம் மட்டுமாவது விடலாம்.பைரவார்க்கியம் க்ருஹாணேச பீம ரூப (அ) வ்யயாநக அநேநார்க்கிய ப்ரதானேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இதமர்க்கியம்.ஸஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்கியம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர. பைரவாய நம: இத மர்க்கியம்.புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநர் அர்க்கியம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ பைரவாய நம: இதமர்க்கியம்..ஒரு வருஷம் வரை ஒவ்வொரு க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியிலும் இம்மாதிரி செய்யும் மனிதர்களுக்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது.பய உணர்ச்சி, கடன் தொல்லை விலகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends