Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam adhyaya 25 skanda 3 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3-அத்தியாயம் 25
    தந்தை வனம் சென்ற பின் தாயாரின் சந்தோஷத்துக்காக கபிலர் பிந்து ஸரஸ்ஸிலேயே வசித்து வந்தார். அப்போது ஒரு நாள் தேவஹூதி பிரம்மாவின் வாக்கை நினைவில் கொண்டவளாய் கர்மபந்தமற்றவரும், தத்வ மார்கத்தின் முதல் ஆசார்யரும் ஆன கபிலரை நோக்கி கூறினாள்.


    " ஹே பிரபுவே இந்த்ரியங்களின் வசப்பட்டு கடும் இருளில் ஆழ்ந்து கிடந்த நான் இப்போது அவற்றின் வசத்தில் இருந்து விடுபட்டுள்ளேன்., ஆதிபுருஷராகிய தாங்கள் ஜனங்களின் அஞ்ஞான இருளை நீக்க சூரியன் போல் அவதரித்துள்ளீர்.


    தமது அடியார்களின் சம்சார வ்ருக்ஷத்துக்கு கோடரி போன்றவரும் , ஞானமார்கத்தின் தலைவரும் சரணடைவதற்கு ஏற்றவரும் ஆன உங்களை நான் சரணடைகிறேன்.பிரகிருதி புருஷ விவேகத்தைக் கூறியருள வேண்டும்."


    கபிலர் கூறினார்.
    "எந்த யோகத்தால் புருஷர்களுக்கு உலக சுகங்களிலும் துக்கங்களிலும் இருந்து நிவர்த்தி உண்டாகுமோ அந்த யோகம்தான் மோக்ஷத்திற்குக் காரணம். முன்காலத்தில் ரிஷிகளுக்கு உபதேசித்த அந்த யோகத்தை உனக்குக் கூறப்போகிறேன்.


    மனமே பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம். மூன்று குணங்களுக்கு வசமான மனம் சம்சார பந்தத்தில் கட்டுப்படுகிறது. அதே மனம் பகவானிடம் ஈடுபட்டால் விடுதலை அடைகிறது. நான் எனது என்ற உணர்வுதான் காமக்ரோதாதிகளுக்குக் காரணம். அது அகன்றுவிட்டால் சுகதுக்கங்கள் பாதிக்காது.


    அப்போது ஜீவன் பிரக்ருதியின் கட்டிலிருந்து விடுபடுகிறது. பிரம்மஞானத்தை அடைவதற்கு பக்தியை விட சிறந்த மார்க்கம் இல்லை.


    பிறகு ஞானி என்பவன் யார் என்று விளக்குகிறார்.


    சுகதுக்கங்களை பொறுப்பவனும், கருணை உள்ளவனும், எல்லா உயிர்களிடமும் நட்பு பூண்டவனும் , எதிரியற்றவனும், அமைதியானவனும், நல்ல குணங்கள் கொண்டவனும், என்னிடம் த்ருடபக்தி கொண்டவனும், எல்லா கர்மங்களையும் பந்தங்களையும் விட்டு எனக்கே ஆட்பட்டவனும், என் கதைகளை கேட்டு அவற்றை பரப்புபவனும், எந்தவித தாபங்களாலும் பாதிக்கப்படாதவனும், ஆனவனே உண்மையான ஞானியாவான்.


    அப்படிப்பட்ட சாதுக்களின் சங்கத்தில் மனதிற்கும் செவிக்கும் அம்ருதம் போன்ற என் கதைகளைக் கேட்பதன் மூலம் பக்தியானது வளர உலக பந்தத்தினின்று விடுபட்டு என்னை அடைய முடியும்."


    தேவஹூதி கூறினாள்.
    "எந்தவிதமான பக்தியால் உங்களை விரைவில் அடைய முடியும்? அதிலும் பெண்ணான எனக்கு எப்படிப்பட்ட பக்தி பொருத்தமானது? பகவானை லக்ஷியமாகக் கொண்ட, தத்வஞானத்தை அடையக்கூடிய எந்த யோகம் உங்களால் உபதேசிக்கப் பட்டதோ அது எத்தகையது? அதன் உட்பிரிவுகள் யாவை?கருணை கூர்ந்து மந்த புத்தியுடைய எனக்கும் விளங்கும்படி சொல்ல வேண்டும்."


    அதன் பிறகு கபிலர் சாங்கியயோகம், பக்தி யோகம் அஷ்டாங்க யோகம் இவைகளை விவரிக்க ஆரம்பித்தார்.


    பக்தி என்பது யாதெனில், விஷய சுகங்களில் ஈடுபட்ட இந்த்ரியங்களை ஒருமுகப்படுத்தி பகவானிடம் ஈடுபடச்செய்து, எந்த சுயநலமான எதிர்பார்ப்பும் இன்றி, திடமான சங்கல்பத்துடன் கூடிய மனப்பான்மையே பக்தி ஆகும் . அது முக்தியை விட சிறந்தது.


    அப்படிப்பட்ட பக்தியை உடையவர் என் சேவையும் நாம சங்கீர்த்தனமுமே பெரியது என எண்ணி முக்தியைக்கூட விரும்பார். ஆனாலும் என் உருவத்தையும் குணங்களையும் எண்ணி எண்ணிப் பரவசம் அடைந்த அவர்களுக்கு முக்தி தானாகவே வாய்க்கும். அஷ்டமாசித்திகளும் தானே வந்தடையும், வைகுண்டத்தில் என்னோடு இன்புற்றிருப்பார்.


    என்னுடைய காலச்சக்கரமானது அவர்களிடத்தில் செயலற்று விடும். என்னை ஆத்மாவாகவும், நண்பனாகவும், புத்திரனாகவும் குருவாகவும், இஷ்ட தெய்வமாகவும் இவ்வாறு மனதுக்குகந்தவனாகக் கருதும் அவர்கள் அமரத்வம் எய்தி என்னுடன் எப்போதும் இருப்பார்கள்.


    இகலோகம் மட்டும் இன்றி பரலோகத்திலும் பற்றற்று என்னை ஏகாந்த பக்தியுடன் பூஜிக்கின்றவர்களை நான் சம்சார ஸாகரத்தில் இருந்து கரையேற்றுகிறேன்.


    மத்பயாத் வாதி வாதோ அயம் சூர்யஸ்தபதி மத்பயாத்
    வர்ஷதீந்த்ரோ தஹ்த்யக்னி: ம்ருத்யு: சரதி மத்பயாத் ( ஸ்ரீமத்.பா. 3.25. 42)


    என்னிடம் உள்ள பயத்தால் வாயு வீசுகிறது. சூரியன் என்னிடம் பயத்தால் பிரகாசிக்கிறான். என்னிடம் உள்ள பயத்தால் இந்திரன் மழையை வர்ஷிக்கிறான்,அக்னி எரிகிறான், யமன் சஞ்சரிக்கிறான்.
    (கடோபநிஷத்-2.3.3- பயாத் தஸ்ய அக்னி: தபதி பயாத் தபதி சூர்ய: பாத் இந்த்ரஸ்ச வாயுஸ்ச மர்த்யு: தாவதி பஞ்சம


    ஞானத்துடனும் வைராக்யத்துடனும் கூடிய பக்தியோகத்தால் யோகிகள் என்னை வந்தடைகின்றனர். இவ்வுலகில் ஏகாக்ர சிந்தனையுடனும் நிலை வழுவாத பக்தியுடனும் என்னிடம் சமர்ப்பிக்கப் பட்ட மனதுடன் இருந்தால் அதுதான் மோக்ஷத்தின் உதயம்.
Working...
X