Announcement

Collapse
No announcement yet.

BOWMA CHATHURTHI.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BOWMA CHATHURTHI.

    பவிஷ்யோத்திர புராணம்--பெளம சதுர்த்தி. எந்த மாதத்தில் சுக்கில பட்ச சதுர்த்தி செவ்வாய் கிழமை யன்று வருகிறதோ அன்று இம்மாதிரி பூஜை செய்ய வேண்டும் எங்கிறது.11-12-2018. இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்தி செய்தார். அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம்.ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:இதன் பிறகு குளிக்க வேன்டும். .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்., கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும். அப்போதுஅடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும். பிறகு அக்னெள மூர்த்தெள என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்..
Working...
X