Announcement

Collapse
No announcement yet.

Kuzhaiyananda swamigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kuzhaiyananda swamigal

    Kuzhaiyananda swamigal
    ஸ்ரீ குழந்தையானந்தா ஸ்வாமிகள்.
    தெய்வத் திருமகன் -குழந்தையானந்தா சுவாமிகள் தரிசனம் :


    >> மதுரையை அடுத்த சமயநல்லூரில் 1627ல் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். இவர்கள் ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற் கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது.


    >> திரிபுர சுந்தரி மதுரைக்கு வந்து மீனாட்சி அன்னையிடம் மனமுருகி வேண்டினார் .. தாயே ..! எங்களுக்கு குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். வேண்டுதலின் பலனாக ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள் அன்னை . பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். இளைய குழந்தையை தாங்கள் வளர்த்தனர்.






    >> அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது...தாயாக, தந்தையாக, குருவாக இருந்து அன்னை மீனாட்சிதான் வளர்த்தாள் என்றே சொல்லலாம் .. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என்றே பக்தர்கள் அழைத்தனர்.


    >> ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன்.


    >> புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.





    >> ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுகிறார் .இம்மகான் 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது .. இவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.


    >> இம்மகான் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார்.


    >> இவர் ஒரு சமயம் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.


    >> மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


    >> திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார்.





    >> 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார்.


    >> 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.




    >> மதுரை காளவாசல் அருகே உள்ள இவரது சமாதி கோவிலில் அமர்ந்து தவம் செய்தோம் ..அருமையாக இருந்தது .வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே உள்ள அக்கிரகாரத்தில் இவரது கோவில் உள்ளது ஒருமுறை சென்று வாருங்கள் .இவரின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் ஆவார் ..இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார்..


    முருகானந்த சாமிகள் உடுமலை அருகே குமாரலிங்கம் :


    >> தெய்வத் திருமகன் -குழந்தையானந்தா சுவாமிகளின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார் ..குமாரலிங்கம் பஸ் ஸ்டாப்பில் முன்பு இப்பீடம் உள்ளது ...இங்கு நவநீத கிருஷ்ணன் எனும் சன்யாசி -(திருமணம் செய்து கொள்ளாதவர் ) பூஜை செய்து வருகிறார் ...எளிமையாக சித்தசுத்தியோடு பூஜை செய்கிறார் ..


    >> திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் பேருந்தில் ஏறி குமாரலிங்கத்தில் இறங்க வேண்டும் . அங்கு முருகானந்த சாமியார் மடம் என்று கேட்டால் சொல்வார்கள் ..உடுமலைப் பேட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் இருக்கும் ..ஆன்மீக அன்பர்கள் பௌர்ணமி,அமாவாசைக்கு அன்னதானம் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கி உதவலாம் ..அவருடைய செல் no -9150158980

  • #2
    Re: Kuzhaiyananda swamigal

    Respected Sir,Many many thanks for this excellent information and warm regards for sharing.Dasan Govindarajan.

    Comment

    Working...
    X