விரதங்கள் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது.--திதி பூஜை.தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடியவில்லை என்றால்இல்லறத்தார் என்னென்ன திதியில் என்னென்ன விரதம் உபவாஸம் இருந்தால் தேவர்களை த்ருப்திபடுத்தலாம் என்று சுனந்து முனிவர் கூறுகின்றார்.ப்ரதமை திதியில் பாலையும், த்விதியை திதியில் உப்பையும் தவிர்க்க வேன்டியது. த்ருதியை திதியில் எள்ளுஞ்சாதம் சாப்பிட வேண்டும்.சதுர்த்தியில் பால் ஆஹாரம், பஞ்சமியில் பழம், சஷ்டியில் காய், சப்தமியில் வில்வ ஆஹாரம் செய்ய வேண்டும்.அஷ்டமியன்று பொடி சாதம், நவமியன்று அக்னியில் சமைக்காத உணவு;தசமி அன்றும் ஏகாதசியன்றும் பால்; துவாதசியன்று கீரை; த்ரயோதசியன்று கோமியம், சதுர்தசியன்று பார்லி உணவும் சாப்பிட வேண்டும்.அமாவசையன்று ஹவிஸ்; பெளர்ணமியன்று தர்ப்பை புல்லில் நனைத்த ஜலமும் சாப்பிடவேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குறிய தேவதைகள் த்ருப்தி யடைகிறார்கள்.,இந்த விருதம் நான்கு வர்ணத்தாரும் செய்யலாம். இந்த விரதம் ஆண், பெண் எல்லோரும் செய்யலாம்..ஒரு பக்ஷம் இம்மாதிரி ஆகாரம் செய்தால் பத்து அஸ்வமேத யாக பலன் கிடைக்க பெறுகிறார்கள்.. நான்கு, மாதம், எட்டு மாதம், 12 மாதம் இவ்வாறு விரதம் இருந்தால் பல மந்வந்தரங்கள் சூரிய லோகத்தில் சுவர்க்க அநுபோகங்களை அநுபவிப்பான்.இந்த விரதத்தை அதாவது ஒவ்வொரு திதியிலும் திதி உபவாசம் எப்படி இருக்க வேண்டுமென்பது;-இந்த விரதத்தை ஐப்பசி நவமி; மாசி ஸப்தமி; வைகாசி த்ருதியை; கார்த்திகை பெளர்ணமியில் ஆரம்பித்தால் உத்தமம்.5-11-2019;13-03-2019;6-6-2019;11-12-2019.நீண்ட ஆயுள் கிடைக்கும். சூர்ய லோகத்தில் சுகமாக இருக்கலாம்.முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக இப்பிறவியில் விரதம், உபவாசம் ஆகியவைகளை செய்து , தானம் கொடுத்து , தர்ம வழியில்நடந்து , தாய், தந்தை, குரு ஆகியோருக்கு சேவை செய்து, விதிப்படி தீர்த்த யாத்திரை செய்து , அற வழியில் நீண்ட ஆயுள் கழித்த புண்ணிய பலனை மேலும் உயர்த்திக் கொண்டு மேலுலகில் நற்பதவி பெறுகிறான்.,இந்த உலகில் வாழும் போது எல்லா பொன் பொருள்களும், சிரேஷ்டமான உயர்ந்த மனைவி, நம்பிக்கையான வேலைகாரர்கள் ஆகியவை கிடைக்கும்.கடுமையான வ்யாதிகளிலிருந்து விடுபடுவர். பந்து ஜனங்களின் புகழும், , புத்திரன், பேரன்களை பார்த்து மகிழவும் முடியும்.இம்மாதிரி விரதம், உபவாசம், தானம் என்று செய்யாவிட்டால் ஒற்றை கண், குருடு, முடம், நொன்டி, ஊமை, படிப்புஅறிவின்மை தீராத நோய், தரித்திரம் ஆகியவைகளால் பாதிக்கபடுவர். .முதலில் பரமாத்மா சிருஷ்டிக்காக ஜலத்தை உற்பத்தி செய்தார். அதிலிருந்து ஒரு முட்டை(அண்டம்) உண்டாகி அதில் ப்ருஹ்மா தோன்றினார்.இதுதான் ப்ருஹ்மாண்டம். ப்ருஹ்மா அதை இரண்டாக பிளந்து ஒன்றில் பூமியையும் மற்றதில் ஆகாயத்தையும் செய்தார்.அதன் பின் திசைகள்., உப திசைகள். தெய்வம், அசுரன் என்று உற்பத்தி செய்தார்.எந்த திதியில் இதை உற்பத்தி செய்தாரோ அதுவே ப்ரதி பதா என்கிற ப்ரதமை திதியாயிற்று. . இதிலிருந்துதான் மற்ற திதிகள் உண்டாயின.ப்ரதமை விரதத்தை கார்த்திகை பெளர்ணமி; அல்லது மாசி ஸப்தமி அல்லது வைகாசி சுக்ல த்ருதியை முதல் தொடங்குவது விசேஷம். .இதற்கு முன்னால் வரும் சதுர்தசி அன்றே இந்த விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். .அன்று சாப்பிடலாம்.11-12-2019;13-3-2019;6-6-2019;அடுத்து அமாவாசையன்று மூன்று வேளை குளிக்க வேண்டும். ஆகாரம் கூடாது. காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்..விரதத்தை துவங்கும் நாளில் விடியற்காலையில் எழுந்து சிரேஷ்டமான அந்தணனை சந்தனம், தாம்பூலம்கொடுத்து மரியாதை செய்யவும். தேவையான அளவு பால் கொடுத்து குடிக்கச் சொல்லவும். அதன் பின் அவரை ஆசனத்தில் அமர்த்தி , ப்ருஹ்மாவாக மனசில் கருத வேண்டும்.“”ப்ருஹ்ம தேவரே எனக்கு காட்சி தர வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.. ப்ருஹ்மதேவரின் அருள் கிடைக்கும். அதன் பின் ப்ரதமை விரதமிருப்பவர் பசும் பால் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வருஷம்காயத்ரியுடன் விரதத்தை செய்து வருஷ கடைசியில் ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும்.இவ்வாறு விரதமிருப்பதால் எல்லா பாபமும் விலகும். ஆன்மா தூய்மை ஆகும். நீன்ட ஆயுளுடன் தர்மவானாகவும், தனவானாகவும், ஆரோக்கியமுள்ளவராகவும் எல்லாபோகங்களையும் அநுபவிப்பராகவும் இருப்பார். விண்ணுலகில் தேவதைகளுக்கு சமமாக கருதபடுவார்..அதன் பின் சத்ய யுகத்தில் பத்து பிறவிகள் வாழ்வாங்கு வாழ்வார்.இந்த விரத மிருப்பதால் அந்தணர் அல்லாதவரும் அந்தணராகி விடுவர்.விசுவாமித்ரர் இந்த விரதமிருந்த பிறகு தான் ப்ருஹ்ம ரிஷி எனப்பெயர் பெற்றார்.ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு மறுநாள் ப்ருஹ்மாவை 16 உபசார பூஜை செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தபின் பெளர்ணமியன்றுப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும். அதன் பின் சங்கம், மணி, பேரி, வாத்யம் முதலியவற்றால் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.வெள்ளை நிற பசுவின் பஞ்சகவ்யத்தாலும், தர்ப்பை ஜலத்தாலும் ப்ருஹ்மாவிற்கு ப்ருஹ்ம ஸ்நானம் செய்விக்க வேண்டும்..கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று ப்ருஹ்மாவின் ரத யாத்திரை துவங்க வேண்டும்.. அருகில் காயத்ரி அமர்ந்திருக்க ப்ருஹ்மா மாந்தோல் ஆஸனத்தில் அலங்காரமாக காக்ஷி அளிப்பார்.12-12-2019முன்னும் பின்னும் வேத கோஷம், வாத்யம் முழங்க பவனி வர வேண்டும் .ப்ருஹ்மாவின் விக்கிரஹம் அருஹில் ஒரு வேத விற்பன்னர் பூஜை செய்து மக்களுக்கு ப்ரசாதம் வழங்க அமர்ந்திருக்க வேண்டும்இரவு நிலைக்கு திரும்ப வேண்டும். ரதம் ஓட்டி வந்தவர்களுக்கும், வாத்ய கோஷ்டி ; வேத விற்பன்னர்களுக்கும் அன்னம், பானம், சன்மானம் கொடுக்க வேண்டும்.ஜன்மாந்திரங்களில் செய்த பாவங்கள் தொலையும்.27-11-2019. மார்க்கசிரம் சுக்ல பக்ஷ ப்ரதமையில் பகலில் சாப்பிடாமல் இரவில் விஷ்ணு பூஜை செய்து சாப்பிட வேண்டும்.. நக்ன விரதம் என்றால் பகலில் சாப்பிடாமல் இரவில் சாப்பிடுவது.த்விதீய திதி விரதம்.28-11-2019 to be contd.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends