த்விதீய திதி விரதம்.28-11-2019இந்த த்விதீய விரதத்தால் அஸ்வினி குமாரர்களுக்கு தேவர் குல அங்கீகாரமும் ஆவிர்பாகமும் கிடைத்தன. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்விதியை அன்று துவங்கி ஒரு வருடம் காலம் கழித்து பூஜை முடித்து பிராம்ணருக்கு பொன்னால் ஆன தாமரையை தானம் செய்தால் மேலுலகில் பல கற்ப காலங்கள் வாழ்ந்து விட்டு பூமியில் ராஜாவாக பிறக்கலாம்..இந்த வருடம் 16-9-2019 அன்று வரும் அசூன்ய ஸயன வ்ருதம் .. ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று துவங்க வேண்டும். இதனால் பெண்கள் விதவை ஆகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி பிரியாமல் வாழ முடியும்.பள்ளி கொண்ட பெருமாளையும் அவரது மனைவியையும் பூஜை செய்து பின் வரும் துதியை சொல்ல வேண்டும்.ஶ்ரீ வத்ஸ தாரீ ஶ்ரீ காந்த ஶ்ரீ வத்ஸ ஶ்ரீ பதே அவ்யயகார்ஹஸ்த்யம் மா ப்ரணாசம் மே பாது தர்மார்த்த காமதம்.காவஸ்ச மா ப்ரணஸ்யந்து மா ப்ரணஸ்யந்து மே ஜனா:ஜாமயோ மா ப்ரணஸ்யந்து மத்தோ தாம்பத்ய பேததஹலக்ஷ்ம்யா வியுஜ்யே அஹம் தேவ ந கதாசித் அதா பவான்ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்லக்ஷ்ம்யா ந சூன்யம் வரத யதாதே சயனம் சதாசய்யா மமாப்ய சூன்யஸ்து ததா தே மதுஸுதன.இவ்வாறு மஹா விஷ்ணுவிடம் வேண்டிகொண்டு அவரை எப்போதும் ப்ரியாத மஹா லக்ஷ்மியையும் வேண்டி பூஜைசெய்தால் நிரந்தரமான பிரிவில்லாத படுக்கை சுகம் கிடைக்கும்.காய்ந்து போன மிகவும் பழுத்த, கனிந்த பழம் நிவேத்யம் செய்ய க்கூடாது.பேரீச்சை, மாதுளை, அத்தி பழங்கள், இளநீர் மஹாவிஷ்ணுவிற்கு பிடிக்கும்.எப்படி மஹா லக்ஷ்மி இல்லாத படுக்கை மஹா விஷ்ணுவிற்க்கு கிடையாதோ அதைபோல சோபை அற்ற படுக்கை வேண்டாம். லக்ஷ்மிகரமான மனைவி பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஸகலமும் கிடைக்கும்.திருதியை வ்ரதம்.: அக்ஷய த்ருதியை மற்றும் ரம்பா த்ருதியை. 07-05-2019 ; 06-06-2019பெண்கள் எவ்வகையில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவ்வகையில் பெண்களுக்கு உதவ கூடியது திருதியை வ்ரதம்.எக்காரணம் கொண்டும் உப்பு சேர்க்க கூடாது.இந்த உபவாசத்தை ஆயுள் பூராவும் செய்தால் ரூபம், லாவண்யம், செளபாக்கியம் அனைத்தும் பெறுகிறார்கள்..கன்னி பெண்கள் இந்த விரதம் அநுஷ்டித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.தங்கத்தில் கெளரியின் உருவத்தை செய்து ஒருமனப்பாட்டுடன் கெளரி பூஜை செய்ய வேண்டும். இரவு உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். அதன் பிறகு சம நிலையாக படுக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்தணருக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணையும் தர வேண்டும்.இம்மாதிரி நியமப்படி பூஜை செய்யும் கன்னிகை உன்னதமான பதியை அடைவாள். நீண்ட காலம் போக போக்கியங்களை அநுபவித்து கடைசியில் தன் கணவருடன் உத்தம லோகத்தை அடைவாள்.விதவை இந்த விரதத்தை செய்தால் மேல் லோகத்தில் தன் பதியுடன் சேர்வாள். அவருடன் நீண்ட காலம் கணவன் மனைவியாக வாழ்வாள்.இந்த்ராணி இந்த பூஜை செய்து ஜயந்தனை பெற்றாள். அருந்ததி இந்த பூஜை செய்து வசிஷ்டருடன் வானத்தில் ஸப்த ரிஷி மண்டலத்தில் அமர்ந்தாள்.ரோஹிணி இந்த பூஜை செய்து சந்திரனின் அன்பு காதல் மனைவியாக வாழும் வாய்ப்பை பெற்றாள்.வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் இப்பூஜை செய்வது உத்தமம்.மாசி மாதம் செய்யும் த்ருதியை பூஜைக்கு பின் உப்பு, வெல்லம், இரண்டையும் தானம் செய்தால் ஆண், பெண் இருவருக்கும் மிக மதிப்பை கொடுக்கும். நல்லது.9-3-2019;6-6-2019;1-10-2019.புரட்டாசி மாத த்ருதியை வ்ருதத்தின் போது வெல்ல அப்பம் நிவேத்யம் செய்திடல் வேண்டும். மாசி த்ருதியையின் போது கொழுக்கட்டை மற்றும் சொர்ண தானம், செய்திடல் வேண்டும்.வைகாசி மாத த்ருதியையின் போது சந்தனம் கலந்த நீரையும், கொழுக்கட்டையையும் நைவேத்யம் செய்தால் எல்லா தேவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.வைகாசி மாத த்ருதியை அக்ஷய த்ருதியை என அழைக்கபடுகிறது. இன்று சாப்பாடு, ஜலம், வஸ்த்ரம். தங்கம் தானம் செய்தால் குறைவில்லா பல நன்மைகள் உண்டாகும்.. இன்று உபவாசம் இருப்பவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் ஏராளமாக கிடைக்கும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends