Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 4 adhyaya 5,6 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 4- அத்தியாயம் 5, 6(முதல் பாகம்)


    அத்தியாயம் 5


    தக்ஷப்ரஜாபதியால் அவமதிக்கப்பட்டு சதி உயிரை விட்டதும் தன் கணங்கள் விரட்டப்பட்டதும் அறிந்து மகாதேவன் கடும்கோபம் அடைந்தார். மின்னல் போன்ற ஒலியுடனும் நெருப்பு போன்ற தீயுடனும் ஜ்வலித்து தன் தலையில் இருந்து ஒரு ஜடையை எடுத்து கோபத்துடன் தரையில் வீசினார்.


    அதிலிருந்து வீரபத்ரர் வானளாவிய உருவத்துடனும் , கருமேகம்போல் கருத்த மேனியுடனும், ஆயிரம் கைகளுடனும், சூரியனைப் போன்ற மூன்று கண்களுடனும், கோரைப் பற்களுடனும், நெருப்பென ஜ்வலிக்கும் கேசத்துடனும் , மண்டை ஓட்டு மாலை அணிந்து தோன்றினார்.


    கட்டிய கைகளுடன் மகாதேவனை தனக்கு என்ன பணி என்று கேட்க அதற்கு பகவான் ருத்ரர் தக்ஷ யாகத்தையும் தக்ஷனையும் அழிக்குமாறு கூறி, அவரைத் தன் பிரதம சேனைத்தலைவர் என்றும் தன்னுடைய அம்சம் என்றும் கூறினார்.
    பிறகு வீரபத்ரர் மகாதேவனை வணங்கி பயங்கரமான வீர முழக்கத்துடனும் பூதகணங்களுடனும் புறப்பட்டார்.


    அப்போது யாகசாலையில் குழுமி இருந்தவர்கள் தூரத்தில் சூறாவளி போன்ற தூசிப்படலத்தைக் கண்டு பயந்தனர். மக்கள் அது தக்ஷன் சதியை அவமதித்து அவள் உயிர்விடக் காரணமாக இருந்ததன் பலனோ என்று சந்தேகித்து, எதிர்க்க முடியாத வீரியம் உள்ளவரும், பொறுக்கமுடியாத கோபம் நிறைந்தவரும் நக்ஷத்திரங்களையும் சிதறடிக்கும் வல்லமை பொருந்தியவரும் ஆன ருத்ரனுக்கு கோபம் வந்தால் பிரம்மதேவனே எதிர்த்து நிற்க முடியாதே எனப் பலவாறு நினைத்து அச்சம் கொண்டனர்.


    அப்போது யாகசாலை ருத்ரகணங்களால் சூழப்பட்டது, அவர்கள் அங்கு இருந்த எல்லாவற்றையும் நாசம் செய்தனர். தேவர்களும் முனிவர்களும் கூட அவர்களிடமிருந்து தப்ப இயலவில்லை. மகாதேவனை அவமதித்தவர் எவராயினும் அவர்கள் அவ்வளவு பேரையும் வீர்பத்ரர் தண்டித்தார். தக்ஷனின் தலையை யாகப்பசுவைப்போல் வெட்டி யாகாக்னியில் எறிந்தார்.


    அத்தியாயம் 6
    பிரம்மாவும் நாராயணனும் நடக்கப்போவதை அறிந்தும் மகாதேவனுக்கு பாகம் அளிக்காததாலும் அந்த யாகத்திற்கு வரவில்லை.


    ரித்விக்குகளும் தேவர்களும் எல்லா அங்கமும் வெட்டுண்டவர்களாய் பிரம்மதேவரை அணுகி நிகழ்ந்ததை எல்லாம் தெரிவித்தனர். பிரம்மதேவர் சிவனுக்கு பாகம் இல்லாமல் செய்யப்பட்ட யாகத்தில் பங்கு கொண்டதால் அவர்கள் அனைவரும் தவறிழைத்தவர்கள் என்றும் அந்த சிவனையே சரணமடைவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறினார். பிறகு அவரை முன்னிட்டுக்கொண்டு அனைவரும் கைலாய மலையை அடைந்தனர்.


    அடுத்து கைலாய மலையும், அழகாபுரியும், சௌகந்திகவனமும் அதற்கப்பால் யோகத்தில் அமர்ந்திருந்த மகாதேவன் தோற்றமும் வர்ணிக்கப்படுகின்றன,
Working...
X