ஸப்தமி திதி;--ஸூர்யன்.சப்தமி திதி சூரியனுக்கு மிகவும் பிடித்தமான திதி. உலகில் படைப்பை உருவாக்க ப்ருஹ்மா தன்னுடைய உடலை ஆண் பெண் என இரு கூறுகளாக்கி கொண்டார். அதில் ஆண் பாதி ஸ்வாயம்புவ மனு என்றும்பெண் பாதி சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். .அதே சமயம் தன் மனதின் மூலம் பத்து மகன்களை உருவாக்கி அவர்கள் ப்ரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்க வேண்டும் என க்கருதினார். அவர்கள் அதனால்ப்ரஜா பதிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தட்சனும் ஒருவன்.. தட்சனுக்கு நிறைய பெண்கள் இருந்தனர். அதில் திதி அதிதி என்பவர்களை காஸ்யப ப்ரஜாபதிக்கு மணம் செய்வித்தான்.அதிதிக்கு பிறந்தவனே ஆதித்யன். .. அதிதி காச்யபர் திருமணமானப் பின் ஒரு முட்டை (அண்டம்). உண்டாயிற்று. பல நாள் ஆனப் பின்னும் எந்த உயிர் ஜீவனும் அந்த முட்டையிலிருந்து வெளி வரவில்லை. ஆனால்காஸ்யபரோ அந்த முட்டை(அண்டம்) இறக்கவில்லை (மிருதா) என்று சொன்னார். ஒரு நாள் முட்டையை உடைத்துக்கொண்டு சூரியன் பிறந்தான். மிருதா அண்டம் என்ற இரு வார்த்தைகளை உள்ளடக்கி அவன் பெயரைமார்த்தாண்டன் என தந்தை அழைத்தார்..அதிதியின் பிள்ளை ஆதித்யன்.,கதிரவன், பகலவன், பரிதி சூரியன்.. தேவ சிற்பி விச்வகர்மா மகள் சம்க்ஞா. .சூரியன் மனைவி ஆனாள் இவர்களுக்கு யமன், யமுனா, சாவர்னிமனு ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.சம்க்ஞாவால் சூரிய பேரொளி தாங்க முடியவில்லை. அதனால் தன் நிழலைக்கொண்டு தன்னை போலவே உள்ள சாயா என்ற பெண்ணை உருவாக்கினாள்.சூரியனுக்கும் சாயாவுக்கும் க்ருதசர்வா, ச்ருதகர்மா, தப்தி என்ற குழந்தைகள் பிறந்தனர். . ச்ருத கர்மா தான் பின்னால் சனி கிரஹமாக மாறினதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. க்ருதசர்வா சாவர்ணிமனுவாக வளர்ந்ததாக கூறுகிறது.ஒரு நாள் யமுனைக்கும் தப்திக்கும் தகராறு ஏற்பட்டது. நீ நதியாக போ என இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டனர்.. தேவ சிற்பி யான விஸ்வகர்மா தன்னிடமுள்ள கடசல் கருவியினால் சூரியனின் தேவையற்ற உபரி சக்தியை செதுக்கி எடுத்து விட்டார்..சூரியனின் வெப்பம் குறைந்தது. வனப்பகுதிகளில் பெண் குதிரையாக சுற்றிகொண்டிருந்த சம்க்ஞா தேவியிடம் சூரியன் ஆண் குதிரையாக வடிவெடுத்து சென்றார். இப்போது இருவருக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி தேவர்கள். . இவர்கள் தேவ லோக மருத்துவர்களானார்கள்..மஹா பாரத கதையின் படி நகுல சகாதேவர்களின் தந்தையர் அசுவினி தேவர்கள்..சூரியனும் சம்க்ஞாவும் சூரிய மண்டலத்திற்கு திரும்பியது ஸப்தமி திதிதான். ஆதலால் சூரியனுக்கு சப்தமி திதி மிகவும் பிடிக்கும்.. இப்போது இங்கு பிறந்தவன் ரேவந்தன். . இவன் குஹ்யர்கள் ராஜ்ய மன்ன னாவான்.பஞ்சமி திதியில் ஒரு வேளை ஆகாரம் சாப்பீட்டு சஷ்டியன்று உபவாசமிருந்து சப்தமியன்று முதலில் உபவாசமிருந்து அதன் பின் காய்கறிகள், பஞ்ச பட்ச பரமான்னங்களை சூரியனுக்கு நிவேத்யம் செய்து ,ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போட்டு இரவில் மெளன விரதத்துடன்சூர்யனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுகிறானோ அவன் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறான். சூர்ய லோகத்தில் பல மன்வந்த்ரம் வாழ்வான். பிறகு பூமியில் சக்கிரவர்த்தியாக வாழ்வான்.மனதில் நினைத்ததை எல்லாம் கொடுக்க கூடிய திதிகள்:- த்ருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, நவமி… மாசி ஸப்தமி, ஐப்பசி நவமி, புரட்டாசி சஷ்டி, மாத பஞ்சமி இவைகள் விசேஷ பலன் தருபவை.13-3-2019;4-10-2019;5-11-2019. கார்திகை சுக்ல பக்ஷ ஸப்தமியில் ஸப்தமி வ்ருதம் இருப்பதை துவக்கலாம். உத்தமமான பிராமணருக்கு நல்ல கனிகளை தானமாக கொடுக்க வேண்டும். 4-12-2019...ராத்திரியில் தவமிருப்பவர் காய் கறிகளையே சாப்பிடவேண்டும்.இந்த வ்ருதத்தை நான்கு மாதங்கள் அனுசரிக்க வேண்டும். பாரணை இருக்க வேண்டும். பஞ்ச கவ்யத்தால் சூரிய பகவானை ஸ்நானம் செய்விக்க வேண்டும். அதன் பின் தானும் சாப்பிட வேண்டும்.முதல் மாதம் குங்குமப்பூ , சந்தனம், , புஷ்பம், பழம், பாயசம், தூப தீப நைவேத்யங்கள். ஆகியவைகளுடன் பூஜை செய்ய வேண்டும் .ப்ராமணருக்கு அதே மாதிரி சாப்பாடு போடவேண்டும்.இரண்டாம் மாதம் ஜலத்தில் தர்பையை போட்டு அதை சூரிய பகவானுக்கு உணவாக கொடுக்க வேண்டும். பல புஷ்பங்கள், காய் கறிகள், வெல்ல அப்பம் நைவேத்தியம். காய்ச்சிய பால், அரளி பூ, குங்குலிய தூபம், தயிர் சாதம் போன்றவைகளால் சூரியனை பூஜை செய்ய வேண்டும். புராணிகருக்கு வஸ்த்ரம், அலங்கார பொருள் கொடுத்து புராணங்கள் சொல்ல செய்ய வேண்டும் .சிகப்பு சந்தனம், அரளிப்பூ, குங்குலிய தீபம்,; கொழுக்கட்டை, பாயசம் நைவேத்யம்.பால், தாமிர பாத்ரம், புராண கிரந்தங்கள், பெளராணிகர் ஆகியவை சூரியனுக்கு ப்ரீதியானவை. சாக ஸப்தமி வ்ருதம் சூர்ய பகவானுக்கு மிகவும் இஷ்டம். .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends