ஆவணி க்ருஷ்ண பக்ஷ பஞ்சமியன்று வீட்டு முற்றத்தில் வேப்பிலையால், மனசார, தேவியை பூஜை செய்வது மிக உத்தமம், ஏகாதசி விரதம் இவைகளை விட சிறப்பு வாய்ந்தது.19-08-2019ஜமதக்னி முனிவர் சூரியனை மிரட்டினார். உலக நன்மைக்காக நீ வெப்பத்தை காட்டினாலும் அதனால் ஏற்படும் தாபம் போக என்ன வழி என்று சூரியனைக் கேட்டார். சூரியன் காலுக்கு செறுப்பும் தலைக்கு குடையும்அணிந்து கொண்டு செல்ல வேண்டும் எனச்சொன்னார் .சூரியனே ஜமதக்னி முனிவருக்கு குடையும் செறுப்பும் கொடுத்தார்.. குடை செறுப்பு தானம் செய்பவர் ஸ்வர்க்கம் செல்வர் என சூரியன் திரு வாய் மலர்ந்து அருளினார்.ஸப்தமி விருதத்தை உத்தராயணத்தில் சுக்கில பக்ஷ ஞாயிற்றுகிழமைகளில் துவங்க வேண்டும்.. எல்லா பாபங்களையும் இந்த வ்ருதம் போக்கடிக்கும்.5-5-2019ஞாயிற்றுகிழமை ப்ரதமை திதி முதல் ஸப்தமி வரை எருக்கு இலையை கொண்டு சூரியனை பூஜிக்க வேண்டும். .ப்ரதமை முதல் ஸப்தமி வரை உபவாசம் இருக்க வேண்டும். அர்ச்சனை செய்த அந்த எருக்கம்இலைகளையே உண்ண வேண்டும். முதல் நாள் ஒரு எருக்கு இலை. இரண்டாம் நாள் இரண்டு எரூக்கு இலை. மூன்றாம் நாள் மூன்று ; நான்காம் நாள் 4 இலை; 5ம் நாள் 5 இலை. 6ம் நா 6 இலை. 7ம் நாள் 7எருக்கு இலைகள் அர்ச்சனைக்கு…. இவைகளையே சாப்பிட வேண்டும்இரண்டாம் மாதம் ப்ரதமை முதல் ஸப்தமி வரை மேற்சொன்ன வகையில் மாசிப்பச்சை இலைகளால் அர்ச்சனை செய்து அந்த இலைகளையே சாப்பிடவும். முதல் மாதம் செய்த மாதிரியே மற்ற மாதங்களும் செய்யவும்.மூன்றாம் மாதம் வேப்பிலையை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்..நான்காம் மாதம் பழத்தை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும். ஐந்தாம் மாதம் பாகம் செய்யாத ஆகாரத்தை உபயோகிக்கவும்.ஆறாவது மாதம் எதயுமே சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய வேண்டிய இலைகளை எடுத்து வந்து ஒரு புது குடத்தில் போட்டு ஒரு புருஷனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து செல்லப்பட்டு திரும்பவும் கொண்டு வரப்பட்டுஅவற்றால் பூஜை செய்ய வேண்டும் .இரவும் பகலும் கண் விழித்து பகவானை தியானிக்க வேண்டும். இவ்வாறு எவன் ஏழு ஸப்தமிகளில் நியமத்தோடு விரதம் இருக்கிறானோ அவனுக்கு எல்லா பாபங்களும் நீங்கி விடும்.எருக்கு இலைகளால் அர்ச்சனை செய்தால் பணம் பெருகும். மாசிபச்சை இலைகளால் அர்ச்சனை செய்தால் விருப்பமானவரோடு சிநேகம் உண்டாகும்.வேப்பிலையால் அர்ச்சனை செய்தால் வியாதி விலகும் .பழங்களால் அர்ச்சித்தால் உத்தமமான குழந்தைகள் பிறக்கும்.பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணை தர வேண்டும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும்.ஸப்தமி விரதத்தில் எவனொருவன் எந்தெந்த பொருட்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறானோ அந்தந்த பொருட்கள் அவனுக்கு பல மடங்கு பெருகும்..பனிரெண்டு சுக்ல ஸப்தமிகளில் எவன் பசுஞ்சாணியை உட்கொண்டு பூஜிகிறானோ அவன் அளவற்ற பலன் அடைவான் .கஞ்சி மட்டும் குடித்தும், பால் மாத்திரம் சாப்பிட்டும், உலர்ந்த சருகு மாத்திரம் சாப்பிட்டும்,ஒரு வேளை ஆகாரம் மட்டும் சாப்பிட்டுகொண்டும், ஜலத்தை மட்டுமே அருந்தியும், பிச்சை எடுத்து சாப்பிட்டு இருந்தும் இந்த ஸப்தமி விரதம் ஆண்/ பெண் இரு பாலாரும் இருக்கலாம். அவரவர் சக்திக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஆராதனை செய்ய வேண்டும்.பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில் சூரிய மண்டலம் வரைந்து அதில் ஆவாஹனம் செய்யலாம்.. ஆகாசத்தில் ப்ரகாசிக்கும் சூரிய பிம்பத்திலும், அக்னி, ஜலம், ப்ரதி பிம்பம், யந்திரம், தங்கம் அல்லது செப்பு பாத்திரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்..ஆல மரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்.சூரியனுக்கு ஒவ்வொரு உபசாரம் செய்யும் போதும் நமஸ்காரம் செய்யலாம்.ஸப்தமி வ்ருதம் இருந்து பூஜை செய்பவர்கள் சூரியனுக்கு இருபத்து நான்கு உபசாரங்கள் செய்ய வேண்டும்.அந்தந்த உபசாரத்திற்கு சொல்லப்பட்டுள்ள மந்திரங்களை பக்தியோடு சொல்லி பூஜிக்கவும்.முதல் உபசாரம்;1. ஆவாஹனம்:-- நிர்குண ஸ்வரூபியும், நிஷ்கல மானவருமான சூர்யனை ஸகுண ஸ்வரூபியாக பிம்பத்தில் ஸான்னித்யம் கொள்ளுமாறு மந்திரம் சொல்லி அழைப்பது.2.ஆசனமளித்து அதில் உட்காருமாறு வேண்டுவது. ஸ்தாபனம்.3.வேறு இடங்களுக்கு போகாமல் அந்த ஆசனத்திலேயே அமர வைப்பது ரோதனம்.4. சூரியனை ஒருமனத்தோடு தியானிப்பது ஸான்னித்யம்.5,கால்களில் ஜலம் விட்டு அலம்புவது பாத்யம்.6.தாமிர பாத்திரத்தில் சந்தனம் கலந்த ஜலத்தில் வாசனை பூக்கள் போட்டு இரண்டு முழங்கால்களால் நடந்து சூரியனுக்கு ஜலம் அளிப்பது அர்க்கியம்.7. பால்,தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிருதம், தேன், பழச்சாறு, வாசனை பவுடர், சுத்த நீராலும், அபிஷேகம் செய்வது ஸ்நானம்.8.சந்தனம், குங்குமம் திலகமிடுவது அக்ஷதை போடுவது சந்தனம் உபசாரம்.9. அழகிய வஸ்த்ரம் சூரியனுக்கு சார்த்தி அலங்கரிப்பது வஸ்த்ரம் என்ற உபசாரம். 10.மலர் மாலை சாற்றி பாதங்களில் மலர் தூவுவது புஷ்பம் என்ற உபசாரம்.11.ஆபரணங்கள் அணிவிப்பது ஆபரணம் என்ற உபசாரம்12.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் புகை போடுவது தூபம் என்ற உபசாரம்.13.நெய்யிட்ட திரியை ஏற்றி சூரியனுக்கு அலங்காரமாக காட்டுவது தீபம்.சூரிய பூஜைக்கு குறைந்த பக்ஷம் அறுபது விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இதற்கு மேலும் ஏற்றலாம்.14. சூரியனுக்கு அங்க பூஜை அங்கங்கள் பெயர் சொல்லி அந்தந்த அங்கங்களில் அர்ச்சனை செய்வது. அங்க பூஜை.15.சூரியனுக்கு நிவேதனம் செய்து பரிவார தேவதைகளுக்கு பலி போடுவது.16. மறுபடியும் சந்தன ஜலத்தால் அர்க்கியம் தருதல்.17.சூரிய ஜபம் செய்வது.18.முத்திரைகளால் தேகத்தை தேவதா மயமாக்கி கொள்வது நியாசம் எனும் உபசாரம்.19.மந்திர ஸ்லோகங்களால் துதி செய்வது ஸ்தோத்ரம் எனும் உபசாரம்.20. அக்னி குண்டத்தில் ஹோமம் செய்வது ஹோமம் என்ற உபசாரம்21.பூஜை செய்ததனால் ஏற்படக்கூடிய பலன்கள் தனக்கு சித்தியாக வேண்டும் என ப்ரார்திப்பது ஸம்ஹாரம் என்ற உபசாரம்.22சூரியனின் கை கால்களை அலம்பி விடுவது சுத்த பாதம் என்ற உபசாரம்23. பகவானை த்ருப்தி படுத்துவதற்காக விசிறி, பாட்டு, நடனம் முதலியன செய்வது விஹாரணம் என்னும் உபசாரம்.24. சூரியனை யதாஸ்தானம் செய்வது விஸர்ஜனம் எனும் உபசாரம்.மூல மந்திரங்களை கூறி இருபத்து நான்கு உபசாரங்களையும் செய்ய வேண்டும். விஸர்ஜனம் செய்து ஹோமம் முடிந்த பிறகு சிறிது புஷ்பம்,,ஹோம பஸ்பம் ஆகியவற்றை வடக்கு திக்கில் வைக்க வேண்டும்,இதற்கு நிஹோரம் என்று பெயர். பிறகு ஸாஷ்டாங்கமாக சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும். உத்தமமான பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும்.சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயர் கூறி பூஜை செய்ய வேண்டும்.. சித்திரை மாதம் அம்சுமான் என்ற பெயரிலும், வைகாசி மாதம் தாதா என்ற பெயரிலும், ஆனியில்- இந்திரன், ஆடியில் ரவி, ஆவணியில்கபஸ்தி, புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் சுவர்ண ரேதஸ்; கார்த்திகையில் துவஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதத்தில் விஷ்ணு; மாசி மாதம் அருணன் ; பங்குனியில் சூரியன் என்ற பெயர் சூட்டி சூரியனை பூஜிக்க வேண்டும்.சூரியனின் தேரில் உள்ள மற்ற தேவதைகளையும் விதிப்படி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு தேவதைகளையும் பூஜிக்க தனி தனி பூஜா முறைகள் உள்ளன.சூரியனை சாயா தேவி சுவர்ச்ச லாம்பா வுடன் தாமரை மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் அருணன், குதிரைகளயும் பூஜிக்க வேன்டும்.நியமத்தோடு சூரியனை சப்தமியிலோ அல்லது ஞாயிற்றுகிழமையிலோ விதிப்படி ஆராதிப்பவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், தேஜஸ், கீர்த்திபுத்ர பெளத்ரர்கள் அடைவர்.,ஸப்தமிக்கு முதல் நாளான சஷ்டி முதலே பிரயாணம், காம விஹாரமின்மை; மயக்க வஸ்துக்களை சாப்பிடாதிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்; எண்ணைய் ஸ்நானம் செய்யாதிருத்தல், ,வீட்டுக்கு விலக்கான பெண்களுடன் பேசாமல், அவர்கள் பொருட்களை தொடாமலும் , பொய் பேசாதிருத்தல் போன்ற நியமங்களை கை கொள்ள வேண்டும்.சூரிய மந்திரம் அல்லது தீக்ஷை இல்லாதவர் சூரியனை பூஜை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் வியாதி வரும்.. குரு உபதேசம் பெற்று பிறகு பூஜிக்க வேண்டும்.மானஸீக புஷ்ப பூஜை:--- ப்ரதிஷ்டை செய்த லிங்கத்தை வாசனையுள்ள பூக்களால் பூஜிப்பது போல இருதயத்தில் உள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் எவை?அஹிம்சை எனப்படும் உடல், வாக்கு, மனம், ஆகிய முக்கரணங்களாலும் யாருக்கும் எந்த ஹிம்சையும் செய்யதிருத்தல் முதல் புஷ்பம்.இந்திரிய ஜயம்:---கண், காது, மூக்கு, வாய், மனம் என்கின்ற ஐந்து இந்திரியங்களையும் அடக்கி ஒரு நிலை படுத்த வேண்டும். இது 2ஆவது புஷ்பம்.தேகத்துக்கோ மனதுக்கோ துன்பம் வந்தால் தைரியமாக ஏற்க வேண்டும். ,தைரியம் 3ஆவது புஷ்பம்.பிறர் செய்யும் தீங்கை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும்.அதை பொருட்படுத்தாதே. பொறுமை 4ஆவது புஷ்பம்.சுத்தமான மனம், வாக்கு, தேகம் எப்போதும் இருக்க வேண்டும். களங்கம், அசுத்தம் இல்லாத ஈடுபாடு தேவை. ஸெளசம் எனும் சுத்தியே 5ஆவது பூ.கோபம் வந்தாலும், கோபத்தை பிறர் தூண்டினாலும்,கோபபட கூடாது.கோபமின்மை ஆறாவது புஷ்பம்.செயலிலும், எண்ணத்திலும், பேச்சிலும் தர்மமாக இருக்க வேண்டும். அதர்மம் செய்யாமல் இருப்பதே ஹரீ என்னும் ஏழாவது புஷ்பம்.ஸத்யம் எட்டாவது புஷ்பம்.. பேச்சிலும், செயலிலும், எண்ணத்திலும் ஸத்யமாக இருக்க வேண்டும்.இம்மாதிரி இருதயத்திலுள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் விதிக்கப்பட்டுள்ளன.நாள் தோறும் எவன் இந்த மானஸீக புஷ்பங்களால் ஜபம், ஹோமம் செய்து பகவானை பூஜிக்கிறானோ அவன் அக்ஞானம் என்னும் இருளிலிருந்து வெளிப்பட்டு சுஷும்னா நாடி வழியாக தலையை பேதித்துக் கொண்டு பகவானை அடைகிறான். .பிராணாயாமத்தால் இந்திரியங்களை அடக்க வேண்டும் .தியானம் முதலிய உபசாரங்களாலும் பகவானை பூஜிக்க வேன்டும். இதனால் அகங்காரம் அழியும் .நான் என்னுடையது என்ற அகங்காரம் நீங்க வேண்டும்.நமது கண்கள்—சூரியன்; நாக்கே வருணன்; மூக்கே பூமி ;இந்த சரீரம் அக்கினியும் வாயுவுமாகும் .கர்மேந்திரியங்களே இந்திரன் .நமது உடலில் விஷ்ணு இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ஆதலால் விஷ்ணு போக்தா.பாபங்களின் இருப்பிடம் அபானம் ஆகும்.. மனமே ஜீவாத்மா. இவ்வாறு தியானித்து உபாசிப்பது உயர்ந்த மானஸீக பூஜை எனப்படுகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends