Kambar & Auvaiyar - Interesting cheyyuls by them
தமிழ் புலவர்கள் J.K SIVAN
காசுக்கு கம்பன் கூழுக்கு ஒளவை
தமிழ் என்றால் 12ம் நூற்றாண்டு கம்பரின் பெயர் நெஞ்சில் இனிக்கும். கம்பர் ஒளவையார் இருவரின் தமிழுமே அலாதி இனிமை கொண்டவை. ஒப்புமை அற்றவை. நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். எந்த கலாசாலையில், எவ்வளவு காலம் படித்தார்கள்? யாரை முன்னோடியாக கொண்டார்கள்? அவர்களுக்கு யாராவது பிரத்யேகமாக தமிழ் கற்று கொடுத்தார்களா? எப்படி சார் இப்படி?
கம்பன் நாவில் சரஸ்வதி குடியிருந்தாள் . ராஜாக்கள் ஆதரித்தார்கள். ஒரு சிலநேரம் ராஜா கம்பனிடம் கொஞ்சம் முறைத்து கொள்வான். அது அவன் ராஜா என்பதால். நம்மைப்போல் இருந்தால் அடிவருடி அவன் சொன்னதை எல்லாம் கேட்போம். கம்பன் அப்படியல்ல. அவனுக்கும் கோபம் வரும். அவன் கோபமே தனி அழகு. பாடலாக வரும்.


''ஹே ,கம்பா, நீ என்னை நம்பி பிழைப்பவன். என் ராஜ்யத்தில் தான் உனக்கு சோறு. ஞாபகம் இருக்கட்டும்'' என்பது போல் ஒருவேளை சோழ ராஜா கோபமாக சொல்லி இருப்பானோ?


''ராஜா, ஏதோ தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். மன்னித்து விடுங்கள்'' என்று மற்ற கவிராயர்களாக இருந்தால் கெஞ்சி இருப்பார்கள். கம்பன் அப்படியில்லையே. பொட்டில் அடித்தாற்போல ஒரு நாலுவரி....

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
''போடா சோழா... நீயெல்லாம் ஒரு ராஜாவா? இந்த சோழநாடு மட்டும் தான் வளமான நாடா? இங்கே இல்லையென்றால் மற்ற இடங்களில் சோறு கிடைக்காதா? வேறே எங்கேயும் தமிழ் பிடிக்காதா? ஏண்டா நீ கொடுக்கும் பரிசுக்கும் , சோற்றுக்குமா நான் இத்தனை காலம் தமிழ் கற்றுக்கொண்டு பாடினேன்? ஏண்டா எனக்கு உன்னைவிட்டால் வேறு யாரும் ஆதரவளிக்க கிடையாது என்ற எண்ணமா ? கம்பர் சோழனிடம் இப்போது இல்லையாமே என்று செயதி காற்றில் பரவினால் அடுத்த கணமே இங்கே வாருங்கள் என்னிடம் வாருங்கள் என்று போட்டா போட்டுக்கொண்டு எத்தனை ராஜாக்கள் வரிசையில் நிற்பார்கள் தெரியுமா? சுருக்கமாக சொல்வதானால் குலோத்துங்க சோழா, யோசித்துப்பார் கம்பு ஒன்று கிடைத்தால் வேண்டாம் என்று எந்த குரங்காவது தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு போகுமா? இந்த ''கம்பன்'' கிடைத்தால் எந்த ராஜாவது வேண்டாமென்று சொல்வானா?


எப்படி பார்த்தீர்களா கம்பனின் தமிழ் பெருமை?எவ்வளவு அழகாக கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பாதை விளக்குகிறார்.
இது தான் கம்பன்:


''மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் என்னை
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு''


அதே காலத்தில் இருந்த ஒளவையும் இதே உணர்வில் எழுதிய ஒரு பாடலை ருசிப்போம்:


நாம் ஒரு கிராம் தங்கம் கிடைத்தால் அதை ''பொன்னே'' போல் போற்றி ரொம்ப ஒஸ்தியாக மதிக்கிறோம். பரம்பரையாக கோடியில் புரளும் ஒரு பிரபுவுக்கு தங்கம் ஒரு துரும்பு மாதிரி. யுத்தகளத்தில் போர் புரியும் வீராதி வீரனுக்கு உயிரோ, மரணமோ, ஒரு துரும்பு. அவ்வளவு தான் அதற்கு மதிப்பு. முற்றும் துறந்த ஞானிக்கு பெண் என்பவள் ஒரு துரும்பு. சிறந்த கல்வியறிவு கொண்ட பண்டிதனுக்கு ராஜா என்பவன் ஒரு துரும்புக்கு சமானம்.


போந்த உதாரனுக்குப் பொன்துரும்பு , சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறுதுரும்பு ஆய்ந்த
அறிவோர்க்கு நாரிய ரும்துரும்பாம் இல்லத்
துறவியர்க்கு வேந்தன் துரும்பு.


நேரம் கிடைத்தபோதெல்லாம் தமிழ் பக்கங்கள் புரட்டுவோமா?