Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 23 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 23 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 23 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா




    உன்னை த்யாநிக்கும் யோகிகள் , தாபங்களை , அனுபவிப்பதில்லை !



    ��










    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    मान - अतिलंघि ; सुख , बोध , महा - अम्बुराशौ ;

    मग्ना: ; त्रि , सीम , रहिते ; भवत: , स्वरूपे ।

    ताप , त्रयेण , विहतिम् ; न भजन्ति ! , सन्त: ;

    संसार , कर्म , जनितेन ; समाधिमन्त: ॥


    ��


    மாந - அதிலங்கி ; ஸுக , போத , மஹா - அம்புராஶௌ ;

    மக்நா: ; த்ரி , ஸீம , ரஹிதே ; பவத: , ஸ்வரூபே |

    தாப - த்ரயேண , விஹதிம் ; ந பஜந்தி ! ஸந்த: ;

    ஸம்ஸார , கர்ம , ஜநிதேந ; ஸமாதிமந்த: ||


    ��



    मान .............. எல்லையில் ,

    अतिलंघि ........ அடங்காத ;

    सुख .............. ஆனந்தத்துக்கும் ,

    बोध ............... ஞானத்துக்கும் ,

    महा ............... பெரிய ,

    अम्बुराशौ ........ கடலாக உள்ளதும் ;

    त्रि ................. மூன்று ,

    सीम .…........... எல்லை ,

    रहिते .............. இல்லாததும் ஆன ;

    भवत: ............. உனது ,

    स्वरूपे ............ ஸ்வ ரூபத்தில் ;

    मग्ना: ............ ஆழ்ந்தவர்களான ,

    समाधिमन्त : ..... பக்தி யோகத்தைச் , செய்தவர்கள் ;

    सन्त: .............. ஞானிகள் ,

    संसार ............. ஸம்ஸாரம் ஆகிய ,

    कर्म ............... கோடையால் ;

    जनितेन ........... உண்டான ,

    त्रयेण ............. மூன்று ,

    ताप ............... தாபங்களால் ;

    विहतिम् .......... துன்பத்தை ,

    न भजन्ति ........ அடைவதில்லை !



    ��
    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசாசார்யரின் விளக்கவுரை :



    ��


    * விளக்கொளி எம்பெருமானே !

    * யோகம் செய்பவர்கள் , உன் திவ்யாத்ம ஸ்வரூபத்தைத் , தியாநிக்கின்றனர்.

    * உன் திருமேனியை , இலக்காகக் கொள்ளாமல் , ஸ்வரூபத்தை மட்டும் பற்றிய , இந்தத் , தியானம் , 'நிராலம்பன யோகம்' எனப்படும்.

    * உன் ஆத்ம ஸ்வரூபம் , அளவற்ற ஞானத்திற்கும் , ஆநந்தத்திற்கும் , ஒரு பெரும் கடலாய் விளங்குகிறது.

    * இதைத் தேசத்தால் , வரையறுக்க முடியாது . காலத்தால் , அளக்க முடியாது. வஸ்துவால் மதிக்க முடியாது. இந்த மூன்று எல்லைகளுக்கும் அடங்காதது .

    * உன் ஸ்வரூபம் , எல்லா இடத்திலும் இருப்பது. எல்லாக் காலத்திலும் இருப்பது. எல்லா வஸ்துவாகவும் இருப்பது.

    * இத்தகைய , உன் திவ்யாத்ம ஸ்வரூபத்தில், ஆழ்ந்து நிற்கும் , யோகிகள் , கோடைக் காலத்தில் , வெப்பத்தால் துன்புறுபவன் , கடலுள் மூழ்கித் , தாபம் நீங்கப் பெறுவது போல் , ஸம்ஸாரத்தில் உள்ள , மூன்று தாபங்களும் , பின்னும் தொடராது , கழியப் பெற்று , மோக்ஷத்தை அடைகின்றனர்.

    * மூன்று எல்லைகள்:

    1. தேசத்தால் வரையறுத்தல் : இன்ன இடத்திலேயே இருக்கிறான் என்னுதல்.

    2. காலத்தால் அளவிடல் : இன்ன காலத்தில் மட்டுமே,உள்ளவன் , என்னுதல்.

    3. வஸ்துவால் அளவிடல் : இன்ன வஸ்துவாகத் தான் இருக்கிறான் , என்னுதல் .

    * மூன்று தாபங்கள்:

    1. ஆத்யாத்மிகம் : சரீரத்தைப் பற்றி வரும் , தலை நோய், ஜல தோஷம் , முமலியனவும் , மனத்தைப் பற்றி வரும் , ஆசை , கோபம் , பயம் முதலியனவும் .

    2. ஆதி பௌதிகம் : மிருகம் , பட்சி , மனித வர்க்கம் முதலிய பூதங்களால் வரும் துன்பம்.

    3. ஆதி தைவிகம் : குளிர் , சூடு , காற்று , மழை முதலியவற்றால் , தெய்வீகமாக வரும் துன்பம்




    ��

    Last edited by sridharv1946; 28-12-18, 10:31.
Working...
X