சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"


(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு ...............................அருளிய சம்பவம்)


நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)
தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்


ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.


அந்த வரிசையில நிற்கற சமயத்துலயே அவரோட கண்ணுலேர்ந்து வழிஞ்சுண்டு இருந்த நீர், அவர் ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்கார்ங்கறதை உணர்த்தித்து. வழக்கமா, யாராவது பெரிய சங்கடத்தோட வந்திருக்கான்னு தெரிஞ்சா, மகாபெரியவா அதை தானாவே உணர்ந்து, அவாளைக் கூப்பிடச் சொல்லி முன்கூட்டியே தரிசனம் தந்து அவாளுக்கு ஆறுதலோ, ஆலோசனையோ சொல்லி அனுப்புவார்.அதே மாதிரி, இவரையும் ஆசார்யா கூப்பிடுவார்னு வழக்கமா வர்றவா பலரும் நினைச்சா. ஆனா,அப்படி எதுவும் நடக்கலை.


வரிசை நகர்ந்து தன்னோட முறை வந்து மகாபெரியவா முன்னால போய் நின்னதும், அதுவரைக்கும் சத்தம் இல்லாம அழுதுண்டு இருந்தவர்,வாய்விட்டுக் கதறி, 'ஓ'வென்னு அழ
ஆரம்பிச்சுட்டார்.,சில நிமிஷத்துக்கு அப்புறம்.


"பெரியவா...நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்.. என்னோட கிட்னி ரெண்டும் சரியா வேலை செய்யலைன்னு டாக்டரெல்லாம் சொல்றா. ஆறேழு மாசமா மருந்தெல்லாம் எடுத்துக்கறேன் .ஆனா, ஒரு துளி முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் மோசமாகிண்டுதான் இருக்குன்னு சொல்றா.. எனக்கு என்ன பண்ண்றதுன்னே தெரியலை.. அதான் இங்கே ஓடி வந்திருக்கேன்...!" தழுதழுப்பா சொன்னார்.


"ஓஹோ...ஒனக்குப் பிரச்னை வந்ததுக்கு அப்புறம்தான் நல்லதெல்லாம் ஞாபகத்துக்கு வருதோ?" வழக்கமா கஷ்டம் பிரச்னைன்னு வர்றவாகிட்டே கொஞ்சம் ஆறுதலா பேசக் கூடிய மகாபெரியவா, அவர்கிட்டே ஏதோ கொஞ்சம் கடுமையாவே பேசினார்


வந்தவர்,கையைப் பிசைஞ்சுண்டு எதுவும் பேசாம தலைகுனிஞ்சு நிற்க ஆசார்யாளே பேசத் தொடங்கினார்.


"தானம்,தர்மம்,நல்ல காரியங்கள். இதெல்லாம் அந்தக் காலத்துல பலரும் பண்ணிண்டு இருந்தா . நாடும்,அவா அவா குடும்பமும் செழிப்பா இருந்தது.எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சுது.சுபிட்சமும் நிலவித்து. ஆனா இப்போ,முன்னோர்கள் என்னவோ முட்டாள்தனமா செலவு பண்ணிட்டதா நெனைச்சுண்டு அவா செஞ்ச தர்ம காரியத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டா இந்தத் தலைமுறைக்காரா.


எப்போ தர்ம காரியங்களைத் தடுத்து நிறுத்தறோமோ அப்பவே இந்த மாதிரி சங்கடமெல்லாம் தலைதூக்கறதுக்கு நாமளே வழி செஞ்சு விட்டுடறோம். அதெல்லாம் வந்ததுக்கு அப்புறம் வந்துடுத்தே வந்துடுத்தேன்னு பிராயச்சித்தம் தேடறோம்!" கொஞ்சம் கடுமையாகவே சொன்னார் ,மகாபெரியவா


வந்தவர் அப்படியே மகாபெரியவர் திருவடியில விழுந்தார்.


".என்னை மன்னிச்சுடுங்கோப்பெரியவா. என்னோட முன்னோர்கள் மாசத்துக்கு ஒருதரம் அன்னதானம் செய்யறதையும், நிரந்தரமா தண்ணீர்ப் பந்தல் வைக்கறதையும் வழக்கமா வைச்சிருந்தா. அதுக்காக தனியா இடமெல்லாம் கூட இருந்தது. நான் பாவீ! அதெல்லாம் வீண் விரயம்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு,அந்த இடத்தையும் வித்துட்டேன்..! அந்தப் பாவம்தான் போல இருக்கு எனக்கு. இப்படி ஒரு தீராக் கஷ்டம் வந்துடுத்து...!" சொன்னவர் வாய்விட்டுக் கதறி அழுதார்.


ஒரு சில நிமிஷத்துக்கு அப்புறம்,"பெரியவா, நான் நிறுத்தின எல்லாத்தையும் மறுபடியும் ஆரம்பிச்சுடறேன். எனக்கு நீங்க ஆசிர்வாதம் மட்டும் பண்ணினாலே போதும்.இந்த கிட்னி
பிரச்னையை எனக்கு கிடைச்ச தண்டனையா ஏத்துக்கறேன்!: தழுதழுக்கச் சொன்னார்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அன்பே வடிவான தெய்வம் யாரையாவது தண்டிக்க நினைக்குமா என்ன? அது நினைப்பதெல்லாம் தவறை உணரணும் என்பதைத்தானே..! தவறை உணர்ந்தாலே மன்னிப்பு அருளும் மகத்தானது அல்லவா தெய்வம்! வந்தவரை மன்னிச்சுட்டதுக்கு அடையாளமா வாத்ஸல்யமா பார்த்தார் மகாபெரியவா.


"நாட்டு மருந்துக் கடையில வசம்புன்னு ஒரு மருந்து விற்பா... பிள்ளைவளர்ப்பான்னு அதுக்கு சூசகமான பேரு உண்டு. சந்தனக் கல்லுல உரைச்சு, தினமும் உன் தொப்புளைச் சுத்திப் போட்டுக்கோ..!" சொன்ன பெரியவா, ஆசிர்வதிச்சு அவரை அனுப்பினார்.


பத்துப் பதினைஞ்சு நாள் கழிஞ்சிருக்கும் .ரொம்ப சந்தோஷமா வந்தார் அந்த பக்தர் .ஆசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.


"பெரியவா,நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன்.நேத்திக்கு என்னை பரிசோதிச்ச டாக்டர்கள், 'சிறுநீரகத்துல எந்தக் குறையுமே இல்லை.இது என்ன அதிசயம்!'னு கேட்கறா... 'சாட்சாத் சம்புவாகவே (சிவபெருமான்) நடமாடிண்டு இருக்கற மகாபெரியவா சொன்ன வசம்பு வைத்தியம்!னு சொன்னேன்..!" சொல்லித் தழுதழுத்தார்.


"நானெல்லாம் ஒண்ணும் பண்ணலை. ஒன் முன்னோர் பண்ணின தர்மகார்யத்தோட புண்ணியம் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு. இனிமேலாவது அதையெல்லாம் விடாம பண்ணு க்ஷேமமா இருப்பே..!" ஆசிர்வாதம் பண்ணின ஆசார்யாளோட குரல், அங்கே இருந்தவா எல்லாருக்கும் கடவுளோட குரலாகவே ஒலிச்சுது!.