Srimad Bhagavatam skanda 4 adhyaya 26,27 in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம்4- அத்தியாயம்26/27


அத்தியாயம் 26


புரஞ்சனன் ஒருசமயம் பஞ்சப்ரஸ்தம் என்னும் வனத்திற்கு அவனுடைய ஐந்து குதிரைகள் பூட்டிய வேகமாகச் செல்லக்கூடிய ரதத்தில் ஏறி வேட்டையாடப் புறப்பட்டான்.( ஐந்து குதிரைகள் ஐந்து ஞானேந்த்ரியங்கள் , ரதம் என்பது ஸ்வப்ன சரீரம்)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அந்த ரதமானது இரண்டு தண்டுகளையும் ( நான், எனது என்னும் உணர்வுகள்) , இரண்டு சக்கரங்களையும், (பாபம் , புண்யம்) ஒரு அச்சையும் ( ப்ரக்ருதி) , மூன்று கொடிகளையும், ( மூன்று குணங்கள் ), ஐந்து இணைப்புகளையும் (பஞ்ச பிராணன்), உடையதாக இருந்தது.


ஒரு கடிவாளம், ( மனம்), ஒரு சாரதி, (புத்தி), ஒரு இருக்கையுடன், (ஹ்ருதயம்), இரு நுகத்தடி, ( சுகம் துக்கம்), ஐந்து சர இலக்குகள், ( நுகரும் பொருள்கள் sense objects), ஏழு கவசங்கள் ( சப்த நாடி அல்லது தாது), ஐந்து வகை இயக்கங்கள், ( கர்மேந்திரியங்கள்) , இவைகளைக் கொண்டதாக இருந்தது.


மனைவியையும் மறந்து புரஞ்சனன் மிருகங்களை கொல்லத்தகுந்தவை, கொல்லத்தகாதவை என்று பாகுபாடின்றி வெறியுடன் வேட்டையாடினான். (அதாவது கனவுக் காலத்தில் செய்யத்தகுந்தவை செய்யத்தகாதவை என்ற வேறுபாடின்றிஎல்லா சுகங்களையும் அனுபவிப்பது. இது சரீரத்தினால் அனுபவிக்க முடியாததையும் மனதினால் அனுபவிப்பதற்கு ஒப்பானது. )


கடைசியில் சோர்வு மிகுந்து வீடு திரும்பினான். (நித்திரையிலிருந்து விழிப்பு நிலை). உடனே தன் மனைவி ஆசை கொண்டு அவளைத்தேடுகையில் அவள் கோபமுற்று தரையில் படுத்திருப்பதைக் கண்டான் . பிறகு அவளைப் பலவாறாக சாந்தப்படுத்தி அவளுடன் இன்புற்றிருந்தான்.


அத்தியாயம் 27
இவ்விதம் ஈடுபட்டு மாயைவசப்பட்டு இந்த்ரியசுகங்களில் ஈடுபட்ட புரஞ்சனனுடைய வாலிபமானது க்ஷணப்பொழுதில் கடந்து சென்றது. அவன் மனைவியிடத்தில் 11௦௦ புதல்வர்களைப் பெற்று அவன் ஆயுளில் பாதி சென்றுவிட்டது. (11 இந்த்ரியங்கள் அவற்றின் கணக்கில்லாத ஆசைகள் இவைகளைக் குறிக்கிறது.) ஒவ்வொரு புதல்வனுக்கும் நூறு குழந்தைகள் உண்டாயின.


புரஞ்சனன் தன் குடும்பத்தின் மீதும் செல்வத்தின் மீதும் மிகுந்த பற்று உடையவனாய் சம்சார சாகரத்தில் ஆழ்ந்தான். தன் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டு அனேக யாகங்கள் செய்தான். அதன் மூலம் அனேக பிராணிகள் வதைக்கப்பட்டன. ( இந்த வார்த்தைகள் பிராசீன பர்ஹிஷுக்கு அவன் செயலை உதாரணம் காட்டுவதற்காக நாரதரால் கூறப்பட்டது.)


நாளடைவில் அவனை வயோதிகம் வந்தடைந்தது. அப்போது அவனை எந்த ஸ்திரீகளும் விரும்பவில்லை. சண்டவேகன் என்ற கந்தர்வன் 36௦ கந்தர்வர்களுடனும் (வருடங்கள்) அதே எண்ணிக்கையுள்ள கருப்பும் வெளுப்பும் ஆன கந்தர்வஸ்திரீகளுடனும் (மனம் உடல் சம்பந்தமான நோய்கள்) வந்து அந்த பட்டணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கினான். பட்டணத்தைக் காத்து வந்த நாகம் (பிராண சக்தி) நூறு வருடங்கள் போராடியும் வெற்றி பெற முடியாமல் சோர்ந்து விட்டது.


மேலும் நாரதர் கூறியது.
"காலத்தின் புதல்வியான துர்பகா ( வயோதிகத்தின் அடையாளமான நரை) என்பவள் தனக்கு கணவனைத் தேடி அலைந்தபோதிலும் யாரும் அவளை வரவேற்கவில்லை. என்னைக் கண்டு மோகம் கொண்டாள். நான் அவளை மறுத்து அவளுக்கு வேறு துணையைக் காட்டினேன். அதுதான் பயம் என்ற பெயர் கொண்ட யவனன். அவன் அவளைத் தன் பரிவாரங்களான கவலை , நோய் இவர்களுடன் உலகத்தில் சஞ்சரிக்குமாறு கூறினான். ( இவைகளால் தாக்கப்பட்டு நரையுடன் கூடிய வயோதிகம் மனிதனைத் தின்கிறது.)