Periyavaa


#பேசும்_தெய்வம்_பாகம் :3 - J.K. SIVAN


#ஒரு_ஆனந்தானுபவம்


#மஹாபெரியவாளுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்த எண்ணற்றோர் துடிக்கிறார்கள். சிலர் நேராததை நேர்ந்ததாக கூட எழுதவோ சொல்லவோ தயங்குவதில்லை. நடக்காததை நடந்ததாக காட்டுவது குற்றம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தெய்வத்தோடு விளையாடுவது மஹா பாபம். ஏற்கனவே மூட்டை ரொம்ப பெரிதாக இருக்கிறதே.இன்னும் கனமாக எப்படி சுமப்பது?


ஆகவே தான் #மஹான்களை பற்றி எழுதும்போது ரொம்ப ஜாக்கிரதையாக கூரான கத்தியை கையாள்வது போல் என் மனது கவனத்தோடு இருக்கும்.


இது ஒரு பக்தரின் குடும்ப அனுபவம். அவர் வார்த்தையில் கொஞ்சம் சுருக்கி என் வழியில் தருகிறேன்.


''சுமார் முப்பது வருழத்துக்கு முன்னால் - எழுபத்தி எட்டு அல்லது ஒன்பது என்று நினைக்கிறேன். நான் மஸ்கட்டுலே வேலைக்கு போய் இரண்டு வருஷம் இருக்கும். லீவில் ஊருக்கு வந்தேன்.


என் அப்பா ப்ரம்மஸ்ரீ திண்ணியம் முத்துசுவாமி ஐயர் என்னைக் காஞ்சிபுரத்துக்கு கூட்டிக்கொண்டு பரமசாரியா தரிசனத்துக்கு போனார். வரிசையாக நிறையபேர் தரிசனம் பண்ண காத்திருந்தார்கள். நாங்கள் மெதுவாக நகர்ந்து அவரை நெருங்கினோம் . நமஸ்காரம் பண்ணினோம். அப்பா பேசினார்:


''பெரியவா, ஐயா சாஸ்த்ரிகள் பேரன்'' என்று சொல்லி நமஸ்காரம் செய்து என்னையும் நமஸ்காரம் பண்ண சொன்னார். அப்பொழுது பெரிவா என்னை பார்த்து


"நோக்கு ஐயா சாஸ்த்ரிகளை தெரியுமா? என்று என்னை பார்த்து பெரியவா கேட்டார். ''தெரியாது''
"அவர் பெரிய தனிகர் ,பெரிய தர்மிஷ்டனும் கூட, நீ அவரைப்போல இருப்பியா?
''பெரியவா க்ரிபைல்லே சுமாராக சம்பாதிக்கிறேன். பெரியாவா ஆசீர்வாதம் பண்ணினால் தர்மமும் செய்ய முயற்சிக்கிறேன்" என்றேன்.
''இந்தா'' . ஒரு பழத்தை என்னிடம் கொடுத்து " ஆஹா. அப்படியே நன்னா செய் " என்றார் . (அப்பறம் ஒரு இருவது வருஷம் நான் மஸ்கட்டில் நல்ல வேலையில் இருந்து நிறைய சம்பாதித்தது, முடிந்த அளவுக்கு தர்மம் செய்ய முயன்றது எல்லாம் பெரியவா ஆசிர்வாதம்தான்)


பெரியவா சற்று யோசித்தார். பிறகு பேசினார்:


"நான் ஒரு முப்பது வருஷம் முன்னாலே ஒங்க திண்ணியம் கிராமத்துக்குப் போயிருந்தேன் . அப்போ ஒன்னோட கொள்ளு தாத்தா வீட்டுலே தங்கினோம். அப்போ வீட்டுக்கு பின்னாலே ஒரு பசு மாடு ரொம்போ கத்தித்து. நான் ஏன் மாடு கத்தரதுன்னு கேட்டேன். பால் கரக்கரதுக்கு நாழி ஆயிடுத்து என்று யாரோ சொன்னாள். ஏன் கரக்கலேன்னு கேட்டேன். பாட்டி பிசியா இருக்கா, வேறே யாரு போனாலும் முட்டும் அல்லது ஒதைக்கும்னு சொன்னா. அப்போ நான் என்னோட மேல் வஸ்த்ரத்தை தரேன், அதை போத்திண்டு போய் அந்த மாட்டை ஏமாத்திடுனு சொன்னேன் - நோக்கு ஞாபகம் இருக்கான்னு அப்பாவை கேட்டாள். ( அந்த பாட்டி பழுப்பு நார் மடி முட்டாக்கு போடுவாள் என்று அப்பா பிறகு சொன்னார்) . அப்படியே செய்து பசு பால் கொடுத்தது.

இன்னொரு அனுபவமும் சொல்றேன்;


அப்போ பால பெரியவா வந்த புதுசு. அவர் பெரியவா கிட்டே பாடம் படிச்சுட்டு மாடி மேலே இருக்கும் அவரோட ரூமுக்கு போயிண்டு இருந்தா. அப்போ என்கிட்டே இருந்த நேஷனல் பெடமேக்ஸ் வீடியோ காமிராவில் படம் எடுக்கணும் னு கேட்டேன். பால பெரியாவாளும் ஒரு நிமிஷம் படிமேலே மெதுவா நின்னுட்டா. நான் காமெராவை ஸ்டார்ட் செய்து ரெகார்ட் பண்ணும்போது ஒரு சிப்பந்தி வந்து "பாலா பெரிவாளை படம் எடுக்கக் கூடாதுன்னு மகா பெரியவா உத்தரவு" என்றார். அதன் பின்னும் நான் ஒரு ரெண்டு / மூணு நிமிஷம் பால பெரியவா ரூமுக்குள்ளே போற வரைக்கும் ரெகார்ட் பண்ணினேன். நல்ல ஒசந்த புதிய கேமரா, INDICATOR இன்டிகேட ர் ரெக்கார்டு பண்ணறதை காமிச்சுண்டே இருந்தது. ஆனால் வீட்டில் வந்து பார்த்தால் டேப் சுத்தமா BLANK ப்லேங்கா இருந்த்து இன்றைக்கும் மறக்க முடியாத உண்மை. பெரியவா சித்தத்தை மீறி நான் படம் எடுக்க முயன்றது பெரிய முட்டாள்தனம் என்பது நிதர்சனம்.

இன்னொண்ணு கூட சொல்லணும் போல இருக்கு. சொல்றேன். 1985 அல்லது 1986லே ஒரு ஜோசியர் சொன்ன படி நான் ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலே ஒரு பகுதியை உண்டியல்லே போட ஆரம்பித்தேன். ஜோசியர் சொன்னபடி அந்த பணத்தை திருப்பதி கோவிலுக்கு திருப்பணி செய்ய பயன் படுத்த வேண்டும். ரொம்ப ப்ரயத்தனத்துக்குப் பிறகு ராம் பகீசா என்கிற பெயரில் ஒரு ரூம் கட்ட சுமார் நாற்பந்தைந்தாயிரம் ரூபாய் சேர்ந்து அதை கொடுத்துவிட்டேன். மீதி சுமார் ஏழு அல்லது எட்டு ஆயிரம் கையில் இருந்தது. அதை எப்படி செலவு செய்யலாம் என்று நானும் என் அப்பாவும் முடிவு செய்ய முடியாமல் பெரியவாளை கேட்டுட்டு செய்யலாம் என்று முடிவு செய்தோம்


நான், என் அப்பா, என் மனைவி எல்லோரும் சுமார் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு காஞ்சிபுரம் போய் பெரியவா இருந்த கொட்டகைக்கு முன்னால் காத்துக் கொண்டிருந்தோம். பல முறை கேட்டும் அங்கே இருந்த சிப்பந்தி எங்களை முன்னாலே விடவும் இல்லை பேசவும் விடவில்லை. சுமார் பதினோரு மணிக்கு மேலே ஓர் ஏழைத் தாயார், தன் பிள்ளை பெண்ணோடு அங்கே வந்தாள் . . அந்த பையன் நெத்தி பாழாக இருந்ததால் பக்கத்திலே இருந்த ஒரு பெரியவர் வீபுதி கொடுத்து இட்டுக்கொள்ள சொன்னார். பிறகு அவர்கள் கொண்டுவந்த கடிதத்தை பெரிவாளிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தார்கள். அதில் ஒரு மடத்திடம் ஈடுபாடு கொண்ட அன்பர் அந்தக் குடும்பம் மிகவும் ஏழை என்றும் அந்தப் பெண்ணின் கல்யாணத்திற்கு மடம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தார்கள் பெரியவா அதை படிச்சுட்டு அந்த அம்மாவிடம்


"நான் என்னம்மா செய்ய முடியும், வேணும்னா தாலி தர முடியும் ஆனா என்கிட்டே ஸ்மார்த்தா போடுகிற தாலி தானே இருக்கும் , நீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் ஆச்சே " என்றார்.


''இல்லே பெரியவா என் பெண்ணிற்கு ஒரு ஸ்மார்த்த பையனைத் தான் நிச்சயம் பண்ணிருக்கு. அவாள் ஸ்மார்த்த தாலிதான் கட்டணும்னு சொல்லிட்டா'' என்றது அதிசயமாக இருந்தது.


பெரியவா பக்கத்திலிருந்த தொண்டரிடம் " நீ இவள் அழைச்சுண்டு போயி மேனேஜர் கிட்ட சொல்லி ஒரு தாலி வாங்கிக்கொடு . நீங்க போங்கோ'' என்றார்.


இத்தனை நேரமாக எங்களை வெளியே தள்ளாத குறையாக தடுத்த சிப்பந்தி


"ரொம்ப நேரமாக நிக்கிறேளே. உங்களுக்கு என்ன வேணும்?" என்றார். நான் சாங்கோ பாங்கமாக திருப்பதிக்காக உண்டியல் போட்டது, ரூமு கட்டியது, எல்லாம் சொல்லி மீதிப் பணத்தை என்ன செய்யலாம் என்று பெரியாவாளைக் கேட்கணும் என்று சொன்னேன்.


அவர் தந்தி அடிப்பது போலே பெரியவாளிடம் "பெருமாளுக்கு உண்டியல் லே பணம் போட்ருக்கா, அதுலே மீதி கொஞ்சம் இருக்கு என்ன பண்ணனும்னு கேக்ரா "என்றார்.


பெரியவா அதை கேட்டுட்டு எங்களை அருகே கூப்பிட்டுவிட்டு " இப்ப போனாளே , அந்த வைஷ்ண கொழந்தை கல்யாணத்துக்கு செலவுக்கு உன்னால ஆனதை குடுத்துடு" என்றார்.


''அப்படியே பெரியவா'' என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் அந்தக் குடும்பத்தைத் தேடிப் பிடித்து பெரியவாள் சொன்னதை சொல்லி வீட்டிற்கு வந்து பணம் வாங்கிண்டு போக சொன்னோம். உடனே அந்த பெண்ணும் அம்மாவும் அழ ஆரம்பித்து விட்டார்கள். ஏன் என்று தெரியவேண்டுமா. சுருக்கமாக அந்த கதை இதுதான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அவர்களுக்கு காஞ்சி மடமோ பெரியவாளோ பற்றி ஒன்றுமே தெரியாது. நம்பிக்கையே இல்லாமல் யாரோ சொன்னாளே ட்ரை பண்ணுவோம்னு தான் வந்திருக்கிறார்கள்.அந்த பெண் அழுகையை அடக்கிகொண்டு சொன்னது எங்களை சிலையாக்கியது.


''எங்களுக்கு தெரிந்தெதெல்லாம் திருப்பதி பாலாஜி மட்டும்தான். அதுவும் நித்ய பூஜைக்கு ஒரு பழைய காலண்டர் படம்தான் வீட்டிலே. வீட்டை விட்டு காஞ்சிபுரத்துக்கு . புறப்படும்போது " பெருமாளே எனக்கு ஒன்றுமே தெரியாது, நீதான் கூட இருந்து ஏதாவது உதவி கிடைக்கச் செய்யணும்" என்று பிரார்த்தித்துவிட்டு அடுத்த வீட்டில் போயி ஒரு பத்து ரூபாய் பஸ் சார்ஜுக்கு கடன் வாங்கிக்கொண்டு திருப்பதி பாலாஜியையே நினத்துக்கொண்டு இங்கே பெரியவா கிட்டே வந்தோம். இங்கே வந்து பார்த்தா என் கண்ணுக்கு இந்த பெரியவா தெரியல எதிரே உட்கார்ந்திருக்கிறது சாக்ஷாத் பாலாஜி மந்தகாசமாய் சிரிச்சிண்டு இருக்கிறது தான் தெரிஞ்சுது