Srimad ramayana Dhyana slokas with meanings in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ராமாயண த்யான ஸ்லோகங்கள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
1. சுக்லாம்பரதரம் – வெள்ளை வஸ்திரம் தரித்தவரும்
விஷ்ணும் – எங்கும் நிறைந்தவரும்
சசிவர்ணம் –சந்திரனின் நிறம் உடையவரும்
ப்ரசன்னவதனம் – எப்போதும் சிரித்த முகமானவருமான விநாயகரை சர்வவிக்நோபசாந்தயே- எல்லா இடையூறுகளும் ஒழிய
த்யாயேத்- த்யானிக்க வேண்டும்.


2. வாகீசாத்யா:- பிரம்மா முதலிய
ஸுமனஸ: தூய சிந்தையுடைய வர்கள் ( தேவர்கள்)
ஸர்வார்த்தானாம்- எல்லா விதமான செய்கைகளின்
உபக்ரமே- ஆரம்பத்தில்
யம் நத்வா- யாரை வணங்கி
க்ருதக்ருத்யா: ஸ்யு: - கார்ய சித்தியை அடைகிறார்களோ
தம் கஜானனம் – அந்த கணபதியை
நமாமி-வணங்குகிறேன்


3. சதுர்பி: தோர்பி: யுக்தா- நான்கு கரங்கள் கொண்டவளும்
ஸ்படிக மணிமயீம் அக்ஷமாலாம் – ஸ்படிகத்தினால் ஆன பீஜமாலையையும்
ஹஸ்தேன ஏகேன –ஒரு கரத்தினால்
த்தானா- தரித்து
பத்மம் ஸிதம் அபி – மற்றொரு கரத்தினால் வெண் தாமரையும்
சுகம் புஸ்தகம் ச அபரேண- மற்றும் இரு கரங்களில் கிளியையும் புஸ்தகத்தையும் தரித்து
குந்தேந்து சங்கஸ்படிக மணி நிபா- மல்லிகை, சங்கு,ஸ்படிகம் இவைகளை ஒத்த
பாஸா- ஒளியினால்
பாஸமானா- பிரகாசிப்பவளும்
அஸமானா- தன்னிகரில்லாதவளும் ஆன
ஸா வாக்தேவதா – அந்த வாக்தேவதையான
இயம் - இவள் ( சரஸ்வதி) வதனே – என் நாவில்
ஸர்வதா- எப்போதும்
ஸுபிரசன்னா- அருள் பாலிப்பவளாக
நிவஸது- வஸிக்கட்டும்.


4.ராமராமேதி –ராமா ராமா என்று
மதுராக்ஷரம்- மதுரமான நாமத்தை
கவிதாசாகாம் – கவிதை என்னும் கிளையில்
ஆருஹ்ய- ஏறி
மதுரம் – இனிமையாக
கூஜந்தம்- கூவுகின்ற
வால்மீகி கோகிலம்- வால்மீகி என்ற குயலை
வந்தே – வணங்குகிறேன்.


5. முனிஸிம்ஹஸ்ய -முனிவர்களில் சிம்ஹம் போன்ற
கவிதாவனசாரிண- கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும்
வால்மீகே: - வால்மீகியின்
ராமகதாநாதம் - ராமகதை என்கிற கர்ஜனையை
ஸ்ருன்வன்- கேட்டு
கோ – எவர்தான்
பராம் கதிம்- மேலான கதியை
ந யாதி- அடைய மாட்டார்!


6. ய: - எவர்
ஸததம்-எப்போதும்
ராமசரிதாம்ருத ஸாகரம்- ராமசரிதமாகிய அமுதக் கடலை
பிபன் – குடித்தும்
அத்ருப்த: -திருப்தி இல்லாமலிருக்கிறாரோ
தம் முனிம் –அந்த வால்மீகி முனிவரை
வந்தே – நமஸ்கரிக்கிறேன்.


7.கோஷ்பதீக்ருதவாராசிம்-கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ
மசகீக்ருதராக்ஷசம் – ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ
ராமாயண மஹாமாலாரத்னம் – எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ
தம் அணிலாத்மாஜம் – அந்த ஹனுமானை
வந்தே – வணங்குகிறேன்


8. அஞ்சனாநந்தனம்- அஞ்சனையின் புத்திரனும்
வீரம்- வீரனும்
ஜானகி சோக நாசனம் – சீதையின் துக்கத்தைப் போக்கினவனும்
அக்ஷஹந்தாரம் – அக்ஷ குமாரனை வதைத்தவனும்
லங்காபயம்கரம்- இலங்கைக்கு அச்சத்தை விளைவித்தவனும் ஆன
கபீசம்- ஹனுமானை
வந்தே – வணங்குகிறேன்


9. ஸிந்தோ: - சமுத்திரத்தின்
ஸலிலம் – நீரை
ஸலீலம் – விளியாட்டாகக்
உல்லங்க்ய- தாண்டி
ய: -எவன்
ஜனகாத்மஜாயா: - சீதையினுடைய
சோக வஹ்னிம்- சோகமாகிற நெருப்பை
ஆதாய – எடுத்து
தேனைவ- அதனாலேயே
லங்காம் – இலங்கையை
ததாஹா – கொளுத்தினானோ
தம் ஆஞ்சநேயம்- அந்த ஆஞ்சநேயனை
நமாமி- நமஸ்கரிக்கிறேன்


1௦.அதிபாடலானனம் – மிகவும் சிவந்த முகமும்
காஞ்சனாத்ரி – தங்கமயமான மேருமலையைப் போல்
கமனீய விக்ரஹம்- அழகிய உருவத்தையும் உடைய
பாரிஜாததருமூல வாஸினம் – பாரிஜாத மரத்தின் கீழ் வசிக்கும்
பவமான நந்தனம் –வாயுபுத்திரன் ஆகிய
ஆஞ்சநேயம் - - ஹனுமானை
பாவயாமி- தியானிக்கிறேன்


11. யத்ர யத்ர – எங்கெல்லாம்
ரகுநாதகீர்த்த்னம்- ராமன் புகழ் பாடப்படுகிறதோ
தத்ர தத்ர- அங்கெல்லாம்
க்ருதமஸ்தகாஞ்சலிம் – தலை மேல் கைகூப்பி
பாஷ்பவாரிபரிபூர்ணலோசனம் – கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நிற்கும்
ராக்ஷஸாந்தகம் – ராக்ஷசர்களின் எமனான
மாருதிம் – மாருதியை
நமத – வணங்குவீர்.


12. மனோஜவம் – மனம் போல் துரிதமானவரும்
மாருததுல்ய வேகம் – வாயு வேகம் கொண்டவரும்
ஜிதேந்த்ரியம் – இந்த்ரியங்களை அடக்கினவரும்
புத்திமதாம் வரிஷ்டம்-புத்திமான்களுள் சிறந்தவரும்
வாதாத்மஜம் – வாயுவின் புத்திரனும்
வானர யூத முக்யம்- வானர சேனையின் முக்கியமானவரும் ஆன
ஸ்ரீராமதூதம் – ராம் தூதனான ஹனுமானுக்கு
சிரஸா நமாமி – தலை வணங்குகிறேன்.


13.புத்தி: - அறிவு
பலம் – பலம்
யச: - புகழ்
தைர்யம் – தைரியம்
நிர்பயத்வம் – அச்சமின்மை
அரோகதா- ஆரோக்கியம்
அஜாட்யம் – சோம்பலின்மை
வாக்படுத்வம் – வாக்கு வன்மை இவை
ஹனுமத் ஸ்மரணாத்- ஹனுமனை நினைக்க
பவேத் – ஏற்படும்.


14.ய: -எவனொருவன்
அஹரஹ:- தினம் தினம்
கர்ணாஞ்சலி சம்புடை: -செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால்
வால்மீகே: - வால்மீகியினுடைய
வதநாரவிந்த கலிதம் – வாக்கிலிருந்து ( கிளியின் வாயிலிருந்து விழுவதைப்போல்)
ராமாயணாக்யம் மது – ராமாயணம் என்னும் தேனை
ஸம்யக் – நன்றாக
ஆத்ராத் – ஆவலுடன்
பிபதி – பருகுகிறானோ
ஸ: புமான் – அந்த மனிதன்
ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: - பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால்
அத்யந்த ஸோபத்ரவம்- மிகவும் தொல்லை கொடுக்கும்
ஸம்ஸாரம் – சம்சாரத்தை
விஹாய – நீத்து
சாஸ்வதம்- நிரந்தரமான
விஷ்ணோ: பதம் –விஷ்ணுவின் பதத்திற்கு
கச்சதி- செல்கிறான்.


15. உபகத ஸமாஸ ஸந்தி யோகம் – சரியான பதப்பிரிவு, பதச்சேர்க்கை இவைகளுடன் கூடியதும்
ஸமமதுரோபநதார்த்த வாக்ய பந்தம் – மதுரமான பொருட்செறிவுடன் கூடிய வாககியங்களை உடையதும்
முநிப்ரணீதம்- வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட
ரகுவர சரிதம்- ராமாயணத்தை
நிசாமயத்வம் – அனுபவியுங்கள்


16. வால்மீகி கிரி ஸம்பூதா – வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி
ராமஸாகர காமிநீ- ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும்
ராமாயணமஹாநதீ- ராமாயணம் என்னும் மகாநதியானது
புவனம் – உலகத்தை
புனாது-தூய்மையாக்குமாக .


17. ஸ்லோக ஸார ஸமாகீர்ணம்- ச்லோகங்களாகிற சாரம் நிரம்பியதும்( சாரம் என்றால் உப்பு என்றும் பொருள்)
ஸர்ககல்லோல ஸம்குலம் – ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும்
காண்டக்ராஹ மஹாமீனம் - காண்டங்கள் என்கிற முதலைகள் சுறாமீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன
ராமாயணார்ணவம் – ராமாயணம் என்னும் கடலை
வந்தே – வணங்குகிறேன்


18. வேத வேத்யே- வேதங்களினால் அறியப்படுபவனான
பரே பும்ஸி- பரம புருஷன்
தசரதாத்மஜே – தசரதர் மகனாக
ஜாதே – ஜனித்தபோது
வேதா:- வேதங்கள்
ப்ராசேதஸாத் – வால்மீகியிடம் இருந்து
ஸாக்ஷாத் ராமாயணகதா- ராமாயணத்தின் வடிவமாக
ஆஸீத்- ஆயின.


19. வைதேஹீஸஹிதம் – சீதையுடன் கூட
ஸுரத்ருமதலே – கல்பக வனத்தில்
ஹைமே- தங்க மயமான
மஹாமண்டபே- மண்டபத்தில்
மணிமயே- ரத்தினங்கள் பதித்த
புஷ்பகமாஸனே - புஷ்பக விமானத்தின்
மத்யே – நடுவில்
வீராஸனே – வீராசனத்தில்
ஸுஸ்திதம்- நன்கு அமர்ந்து இருப்பவரும்
அக்ரே – முன்னால்
பிரபஞ்சனஸுதே- ஹனுமனுடனும்
முநிப்ய: - முனிவர்களுக்கு
தத்வம்- தத்துவத்தை
வாசயதி – கூறி
வ்யாக்யாந்தம்- விளக்குபவரும்
பரதாதிபி: - பரதன் முதலியவர்களால்
பரிவ்ருதம் – சூழப்பட்டவரும் ஆன
ச்யாமளம்- நீலநிறம் கொண்ட
ராமம் – ராமனைத்
பஜே – தொழுகிறேன்


2௦. வாமே – இடதுபக்கத்தில்
பூமிஸுதா- சீதையுடனும்
புரஸ்ச – முன்னால்
ஹனுமான்- ஹனுமனுடனும்
பஸ்சாத்- பின்னால்
ஸுமித்ரா ஸுத: - லக்ஷ்மணனுடனும்
சத்ருக்நோ பரதஸ்ச –சத்ருக்னன் பரதன் இவர்கள்
பார்ச்வதளயோ: - இரு பக்கத்திலும் இருக்க
வாய்வாதி கோணேஷு ச - அஷ்ட திக்குகளிலும்
ஸுக்ரீவஸ்ச விபீஷணஸ்ச யுவராட் தாராஸுதொ ஜாம்பவான்- சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவான்
மத்யே – இவர்கள் மத்தியில் நீல ஸரோஜ கோமள ருசிம் – நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும்
ச்யாமளம் –சியாமளனான
ராமம்- ராமனை
பஜே- துதிக்கிறேன்


21. ஸலக்ஷ்மணாய – லக்ஷ்மணனுடன் கூடிய
ராமாய – ராமனுக்கு
நமோஸ்து- நமஸ்காரம்
தேவ்யை ஜனகாத்மஜாயை- ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு
நமோஸ்து- நமஸ்காரம்
ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: - ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு
நமோஸ்து- நமஸ்காரம்
சந்த்ரார்க மருத்கணேப்ய: - சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு
நமோஸ்து- நமஸ்காரம்


22. ஸர்வாரிஷ்ட நிவாரகம்- அனைத்து கஷ்டங்களையும் போக்குகின்றவரும்
சுபகரம்- நன்மை செய்பவரும்
பிங்காக்ஷம்- மஞ்சள் நிறமான கண்களை உடையவரும்
அக்ஷாபஹம்- அக்ஷகுமாரனை வாதம் செய்தவரும்
ஸீதான்வேஷணதத்பரம்- சீதையைத் தேடுவதில் நாட்டம் உடையவரும்
கபிவரம்- சிறந்த வானரரும்
கோடீந்து சூர்யப்ரபம்- கோடி சூர்யன் சந்திரன் இவர்களின் ஒளி பொருந்தியவரும்
லங்காத்வீபபயம்கரம் – இலங்கைக்கு பயத்தை உண்டாக்கினவரும்
ஸகலதம் – அனைத்தும் கொடுப்பவரும்
ஸுக்ரீவஸம்மாநிதம் – சுக்ரீவனால் கொண்டாடப்பட்டவரும்
தேவேந்த்ராதி ஸமஸ்த தேவ வினுதம் – தேவேந்திரன் முதலிய எல்லா தேவர்களாலும் துதிக்கப்பட்டவரும் ஆன
காகுத்ஸ்த தூதம் பஜே- ராமதூதனை தியானிக்கிறேன்