Announcement

Collapse
No announcement yet.

Meaning of vaishnava janato in Tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Meaning of vaishnava janato in Tamil

    வைஷ்ணவ ஜன தோ பாடலின் வரலாறும் தற்போதைய புதிய படைப்பும்
    வைஷ்ணவ ஜன தோ பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல்.
    அண்ணல் காந்தியடிகளால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு பாடல்.
    "பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்" என்பது இப்பாடலின் பல்லவியின் பொருள்.
    மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். காந்தி ஜெயந்தி மற்றும் காந்தி நினைவு நாள் ஆகிய விழாக்களில் இப்பாடல் பாடப்படுகிறது.


    வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
    பீடு பராயே ஜானெரெ
    பரதுக்கே உபகார் கரே தொயெ
    மன் அபிமான் ந ஆனெ ரெ


    சகல லொக மான் சஹுனெ வந்தெ
    நிந்தா ந கரெ கேனி ரெ
    வாச் கச்ச மான் நிஸ்சல ராகெ
    தன் தன ஜனனி தெனெ ரெ


    சம்திருஷ்டி நே த்ரிஷ்ண த்யாகி
    பரஸ்த்ரி ஜெனெ மாத ரெ
    ஜிஹ்வா தகி அஸத்ய ந போலெ
    பர தன் நவ் ஜாலெ ஹாத் ரெ


    மோஹ மாய வ்யாபி நஹி ஜெனெ
    த்ரிட வைராக்ய ஜேனா மான் மான் நெ
    ராம் நாம் சூன் தாலி லாகி
    சகல தீரத் தேனா தான் மான் ரெ


    வான் லோபி நெ கபட-ரஹித செ
    காம க்ரோத நிவராய ரெ
    பானெ நரசய்யொ தெனுன் தர்ஷன் கர்தா
    குல் ஏகொதர் தார்யா ரெ


    வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்
    வகுப்பேன் அதனை கேளுங்கள்…


    பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
    பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
    உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
    உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
    உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
    வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
    அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
    அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.


    விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
    விளங்கி ஆசைகள் விட்டவனாய்
    ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
    உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
    உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
    ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
    வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
    அவனே உண்மை வைஷ்ணவனாம்.


    மாயையும் மோகமும் அணுகா தவனாய்
    மனத்தினில் திடமுள வைராக்கியன்;
    நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
    நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
    போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
    பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
    ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
    ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.


    கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
    காம க்ரோதம் களைந்தவனாய்,
    தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
    தரிசிப் பவரின் சந்ததிகள்
    சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
    தலைமுறை வரையில் சுகமுறுவர்;
    அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
    அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.
Working...
X