Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 5 adhyaya 24/25 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 5- அத்தியாயம் 24/25


    அத்தியாயம் 24
    பூமியின் கீழ் உள்ள பிரதேசங்களின் வர்ணனை தொடர்கிறது.
    பொதுப்பெயரான பாதாளம் என்னும் ஏழு பிரதேசங்கள் பூமிக்கு அடியில் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று பதினாயிரம் யோஜனை தூரத்தில் அமைந்துள்ளன. இவை, அதலம், விதாலம், ஸுதலம், தலாதலம், மஹாதலம், ரஸாதலம் , பாதாளம் எனப்படும். இவை தைத்யர்கள், தானவர்கள் ,சர்ப்பங்கள் இவர்களுடைய இருப்பிடம் ஆகும்.இங்கு அசுரசிற்பியான மயனால் கட்டப்பட்ட மாளிகைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். இங்கு எல்லா வசதிகளும் தேவைக்குரிய எல்லாமே நிறைந்து இருந்தாலும் சூரிய வெளிச்சம் என்பது இல்லை.


    அதலம்
    மயனின் புதல்வனான பலன் என்பவனின் இருப்பிடம். இவன் மந்திரவாதிகள் உபயோகிக்கும் மந்திரங்களை உண்டுபண்ணினவன். இங்கு வந்தவருக்கு ஹாடகம் என்ற பானத்தின் மூலம் ஆயிரம் யானை பலம் கிடைக்கிறது. ( ஒருவேளை இங்குதான் துரியோதனனால் விஷம் கொடுக்கப்பட்ட பீமன் சென்றானோ என்னவோ?)


    விதாலம்
    இதற்குக் கீழ் விதாலத்தில் பரமசிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் ஹாடகேச்வரர் என்ற பெயரில் இருக்கிறார். அவரிடம் இருந்து தோன்றிய நதியான ஹாடகி அக்னியால் உண்ணப்பட்டு மீண்டும் வெளிவிடப்பட்டது. அதுவே ஹாடகமென்னும் பொன்னாக மாறியது. ( ஹாடகம் என்றால் வடமொழியில் பொன் என்று பொருள்)
    ஸுதலம்.


    இங்குதான் மஹாபலி வசிக்கிறார். அவர் இங்கு விஷ்ணுவை ஆராதிக்கிறார். மஹாபலி மஹாபக்தர் .அவருக்கு ஏன் பகவான் மோக்ஷத்தை அளிக்காமல் இந்த அல்ப சுகத்தை அளித்தார் என்ற கேள்விக்கு பதில் இது அவர் பிராரப்தத்தைக் கழிக்கவே என்பதாகும். இதை மகாபலியே கூறுகிறார். வருண பாசத்தினால் கட்டப்பட்டு ஒரு குகையில் அடைபட்ட போது மகாபலி கூறியது என்னவென்றால்,


    "இந்திரன் , ப்ருஹஸ்பதி முதலியவர்கள் பகவானின் பெருமையை அறியாதவர்கள். அவனை அடைவதை விட்டு இந்த உலகத்தைப் பெறுவதற்கு அவனை யாசிக்க வைத்தார்களே!என் பாட்டனாரான ப்ரஹ்லாதர் உலக சாம்ராஜ்யத்தைவிட்டு பகவான் பாத சேவையையே விரும்பினார் அல்லவா? ஆயினும் என்னைப்போன்ற உலக சுகங்களில் ஈடுபட்டவர்க்கு அந்த பாக்கியம் கிடைக்குமா?"


    ஆனால் எட்டாவது ஸ்கந்தத்தில் வாமனாவதார வர்ணனையில் பகவான் அவர் ஸுதலத்தில் உள்ள பக்தரான மகாபலியின் அரண்மனைக்கு காப்போனாக இருந்தார் என்றும் ராவணன் அங்கு போருக்கு வந்தபோது அவனை கால் கட்டைவிரலால் பல்லாயிரம் யோசனை தூரம் த்ஹூகி எறிந்தார் என்றும் காண்கிறோம்.


    தலாதலம்
    ஸுதலத்தின் கீழ் உள்ளது தலாதலம். இது மயனின் இருப்பிடம். அவன் நிர்மாணித்த த்ரிர்புரத்தை சிவன் எரித்தபோது அவனுக்கு மனமிரங்கி இங்கு இடம் அளித்ததாகக் கூறப்படுகிறது.


    மஹாதலம் .
    தலாதலத்தின் கீழ் உள்ள இங்கு தானவர்கள் சர்ப்ப ரூபத்தில் வசிக்கிறார்கள்.
    அதற்குக்கீழ் உள்ளது பாதாளம். இங்கு கொடிய சர்ப்பங்களான வாசுகி, சங்கன், குளிகன், மஹாசங்கன், முதலியோர் வசிக்கிர்ரகள் .இவர்களுக்கு ஐந்திலிருந்து ஆயிரம் வரை தலைகள் உண்டு. இவர்களுடைய தலையில் உள்ள மாணிக்கத்தின் ஒளியினால் பாதாளம் இருள் நீங்கியதாக இருக்கிறது.


    அத்தியாயம் 25
    பாதாளத்திற்கு முப்பதாயிரம் யோஜனை கீழே உள்ளது நாராயணனின் வ்யூஹ ரூபங்களில் ஒன்றான அனந்தன் என்னும் சங்கர்ஷணரின் இருப்பிடம். அவருடைய ஆயிரம் தலைகளில் ஒரு தலையினால் ஜகத்தை தாங்குகிறார் என்றும் அது அவர்தலை மேல் ஒரு கடுகுபோல் காணப்படுகிறது என்றும் கூறுகிறார்கள் . யுகப்ரளயத்தின் போது அவர் புருவமத்தியில் இருந்து ருத்ரன் தன் பதினொரு வடிவங்களில் தோன்றி உலகத்தை சம்ஹரிக்கிறார்.
    நாரதர் சங்கர்ஷணனின் பெருமையை தும்புருவுடன் கூடி கானம் செய்கிறார்.


    சுகர் பரீக்ஷித்திடம்,
    "வேதத்தில் பிரவ்ருத்தி மார்கத்தினால் அடையக் கூடிய எல்லா உலகங்களையும் பற்றி உமக்குக் கூறினேன். இன்னும் என்ன கேட்க ஆசைப்படுகிறீர்?"என்றார்.
Working...
X