Announcement

Collapse
No announcement yet.

Periyavaa speaking through a doll

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Periyavaa speaking through a doll

    Periyavaa speaking through a doll
    பெரியவா சரணம் !!


    வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!


    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை


    "பேசும் தெய்வம்"


    மிக எளிய திருஉரு கொண்டு நம்மிடையே சாட்சாத் சர்வேஸ்வரரே சுகப்பிரம்மரிஷி அவர்களின் தவயோக மேன்மையோடு அவதாரம் செய்து நம்மையெல்லாம் பெரும் பாக்யசாலிகளாக்கி தன் அபார கருணையினால் ஆட்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் புண்ணிய அனுக்ரஹ மழை பொழிந்தருளுகிறார்.


    ஆங்கரையை சார்ந்த சாத்தூர் சுப்ரமணியன் என்கிற சங்கீத வித்வான் அவர்களின் இல்லத்தில் நடந்த அபூர்வ சம்பவம் இது. திரு சாத்தூர் சுப்பிரமணியனின் தாயாருக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளிடம் அசையாத பக்தி. ஒருமுறை தன் இல்லத்தில் கோடி ராம நாம ஜபம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். சங்கல்பம் செய்து ராமநாம ஜபம் ஆரம்பித்தாயிற்று. ஆனாலும் ராம ஜபம் செய்ய அந்த ஊரில் அத்தனை பக்தர்கள் கூடி வரவில்லை. தினமும் வந்த சொற்ப நபர்களை கொண்டு ராம நாம ஜபம் நடந்துக் கொண்டிருந்தது.


    ஆரம்பித்த இரண்டு மூன்று நாட்களாக வந்து ராமஜபத்தில் கலந்து கொண்ட ஒரு மாமி ஏனோ திடீரென்று அடக்கமாட்டாமல் அன்று விசும்பி விசும்பி அழலானாள். சுப்பிரமணியனின் தாயாருக்கு அந்த மாமியின் இச்செயல் சற்று அச்சத்தையும் மெலிதான வருத்தத்தையும் உண்டாக்கியது.


    "ஏன் அழறே" என்று அந்த மாமியை ஆறுதலாக கேட்ட போது, "எப்படி சொல்றதுன்னே புரியலை மாமி" என்றபடி அந்த மாது தன் அனுபவத்தை விவரமாக கூறினாள்.


    அந்த மாமிவீட்டில் நவராத்திரி பூஜைகள் நிறைவாக நடந்திருந்தது. விஜயதசமி முடிந்தபின் கொலுவில் வாய்த்த பொம்மைகளை திரும்பவும் பாதுகாப்பாக துணிகளில் சுற்றி எடுத்து வைத்தபோது அதில் ஒரு பொம்மையை மட்டும் பரண்மேல் வைக்க வேண்டாமென்று அந்த மாமி நினைத்தாள். அதற்கான காரணம் இருந்தது. அந்த பொம்மை தூய துறவியாம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் திருஉருவமாயிருந்தாலும், மிகவும் அழுக்கேறிய நிலையில் இருந்ததால், அதை அப்படியே சுற்றி வைத்துவிட்டால் அடுத்த வருடமும் அதே நிலையில் கொலுவில் வைக்க வேண்டியிருக்குமாதலால், அழுக்கை அகற்றி பார்க்கலாமென்று மாமி நினைத்திருக்கலாம். அதனால் அந்த ஸ்ரீ பெரியவா பொம்மை மட்டும் விடப்பட்டு கொலுவிற்கு பிறகும் வீட்டு கூடத்தின் அலமாரியில் அனுக்கிரஹித்துக் கொண்டிருந்தது.


    நவராத்திரி முடிந்த சில நாட்களில் சாத்தூர் வீட்டில் கோடி ராம நாம ஜபம் ஆரம்பத்தில் இந்த மாமி அங்கு சென்று வந்துக்கொண்டிருந்தாள். தன் வீட்டிற்குள் நுழைந்த போது மாமியின் காதில் ஒரு அதிசயமான குரல் ஒலித்தது. கூர்ந்து கவனித்தபோது "என்னை சாத்தூர் ஆத்திலே கொண்டு விட்டுடு" என்பதாக அது கேட்டது. யார் பேசுவது என்ற திகைப்போடு மாமி குரல் வந்த இடத்தைப் பார்க்க அங்கே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் பொம்மையை தவிர வேறு யாருமில்லாதலால் மாமிக்கு வியப்பும் அச்சமுமாக இருந்தது.


    சரி ஏதோ மனப்பிரமையாக இருக்குமென்று மாமி முதலில் அதை பொருட்படுத்தவில்லைதான். ஆனால் அடுத்தநாள் அதற்கடுத்த நாள் என்று மாமி கோடி ராம ஜபத்தில் கலந்துகொண்டு சாத்தூர் வீட்டிலிருந்து வந்தபோதெல்லாம் அந்த பொம்மை "என்னை சாத்தூர் ஆத்திலே கொண்டு விட்டுடு" என்று குரல் கொடுப்பது மிக தெளிவாக கேட்டபோது மாமிக்கு இது மனோபிரம்மையல்ல என்பதும், நிஜமாகவே ஸ்ரீ பெரியவா பதுமை பேசுவதும் ஊர்ஜிதமானது.


    என்ன செய்வதென்று தோன்றாமல் மாமி குழம்பிக் கொண்டிருக்க இரண்டு மூன்று நாட்களில் ஸ்ரீ பெரியவா பொம்மையிலிருந்து இப்படி கேட்பது மெல்ல அதிகரித்து நாள் பூராவிலும் அந்த தெய்வீக பொம்மை தன்னை சாத்தூர் வீட்டில் கொண்டு போய் வைக்கச் சொல்லி கேட்பது நிரந்தரமாக காதில் ஒலித்துக் கொண்டே இருப்பது போலானது.


    இந்த நிலையில்தான் மாமி அன்று சாத்தூர் ஆத்திற்கு வந்தபோது இதை நினைத்து அழலானாள். இப்படி ஒரு பொம்மை பேசுகிறதென்றால் யாராவது நம்பப் போகிறார்களா; இதை சொல்லாமல் பொம்மையை இங்கு கொண்டு வந்து உங்கள் ஆத்தில் இருக்கட்டும் என்றால் அதை இயல்பாக ஏற்றுக் கொள்வார்களா; மேலும் ஒரு புதிய அழகான பொம்மையாயிருந்தாலும் வைத்துக் கொள்ள தயக்கம் காட்டாதிருக்க வாய்ப்புண்டு; இப்படி தானே தன் வீட்டின் கொலுவில் வைக்க ஒப்பாமல் அழுக்காய் காணப்படும் பொம்மையை மற்றவர்கள் எப்படி தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள சம்மதிப்பார்கள்? இப்படி காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் பெரியவா குரலுக்கு எப்படித்தான் வழி செய்வது? மாமியின் மனதில் எழுந்த பல்வேறு சிந்தனைகளால் செய்வதறியாத நிலையில்தான் அன்று அவள் அழ நேரிட்டது.


    சாத்தூர் சுப்ரமணியன் அவர்களின் அம்மா ஆறுதலாக கேட்டதில் மாமி நடந்தவைகளையெல்லாம் விவரித்து தான் குழம்பிக்கொண்டிருந்த காரணத்தையும் விளக்கியபோது, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் பிரம்மஞானி எங்கும் வியாபித்தருளுவதில் சற்றும் சந்தேகம் கொள்ளாத மனப்பக்குவதோடு.


    "அடி அசடே! அந்த பொம்மைக்குள்ளே இருந்து உன்கிட்டே பேசினது சாட்சாத் ஸ்ரீ பெரியவாள்தான்னு உனக்கு நம்பிக்கையா தோணலையா? ஸ்ரீ பெரியவா இங்கே வந்து ராமநாம ஜபம் கேட்கணும்னு ஆசை படறா….அதுக்கு உடனே ஏற்பாடு பண்றேன்" என்று சாத்தூர் மாமி கூறியதோடு, சகல மரியாதையோடு சாட்சாத் ஈஸ்வரரே உயிரூட்டியிருந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாள் பொம்மையை தங்கள் இல்லத்திற்கு அழைத்து பெரும்பாக்யமடைந்தனர்.


    ஸ்ரீ பெரியவா பொம்மை சாத்தூர் ஆத்திற்கு வந்து சேர்ந்ததோடு மாமியின் காதில் சதாசர்வகாலமும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது எப்படியோ மாயமாக நின்று போனது.


    இது ஒரு அதிசயமென்றால், சாத்தூர் வீட்டில் கோடி ராமநாம ஜபம் அதுவரை பக்தர்கள் சொற்பமாக வந்ததில் மிகவும் நிதானமாக நடந்துகொண்டிருக்க, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளே எழுந்தருளியவுடன் எங்கிருந்தோ பக்தர்கள் திரளாக வர தொடங்க கோடி நாம ஜபம் தெய்வீகமாக நிறைந்தேறியது.


    --------------------------------------------------------
    பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !


    அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?


    காமகோடி தரிசனம்


    காணக்காணப் புண்ணியம்.
Working...
X