Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 6 adhyaya 17 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 6-அத்தியாயம் 17


    ஒரு சமயம் சித்ரகேது விஷ்ணுவின் வர பிரசாதத்தால் பெற்ற ஒளிமிக்க விமானத்தில் செல்கையில் கயிலையில் பார்வதியை அணைத்துக்கொண்டு சித்த சாரணர்கள் சூழ வீற்றிருந்த சிவபெருமானைக் கண்டு தேவியின் காதுபட உலகுக்கெல்லாம் குருவாயும் ஜடாமகுடம் தரிப்பவராயும் தபஸ்வியாயும் உள்ள அவர் சபையில் எல்லோரும் காணும்படி வெட்கம் இன்றி மனைவியை கட்டிக்கொண்டிருப்பதகாக் கூறி பரிஹஸித்தான்.


    அதைக்கேட்ட சிவபெருமான் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். சபையில் இருந்த முனிவர்களுள் மற்றோரும் அதே போல இருந்தனர். ஆனால் அவனுடைய சொற்களைக் கேட்ட பார்வதி தேவியானவள் கோபம் கொண்டு பிரம்ம தேவர், நாரதர், கபிலர் சனகாதியர் இவர்களுக்கேல்லாம் தெரியாத தருமத்தை இவன் பேசுகிறானா என்று கூறி,


    இவர்களால் போற்றப்பட்டவரும், மங்களங்களுக்கெல்லாம் மங்களமானவரும் ஜகத்குருவும் ஆன அவரை அவமதித்ததோடு மகான்களையும் அவமதித்ததால் இவன் தண்டனைக்குரியவன் ஆதலால் வைகுண்டநாதனின் திருவடிகளை நெருங்கத் தகுதியற்றவனான அவன் வருந்தித் திருந்தும் பொருட்டு அசுரப்பிறவியை அடையுமாறு சபித்தாள்.


    சித்ரகேது அதைக் கேட்டு அயர்வுறவில்லை. அவன் கூறியது,
    " அம்பிகையே உங்கள் சாபத்தை இரு கைகளையும் கூப்பி ஏற்றுக் கொள்கிறேன். தேவர்கள் முதல் எல்லா உயிர்களுக்கும் எது அவர் வினைப்பயனோ அதுவே நடக்கும். பகவான் ஹரி அவருடைய மாயையால் எல்லாவற்றையும் நடத்துகிறார். அவருக்கு வேண்டுபவர் வேண்டாதவர் என்பது இல்லை.


    ஆயினும் அவருடைய மாயா சக்தியினால் ஏற்பட்ட சிருஷ்டியில் புண்ணிய பாவ மயமான செயல்கள் சுகத்திற்கும் துக்கத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம் ஆகிறது. நான் சாபத்திலிருந்து விடுபடுவதற்காக உங்களை வணங்கவில்லை. என் செயல் தவறாயின் மன்னிக்க வேண்டுகிறேன். "


    சித்ரகேது வாசுதேவரிடத்தில் சிறந்த பக்தி கொண்டிருந்தும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதை உணரவில்லை. இந்த சம்பவம் அதை உணர்த்தி அவனுக்கு பூரண ஞானம் வருவதற்காக. உண்மையில் சாபம் என்பது வரமே.


    இதைக் கேட்ட பார்வதி தேவி வியப்புக்குள்ளாக சிவ பெருமான் அவளிடம் நாராயண பக்தர்களின் மேன்மையைப் பற்றிக் கூறினார்.


    அந்த சித்ரகேதுவே த்வஷ்டாவின் யாகத்தில் தோன்றிய வ்ருத்ராசுரன். அதனால்தான் அசுரப்பிறவி அடைந்தும் கூட அவனுடைய நாராயண பக்தி குறையவில்லை என்று சுகர் பரீக்ஷித்திடம் விளக்கினார்.
Working...
X