Announcement

Collapse
No announcement yet.

Menstruation and spiritual reasons

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Menstruation and spiritual reasons

    Menstruation and spiritual reasons
    https://tamil.boldsky.com/insync/lif...sm-006281.html




    மாதவிலக்கு (ராஜஸ்வலா) சம்பிரதாயங்களுக்கு
    பின்னால் இருக்கும் அற்புதமான காரணங்கள் !😱


    பழங்காலத்தில், பெண்களுக்கு மாதவிலக்கு
    ஏற்படுகையில் ஒரு இருட்டு அறையில்
    அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.


    அதே போல்...


    மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள்,
    மாதவிடாய் காலம் முடியும் வரை
    ஒரே ஒற்றை ஆடையை மட்டும்
    தான் அணிய வேண்டும்;
    கூந்தலை வாரக் கூடாது;
    யாரிடமும் பேசக் கூடாது;
    எளிய உணவை தான் உண்ண வேண்டும்;
    வெறும் தரையில் தான் படுக்க வேண்டும்; தூய்மையாக கருதப்படும் எதையும் தொடக்கூடாது.


    அதனால் தான்...


    மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை வீட்டில் நடக்கும் பூஜைகள் மற்றும் சுப காரியத்தில்
    பங்கு பெற அனுமதிப்பதில்லை.


    திரௌபதி துயிலுரித்தல் மகாபாரதத்தில்,
    சதுரங்க சூதாட்டத்தில் திரௌபதியை யுதிஷ்டர் இழந்தவுடன், திரௌபதியை சபைக்கு இழுத்துவர துச்சாதனன் சென்றான்.


    அப்போது திரௌபதி மாதவிலக்கு
    (ராஜஸ்வலா) காலத்தில் இருந்தாள்.


    அதனால்...


    ஒரு தனிமையான அறையில் ஒரே ஒரு
    துணியை மட்டும் அணிந்து கொண்டிருந்தாள்.


    அக்காலத்தில் மாதவிடாய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்துள்ளது என இதுவே
    நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


    அப்படிப்பட்ட நிலையில் உள்ள ஒரு
    பெண்ணை அவமானப்படுத்துவது
    மிக உயரிய பாவமாக கருதப்பட்டது.


    மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை ஏன்
    தூய்மை அற்றவர்களாக கருதப்படுகிறது என்பதற்கான வியப்பான தகவல்கள் கீழே!
    ------------------------------
    இந்திரனின் பாவம் :
    -----------------------------
    இந்திரனின் வளர்ந்து வந்த அகந்தையால், கோபமடைந்த அவனின் குருவான ப்ரிஹஸ்பதி சொர்க்கத்தை விட்டு வெளியேறினார்.


    அதன் விளைவாக, இந்திரனின் அரியணையைத்
    தாக்கி அதனை அசுரர்கள் கைப்பற்றினார்கள்.


    தன் தவறை உணர்ந்த இந்திரன், உதவியை நாடி பிரம்மனிடம் சென்றான். தன் குருவை குளிர்விக்க அவன் பிரம்ம கியானிக்கு பணிவிடை செய்ய வேண்டும் என இந்திரனிடம் பிரம்மா கூறினார்.


    அதனால்...


    பிரம்ம கியானிக்கு பணிவிடை
    புரிந்திட இந்திரன் சென்றான்.


    பிரம்ம கியானி என்பவன் ஒரு அரக்கனின்
    புதல்வன் என்பதால், தன் தியாகத்தை கடவுளுக்கு பதில் அசுரர்களுக்கு புகலிடமாக செலுத்தினான்.


    இதனால் கோபமடைந்த இந்திரன்
    பிரம்ம கியானியை கொன்றான்.


    பூவிற்குள் ஒளிந்து கொண்ட இந்திரன் பிரம்ம கியானியை கொன்றதால், ஒரு பிராமணனை
    கொன்ற பழிக்கு ஆளானான் இந்திரன்.


    இந்த பாவம் அவன் எங்கு சென்றாலும்
    அவனை பின் தொடர்ந்ததால், அவன்
    ஒரு அரக்கனை போல் காட்சி அளித்தான்.


    அதனால்...


    ஒரு பூவிற்குள் ஒளிந்து கொண்ட இந்திரன்,
    விஷ்ணு பகவானை வருடக்கணக்கில்
    வணங்க தொடங்கினான்.


    அவன் முன் தோன்றிய விஷ்ணு பகவான்,
    அவனை அசுரனிடம் இருந்து விடுவித்தார்.


    இருந்தாலும்...


    அவன் தலையில் அந்த பாவம் நீடித்தது.


    இந்திரனின் பாவம் பிளவுப்பட்டது :


    தன் பாவத்தை போக்கிட
    மரங்கள், நிலம், தண்ணீர் மற்றும் பெண்களிடம் சென்று தன் பாவத்தை பிரித்து அவர்களையும்
    அதை பங்கு போட்டுக் கொள்ள வேண்டுகோள் விடுத்தான்.


    அதற்கு பிரதிபலனாக ஒவ்வொருவருக்கும்
    வரம் அளிப்பதாக அவன் சத்தியம் செய்தான்.


    அதனால்...
    அவன் பாவத்தின் கால் பங்கை
    மரங்கள் ஏற்றுக் கொண்டது.


    அதனால்...
    அவைகள் தங்கள் வேர்களில் இருந்து மீண்டும் வளரலாம் என்ற வரத்தை அளித்தான் இந்திரன்.


    அடுத்து..
    அவன் பாவத்தின் மற்றொரு பங்கை
    தண்ணீர் ஏற்றுக் கொண்டது.


    அதனால்...
    அனைத்தையும் தூய்மைப்படுத்தும்
    சக்தியை தண்ணீருக்கு வரமாக அளித்தான்.


    மூன்றாவதாக அவன் பாவத்தின்
    ஒரு பங்கை பூமி ஏற்றுக் கொண்டது.


    அதனால்...
    உலகத்திற்கு எந்த ஒரு தாக்குதல் ஏற்பட்டாலும், தானாகவே சுலபத்தில் அது ஆறி விடும் என
    பூமிக்கு வரத்தை அளித்தான்.


    கடைசியாக இந்திரனின் பாவத்தில்
    பங்கு போட பெண்கள் முன் வந்தனர்.


    இதுவே மாதவிடாயில் வந்து முடிந்தது.


    மாதவிலக்கு காலத்தின் போது பெண்கள் தூய்மையற்றவர்களாக இருப்பார்கள்.


    அதற்கு பிரதி பலனாக,


    ஆண்களை விட பெண்களுக்கே அதிக
    பாலின இன்பம் கிடைக்கும் என்ற வரத்தை அவர்களுக்கு இந்திரன் அளித்தான்.


    இந்திரனின் பாவத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதால், மாதம் ஒரு முறை
    பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும்;
    ஒரு பிராமணனை (பிராம ஹாத்யா)
    கொன்ற பழி அவர்களை வந்து சேர்ந்தது.


    அதனால் தான்...
    மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் நேரத்தில்
    அவர்களால் கோவில்களுக்குள்
    நுழைய முடிவதில்லை.


    ஆனால்...
    மாத்திரை போட்டுக் கொண்டாவது
    தூரத்தை ஒத்திப்போட்டு 41நாள் விரதமிருந்து
    சபரிமலைக்குப் போனாலும் போவாங்க நம்ம
    புதுயுகப் பெண்கள்
    -------------
    ஆதாரம் :
    -------------
    மாதவிடாய் காலத்தில் பெண்களை தூய்மையற்ற
    வர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது? By Ashok CR
    https://tamil.boldsky.com/…/articlec...3666-006281.h…
Working...
X