தீபாவளி பக்ஷணங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்களும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய கார வகை பக்ஷணங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.
கார பட்சணம் செய்ய டிப்ஸ்:
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
1 நெறைய கார பட்சணம் செய்வதானால், ஒரு பாத்திரத்தில், பிரண்டையை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். உப்பும் போடவும். நன்கு கொதித்ததும் ஆறவைக்கவும். பிறகு வடிகட்டி அந்த நீரை கார பட்சணம் செய்யும்போது மாவு கலக்க உபயோகப் படுத்தவும். அதனால், பட்சணம் அதிக சுவையுடனும் , கரகரப்பாகவும் இருக்கும்.
2 நெய் அல்லது வெண்ணை சொன்ன அளவைவிட சற்று குறைவாக இருந்தால் பட்சணம் கரகரப்பு குறைவாக வரும். அதை தவிர்க்க, நெய் அல்லது வெண்ணையுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும். பிறகு அதை மாவுடன் கலக்கவும். பட்சணம் நல்ல 'கரகரப்'பாக வரும்.
3 கார பட்சணம் செய்யும்போது அது கரகரப்பாக வந்ததா என தெரிந்துகொள்வதற்கு (பெருமாளுக்கு படைக்கும் முன் சாப்பிடக் கூடாது )
பட்சணத்தை வெறுமன கிழே போடணும். ( not forcibly ) அது நன்றக உடைந்தால் , கரகரப்பாக உள்ளது என அர்த்தம்.![]()
Bookmarks