Announcement

Collapse
No announcement yet.

Adishtanam of Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Adishtanam of Periyavaa

    Adishtanam of Periyavaa
    #உண்மைச்_சம்பவம்:
    -----------------------------------
    இளம் பிராயத்தில் அடிக்கடி 'கும்பகோணம் மடத்திற்கு' விஜயம் செய்வார் #காஞ்சிப்பெரியவர் , #மஹாப்பெரியவா என அனைவராலும் பக்தியுடன் அழைக்கப் பட்ட #ஸ்ரீசந்த்ர_சேகரேந்த்ர_சரஸ்வதி ஸ்வாமிகள்.. அந்த மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு உண்டு. அதை பரிபாலனம் செய்ய ஓர் குடும்பத்திற்கு உரிமை தரப்பட்டிருந்தது. அவர்கள் அங்கேயே தங்கி அந்தத் தென்னந் தோப்பை கவனித்து கொண்டார்கள்.


    அந்த குத்தகைதாரரின் மகன் பெயர் #கருப்பன்.மஹாப்பெரியவரைவிட பத்து பனிரெண்டு வயது இளையவர்..


    ஒருமுறை ஸ்வாமிகள் கும்பகோணம் விஜயம் செய்தார்.அப்போது கருப்பன் எனும் அந்த இளைஞன் கையில் #இளநீரை வெட்டி வைத்து கொண்டு அவர் வரும் வழியில் காத்திருந்தான்..


    "ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர" கோஷம் எழும்ப ஸ்வாமி பக்தர் குழாமுடன் வந்தர்.. சாலையில் இரு பக்கத்திலும் மக்கள் பரவசத்துடன் நின்று அந்த மஹானை தரிஸித்தார்கள்..
    அப்போது திடீரென உள்ளே பிரவேஸித்த கருப்பன் தன் கையிலிருந்த இளநீரை ஸ்வாமியிடம் நீட்டினான். அடுத்த வினாடியே உடன் வந்த பக்தர்களால் நெட்டி தள்ளப்பட்டான்.. இதை கவனித்து விட்டார் ஸ்ரீ ஸ்வாமிகள்..


    அந்த இளைஞனை அருகில் வர சைகை செய்தார்.. மேலாடை இல்லா மேனி..அழுக்கு வேட்டி.. தலையில் கட்டிய துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பவ்யமாக ஸ்வாமி முன் வந்து நின்றான்.. "மடத்து தோப்ப நீதான் இப்ப பாத்துக்கறியா?" ஸ்வாமி கேட்டார். "ஆமா சாமி.. அதான் உங்களுக்கு எளநீர் குடுத்து தாகம் தீக்கலாம்னு வந்தேன்.. என் கையால சாமி வாங்கிக்க மாட்டீங்கன்னு புரியாம தந்துட்டேன். மன்னிச்சுடுங்க " என குற்றவுணர்வில் கூறினான்.. புன்னகைத்தார் ஸ்வாமி..
    "நீ குடுத்தா வாங்கிகிக்க மாட்டேன்னு யாரு சொன்னா ஒனக்கு? நா இங்க தங்கற வரைக்கும் உன் கையால வெட்டின இளநீரை கொண்டு வந்து கொடுக்கனும்.. சரியா?.. ஒம்பேரு என்ன?" என்றார்.
    "கருப்பனுங்க.. சாமி சொன்ன மாதிரி தினமும் வந்து கொடுக்கறேனுங்க" பணிந்தான்.


    அவனுக்கு ஆசி வழங்கி விட்டு மடத்துக்கு செல்ல துவங்கினார்..


    ************************************************
    இது நடந்து ஏறத்தாழ 40-50 ஆண்டுகள் கடந்தன..(பிறகு கும்பகோணம் ஓரிருமுறை சென்றிருப்பார்) சில வருடங்களில் ஸ்வாமியின் 'அவதார நூற்றாண்டு விழா' #கனகாபிஷேகத்துடன் சிறப்பாக நடந்தது..


    பரமாச்சாரியார் தம் இறுதிகாலத்தில் இருந்தார்.. #முக்தி அடைந்தவுடன் அவரது அதிஷ்டானம் (ஸ்ரீ சமாதி ) கும்பகோணத்தில் உள்ள மடத்தின் தென்னந்தோப்பில் அமைய ஸ்வாமி விரும்புவதாக தகவல் வந்தது..


    கும்பகோணம் மட நிர்வாகிகள் வயது முதிர்ந்த கருப்பனிடம் சென்று "இடத்தை காலி பண்ணு கருப்பா.. ஸ்வாமி அதிஷ்டானம் இங்க அமைய உத்தரவு ஆகிருக்கு" என கட்டளை இட்டனர்.. பதறி விட்டார் கருப்பன்.. "ஐயா.. என் அப்பா காலத்துலேந்து இதை வைத்துதான் நாங்க ஜீவனம் செய்யுறோம்.இங்கியே வீடு அமைத்து வாழுறோம்.இப்ப எங்களை வெளியேற சொன்னால் நாங்க எங்கே ஐயா போறது?" என ஏமாற்றத்துடன் கேட்டார்.. "அதெல்லாம் தெரியாது கருப்பா.. ரெண்டுமூனு நாள் கெடு.. அதுக்குள்ள காலி பண்ணிடு" எனக்கூறி சென்றுவிட்டனர்..


    பெரியவாளை நேரில் சந்தித்து மன்றாட முடிவு செய்தார் கருப்பன்.. 'பெரியவர் தற்போது பேசும் நிலையில் இல்லை. சைகைதான்.. காதும் சரியாக கேட்பதில்லை.. தாம் கூறுவதை அவர் புரிந்து கொள்வாரா? இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. முதலில் தம்மை #நினைவில் வைத்திருப்பாரா?' பலவாறான கலக்கத்துடன் காஞ்சி மடத்தை அடைந்தார்...


    மிக நீண்ட வரிசை.. பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.. யாரையுமே அருகில் அநுமதிக்க வில்லை..பத்தடி தூர தரிஸனம் மட்டுமே.. பேச முடியாது .. இதை உணர்ந்த கருப்பனுக்கு வெகு ஏமாற்றம்..


    வரிசை மெதுவாக நகர நீண்ட நேரத்திற்குபின் கருப்பன் பெரியவாளை நேருக்கு நேர் சந்தித்தார்.. "ஐயா" கரம் கூப்பினார் கருப்பன்..#தெய்வீகப் புன்னகையுடன் கரம் உயர்த்தி ஆசி வழங்கினார் ஸ்வாமி.. "சாமீ.. நான்" என இழுக்க அவரை கையமர்த்திய அந்த மனிததெய்வம் தம் அருகில் இருந்த #கருப்பு_வஸ்திரத்தை எடுத்து காட்டி குறும்புடன் சிரித்தது.. கூட்டத்தினருக்கும் பக்தர்களுக்கும் அந்த சைகை விளங்கவில்லை..
    ஆனால் கருப்பன் "ஆமாங்க.. நான் கருப்பன்தாங்க.." என்றார் வியப்பு தாளாமல்.. மீண்டும் கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.. தம் அருகிலிருந்த பழம் ஒன்றை கருப்பனுக்கு வழங்க சொன்னார்.. அதை பெற்று விடை பெற்றார் கருப்பன்..


    அடுத்த தினமே ஸ்வாமியின் ஸ்ரீசமாதி #காஞ்சியிலேயே அமையும் என அறிவிப்பு வெளியானது..🙏🙏


    (இச்சம்பவம் ஸ்ரீ ஸ்வாமிகள் முக்தி அடைந்த சில நாட்களில் விகடன் இதழில் வந்தது..)
Working...
X