பெண்ணுக்கு கல்யாணம். மடத்திலேர்ந்து எதாவது உதவி செய்யணும்..."

ஏழை தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு. மெல்லியதாக ஒரு வடம் செயின்.

இவர்களுக்கு உதவி செய்ய வேண்டியதுதான்.

"நான் ஒரு சந்நியாசி. ஒரு பைசா கூட கையில் தொட்டதில்லை .என்னிடம் போய் பண உதவி கேட்கிறாயே!" என்று வெளிப்படையாக பேசிகொண்டிருக்குமபோதே அந்தரங்கத்தில் ஒரு திட்டம் .

அதே சமயம், காமாட்சி கோயில் தலைமை ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில் பெரியவாளுக்கு பரிவட்டம் கட்டினார். பின்னர் குங்குமப் பிரசாதம் சமர்பித்தார்.

பெரியவாள் பரிவட்டத்தை கழிற்றி, பெண் கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை சுட்டி காட்டி, "அவருக்கு கட்டு " என்று உத்தரவிட்டார்கள்.

யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்த்து யோகம்!

பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து, "எல்லாருக்கும் நீயே கொடு" என்றார்கள்.

திமுதிமுவென்று மார்வாடி கூட்டம் உள்ளே நுழைந்தது. திருத்தல பயணம். வாடகை வாகனத்தில் வந்திருந்தார்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபரிவட்டதுடன், குங்குமத்துடன் உட்கார்ந்திருந்தவதான் , ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும் முன்னூறுமாக காணிக்கை செலுத்தினார்கள். யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி) எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.

இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும், பெரியவாள் எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி, ஆசிர்வதித்து, பிரசாதமாக பழங்களை கொடுத்தார்கள்.

"ஒரு பைசாவை கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் , கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகைச் சாமியாருக்கு!

source:Periva's unique way of help