08-02-2019 மாகமாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியன்று சிவனும் பார்வதியும் சேர்ந்த படத்தில் பகலில் உபவாசம் இருந்து மாலையில் மல்லிகை பூவால் 16 உபசார பூஜை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து பூஜித்து சாப்பிட குறைவற்ற பணம் கிடைக்கும்
என்கிறது நிர்ணயஸிந்து என்னும் புத்தகம் 162ம் பக்கத்தில் மாக சுக்ல சதுர்த்தியாம் து குந்த புஷ்பைஹி ஸதாசிவம் ஸம்பூஜ்ய யோ ஹி நக்தாஸ்ரீ ஸம்ப்ராப்னோதி ஸ்ரீயம் நர: கோவிலிலோ வீட்டிலோ செய்யலாம். மல்லிகை பூவிற்கு குந்த புஷ்பம் என்று ஒரு பெயருமுண்டு.
10-02-2019.ஸ்ரீபஞ்சமி:- மாக மாதம் சுக்ல பஞ்சமியில் மல்லிகை பூவால் அர்ச்சிக்க வேண்டும் மஹா விஷ்ணுவையும் மஹா லக்ஷ்மியையும். ரதி மன்மதன் படம் வைத்து பூஜிக்க வேண்டும். கரும்பு துண்டத்திலும் ரதி மன்மதன் ஆவாஹனம் செய்து பூஜிகலாம். 16 உபசார பூஜை, இனிப்புகள், கார பக்ஷணங்கள், நைவேத்யம்.பாட்டு,
நடனம், பஜனைகள், நாம ஸங்கீர்த்தனம். செய்வதால் எல்லா செல்வங்களும் வந்தடையும்.புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பரிசு கொடுத்து ஸந்தோஷ படுத்த வேண்டும். மாக மாஸே ந்ருப ஶ்ரேஷ்ட சுக்லாயாம் பஞ்சமி திதெள ரதி காமெள து ஸம்பூஜ்ய கர்த்தவி ஸு மஹோத் ஸவாஹா. (ஸ்ம்ருதி கெளஸ்துபம்-47.)
இதற்கு தான் வஸந்த பஞ்சமி எனப்பெயர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இன்று ஸரஸ்வதி அவதரித்த நாள் இன்று மல்லிகை பூவால் ஸரஸ்வதி பூஜை 16 உபசார பூஜை செய்ய வேண்டும் .