Announcement

Collapse
No announcement yet.

16 UPACHARA PUJAI.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 16 UPACHARA PUJAI.

    16 உபசார பூஜை என்னென்ன:-
    த்யானம்:- பூஜை செய்ய போகிற தேவதையை அதற்குறிய த்யான மந்திரத்தையோ, ஸ்லோகத்தையோ சொல்லி , மனதால் அந்த தேவதையை நினைத்து மனக்கண் முன் நிறுத்துவதற்கே த்யானம் என்று பெயர்.


    ஆவாஹனம்:-பூஜை செய்ய போகும் தேவதையை அதற்கு ப்ரதி நிதியாக நாம் வைத்திருக்கும் விக்கிரஹம், படம், கலசம், முதலியவைகளில் மந்திரம் அல்லது சுலோகம் சொல்லி புஷ்பம் அக்ஷதை இவைகளை கலசம் அல்லது படத்தின் மீது சேர்த்து அதில் அந்த தேவதை தங்கும் படி ப்ரார்த்திப்பது ஆவாஹனம் என்று பெயர்.


    ப்ராண ப்ரதிஷ்டை:-இதற்குறிய மந்திரங்கள் சொல்லி அந்த கலசம், அல்லது படத்தில் அந்த தேவதையின் சக்தி தங்கும்படி செய்வதற்கு புஷ்பம், அக்ஷதை சேர்த்து முறையாக செய்ய வேண்டும்.
    ஆஸனம்:- ஏற்கனவே ஆஸனத்தில் அமர்த்திய தேவதைக்கு ,புஷ்பாக்ஷதைகளை கையில் எடுத்துக்கொண்டு ஸ்லோகம் சொல்லி மூர்த்தி மீது சேர்த்து ஆஸனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்தல்.


    பாத்யம்:-தேவதையின் திருவடிகளை அலம்புதல். உத்தரிணியில் தீர்த்தம் எடுத்து தேவதையின் திருவடிகளில் காட்டி வேறொறு பாத்திரத்தில் சேர்த்தல்.
    அர்க்கியம்;- உத்தரணியில் தண்ணீர் எடுத்து தேவதையின் இரு கைகளிலும் அளிப்பது போல் பாவனை செய்து வேறு பத்திரத்தில் சேர்ப்பது.
    ஆசமனீயம்;- உத்தரிணியில் தண்ணீர் எடுத்து தேவதா மூர்த்தியின் வாய்க்கு நேராக காட்டி வேறு பாத்திரத்தில் சேர்த்தல்.


    மதுபர்க்கம்:- பால், தேன், நெய் இவைகளை சமமாக் கலந்ததற்கு பெயர் மதுபர்க்கம். இதை தேவதையின் முகத்திற்கு நேராக காட்ட வேண்டும்.
    பஞ்சாமிருதம்:- பால், தேன், நெய், பழம், கரும்புசாறு இவை ஐந்தும் சேர்ந்தது பஞ்சாம்ருதம். கரும்புசாறுக்கு பதில் நாட்டுசக்கரை உபயோகபடுத்தலாம். விக்கிரஹமானால் இதனால் அபிசேகம் செய்யலாம். படமானால் புஷ்பத்தில் துளி எடுத்து ப்ரோக்ஷிக்கலாம்.


    ஸ்நானம்:- சுத்தமான ஜலத்தால் படமானால் ப்ரோக்ஷிக்கவும். விக்கிரஹமானால் அபிஷேகம் செய்யலாம். ருத்திரம், சமகம், புருஷ ஸூக்தம், துர்கா ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் சொல்லி கொண்டே அபிஷகம் செய்யலாம்.
    வஸ்திரம்:- வசதி உள்ளவர்கள் தேவதைக்கு இரண்டு வஸ்த்ரங்கள் சமர்ப்பிகலாம். வஸ்திரத்திற்கு ப்ரதிநிதியாக இலவம் பஞ்சை மாலை போல் நீட்டி ,நடு நடுவே குங்கும தீர்த்தத்தால் நெருடி மாலை போல் சமர்பிக்கலாம்.


    உபவீதம்:- பூணூல் அணிவிப்பது. பஞ்சினால் செய்த மாலை அணிவிக்கலாம். அல்லது அக்ஷதை சேர்க்கலாம்.
    கந்தம்:- அரைத்த சந்தனத்தை மார்பிலும், சிரசிலும் சமர்ப்பித்தல்.
    சந்தனம் மேல் குங்குமம் சமர்பித்தல். மஞ்சள் கலந்த அக்ஷதை சமர்ப்பித்தல்.


    புஷ்பம்:- புஷ்ப மாலை சமர்பித்தல். இங்கு புஷ்பத்தால் அந்தந்த தேவதைக்கு உரிய மந்திரம் அஷ்டோத்திரம் சொல்லி அர்சித்தல்.
    விநாயகருக்கு துளசியாலும், விஷ்ணுவிற்கு அக்ஷதையாலும், துர்கைக்கு அருகம் புல்லாலும், ஸூர்யனை வில்வத்தாலும்,லக்ஷ்மியை தும்பை பூவாலும்,
    ஸரஸ்வதியை பவழமல்லி( பாரிஜாதம்)யாலும், பைரவரை மல்லிகை பூவாலும், சிவனை தாழம்பூவாலும் அர்ச்சிக்க கூடாது.


    தூபம்:- சாம்பிராணி, தசாங்கம் முதலியவைகளை தணலில் தூவி அந்த புகையை தேவதைக்கு காட்டுதல்.ஊதுவத்தி காட்டுதல்.
    தீபம்:- பல வகை தீபங்களை ஏற்றி அதை பகவானுடைய முகத்திலிருந்து பாதம் வரை ப்ரதக்ஷிணமாக காட்டுதல்.
    மஹா நைவேத்தியம்:- அன்னம், கலந்த சாதம், பாயஸம், வடை, பக்ஷணங்கள், முதலிய சமைத்த பொருட்களை பகவானுக்கு காட்டுதல்.
    தாம்பூலம்:- பழ வகைகள், தேங்காய், வெற்றிலை பாக்கு, பகவானுக்கு காட்டுதல்.
    நீராஜனம்;- கற்பூர ஹாரத்தி செய்தல்.


    மந்திர புஷ்பம்:- வேத மந்திரங்கள் சொல்லி புஷ்பங்கள் சமர்பித்தல்.
    ப்ரதக்ஷிணம் செய்தல், நமஸ்காரம் செய்தல். ராஜோபசாரம் செய்தல்= சத்ரம், சாமரம், பாட்டு, நாட்டியம், குதிரை, யானை போன்ற மந்திரங்கள் சொல்லி பூ அல்லது அக்ஷதை சேர்கவும்.
    மந்திரங்கள் சொல்லி பாலால் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.


    அபராத மந்திரம்:- தவறுகள் , குறைகள் இருப்பின் மன்னிப்பு கேட்டல்.
    வாத்தியார்/ புரோஹிதருக்கு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்தல்.
    அபிஷேக தீர்த்தம் சாப்பிடுதல், ஆரத்தி எடுத்தல் முதலியன.
Working...
X