Announcement

Collapse
No announcement yet.

தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !

    தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகாரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    திரட்டுப்பால்

    முதலில் திரட்டுப்பால்
    ரொம்ப சுலபமான ஆனால் அபாரமான இனிப்பு.

    தேவையானவை:

    1 லிட்டர் வெண்ணை நிறைந்த பால் (full cream milk )
    200gms சர்க்கரை
    ஏலப்பொடி சிறிதளவு (வேண்டுமானால்)

    செய்முறை:

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி , கொதிக்கவைக்கவும்.
    அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
    தொடர்ந்து கிளறவும்.
    நன்கு சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும்.
    ஏலப்பொடி போட்டு கலந்து இறக்கவும்.
    அவ்வளவுதான் , சுவையான திரட்டுப்பால், சுவைக்க தயார்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      பாதாம் ஹல்வா

      என்னைப்பொருத்தவரை இந்த ஹல்வா 'இனிப்புகளின் தலைவன்'

      தேவையானவை:

      2cup பாதாம் விழுது (250gm பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
      2cup சர்க்கரை
      1cup நெய்
      10 - 12 குங்குமப்பூ
      சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
      பால் சிறிதளவு

      செய்முறை:

      ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது, சர்க்கரை போட்டு அடுப்பில் வைக்கவும்.
      குங்குமப்பூ வை 1 ஸ்பூன் பாலில் உறவைக்கவும்.
      அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
      குங்குமப்பூ வை கரைத்து ஊற்றவும்.
      சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
      நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        பாதாம் ஹல்வா 2

        தேவையானவை:

        4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
        1 / 2cup பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
        1 கப் சர்க்கரை
        1 டேபிள்ஸ்பூன் நெய்
        சிறிதளவு ஏலப்பொடி
        பால் சிறிதளவு
        2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது

        மேலே தூவ:

        ரோஜா இதழ்கள் கொஞ்சம்


        செய்முறை:

        ஒரு அடிகனமான பாத்திரத்தில், பாதாம் விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
        அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
        சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
        கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
        நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
        ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
        பாதாம் ஹல்வா ரெடி.
        சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.

        கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
        ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          பாதாம் ஹல்வா 3

          தேவையானவை:

          250 கிராம் பாதாம் ( பாதாமை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
          200 கிராம் சர்க்கரை
          250 கிராம் நெய்
          3 கப் பால்
          சிறிதளவு ஏலப்பொடி
          150 கிராம் ரவை
          2 ஸ்பூன் பிஸ்தா தூளாக்கினது
          இரண்டு ஷீட் 'சில்வர் ரேக் ' (தேவையானால் )


          செய்முறை:

          பாதாமை ஒரு இரண்டு மணிநேரம் ஊறவைத்து தோலை உரித்து ரவை போல மிக்சி இல் உடைத்துக்கொள்ளவும்.
          ஒரு அடிகனமான பாத்திரத்தில், நெய்விட்டு ரவையை போட்டு வறுக்கவும்.
          பிறகு பாதாம் ரவையை போட்டு வறுக்கவும்.
          கொஞ்சம் சிவந்ததும், பால் சர்க்கரை போட்டு கிளறவும்.
          அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
          சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
          நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பிஸ்தா துண்டுகள் தூவவும்.
          நெய் பிரிந்து வரும்போது இறக்கி நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
          மேலே 'சில்வர் ரேக் ' ஒட்டவும்.
          சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            முந்திரி ஹல்வா

            தேவையானவை:

            4 1 / 4 கப் பால் ( கோவா செய்வதற்கு ) அல்லது சர்க்கரை இல்லாத கோவா ஒன்னே கால் கப், துருவி எடுத்துக்கொள்ளவும்
            1 / 2cup முந்திரி ( முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
            1 கப் சர்க்கரை
            1 டேபிள்ஸ்பூன் நெய்
            சிறிதளவு ஏலப்பொடி
            பால் சிறிதளவு
            2 ஸ்பூன் பாதாம் தூளாக்கினது

            மேலே தூவ:

            ரோஜா இதழ்கள் கொஞ்சம்


            செய்முறை:

            ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்திரி விழுது போட்டு அடுப்பில் வைக்கவும்.
            அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
            சிறிது சிறிதாக துருவின கோவாவை போட்டு கிளறவும்.
            கொஞ்சம் இறுகினதும் , சர்க்கரை போட்டு கிளறவும்.
            நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி மற்றும் பாதாம் (தூளாக்கினது )தூவி இறக்கவும்.
            ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் மேலே ரோஜா இதழ்கள் தூவவும்.
            முந்திரி ஹல்வா தயார்.
            சூடாகவோ ஆறினதுமோ பரிமாறலாம்.

            கோவா செய்ய: பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். பொங்காமல் பார்த்துக்கொள்ளவும். அது அப்படியே கொதித்து கொதித்து குறைந்து 'கோவாவாக' மாறும். அதுவரை அப்ப அப்ப கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
            ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் கால் கிலோ முதல் முன்னூறு கிராம் வரை கோவா கிடைக்கும்.
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #7
              முந்திரி ஹல்வா 2

              தேவையானவை:

              1cup முந்தரி விழுது (150gm முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
              2cup சர்க்கரை
              2 1 /2cup சக்கரை இல்லாத கோவா
              2sp நெய்
              2sp முந்திரி உடைத்து
              சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
              பால் சிறிதளவு

              செய்முறை:

              ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்தரி விழுது, நெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
              அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
              இப்பொழுது கோவாவை துருவி அல்லது உதிருதுப்போடவும்.
              நன்கு கிளறவும், கொஞ்சம் கெட்டியாகும்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
              சர்க்கரை சேர்க்கவும்.
              கைவிடாமல் கிளறவும்.
              நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி, உடைத்துவைதுள்ள முந்தரி தூவி, கிளறி இறக்கவும்.
              சுவையான முந்தரி ஹல்வா தயார்.

              குறிப்பு: வெறும் முந்தரி விழுது போடும் இந்த ஹல்வா செய்யலாம. (பாதாம்
              ஹல்வா) போலவே.
              சர்க்கரை இல்லாத கோவா கடையில் வாங்கினாலும் ஓகே அல்லது, ஒரு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சியும் நாமே தயாரிக்கலாம்.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                காரட் - காஜர் ஹல்வா

                காரட் - காஜர் ஹல்வா - ரொம்ப சுலபமான ஹல்வா.

                தேவையானவை:

                1kg 'பிரெஷ்' காரட்
                1 1 /2lt பால்
                500gm சர்க்கரை
                ஏலப்பொடி கொஞ்சம்
                2sp நெய்
                2sp உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.

                செய்முறை :

                காரட்டை நன்கு கழுவி துருவவும்.
                ஒரு அடிகனமான பாத்திரத்தில், பால், காரட் துருவல் போட்டு அடுப்பில் வைக்கவும்.
                அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
                பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ளவும்.
                நன்கு குறுகினதும், சர்க்கரை போடவும். கிளறவும்.
                நெய் ஊற்றவும்.
                நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
                ஒரு அழகான பேசினில் போட்டு உடைத்த பருப்புகள் கொண்டு அலங்கரிக்கவும்.

                குறிப்பு: ஹல்வா கிளரும் நேரத்தை குறைக்க துருவின காரட்டை பால் விட்டு குக்கரில் இல் வேகவைத்துவிட்டு, சர்க்கரை இல்லாத கோவா போட்டும் செய்யலாம்.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #9
                  பலவகை ஹலவா செய்யும் முறை

                  காரட் - காஜர் ஹல்வா போலவே, அதேமுறையில் பூசணி (வெள்ளை பூசணி ),
                  பரங்கிக்காய் ( கல்யாண பூசணிக்காய் - அரசாணிக்காய் ), பீட் ரூட் மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகளிலும் செய்யலாம்.

                  பூசணி, சுரைக்காய் போன்ற காய்கறி களில் செய்வதானால், அவற்றை துருவி
                  வடிதட்டில் போட்டு வடியடவேண்டும். பிறகு நன்கு பிழிந்து விட்டு துருவலை மாத்திரம் உபயோகிக்கவேண்டும். பிழிந்த நீரை 'சூப்' செய்ய உபயோகிக்கலாம்.

                  மேலும் இந்த ஹல்வாகள் செய்ய 'சர்க்கரை இல்லாத கோவா' உபயோகித்தால் அது ஹல்வாவின் சுவையை கூட்டும் .

                  , கல்யாண பூசணி , மற்றும் காரட் - காஜர் ஹல்வாவிற்கு கலர் ஏதும் போட வேண்டாம் , மற்ற ஹல்வாகளுக்கு போடணும்.

                  பூசணி ஹல்வாவின் மறு பெயர் 'காசி ஹல்வா' இந்த ஹல்வா செய்யும் போது சர்க்கரை அளவை சிறிது அதிகரித்தால் கடையில் செய்வது போல் துண்டம் போடவரும். கேசரி கலர் போடலாம்.
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #10
                    'dates halwa ' - பேரிச்சம்பழ ஹல்வா

                    தேவையானவை:

                    600gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
                    1tin Condensed milk ( milkmaid tin )
                    2 தேக்கரண்டி நெய்
                    2 தேக்கரண்டி மைதா / corn flour
                    1 /2cup தண்ணீர்

                    செய்முறை:

                    ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
                    உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
                    அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள் போடவும்.
                    பின் Condensed milk ஊற்றவும் .
                    நன்கு கிளறவும்.
                    நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது இறக்கவும்.
                    அவ்வளவுதான் ஹல்வா ரெடி.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #11
                      மிக்சட் ப்ரூட் ஹல்வா

                      பேரிச்சம்பழ ஹல்வா போல், மிக்சட் ப்ரூட் ஹல்வாவும் செய்யலாம். இந்த ஹல்வாவை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

                      தேவையானவை:

                      200gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
                      2cup டுட்டி பிரூட்டி
                      1cup உலர்ந்த திராக்ஷை
                      2cup உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
                      2cup உலர்ந்த அத்திப்பழம் (துண்டுகளாக்கவும்)
                      1 தேக்கரண்டி செர்ரி (தேனில் ஊறவைத்து கடையில் கிடைக்கும் , வாங்கி துண்டுகளாக்கவும் )
                      1tin Condensed milk ( milkmaid tin )
                      2 தேக்கரண்டி நெய்
                      2 தேக்கரண்டி மைதா / corn flour
                      1cup சர்க்கரை
                      1 cup தண்ணீர்

                      செய்முறை:

                      ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
                      உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
                      அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள், டுட்டி பிரூட்டி,உலர்ந்த திராக்ஷை, உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்,உலர்ந்த அத்திப்பழம், செர்ரி போடவும்.
                      பின் Condensed milk ஊற்றவும் , சர்க்கரை சேர்க்கவும்.
                      நன்கு கிளறவும்.
                      நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
                      ஆறினதும் துண்டம் போடவும்.
                      அவ்வளவுதான் மிக்சட் ப்ரூட் ஹல்வா ரெடி.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #12
                        பூந்தி லட்டு

                        தேவையானவை :

                        1cup கடலை மாவு
                        1sp அரிசி மாவு
                        1tabsp முந்தரி பருப்பு
                        1tabsp உலர்ந்த திராக்ஷை
                        10 - 15 கிராம்பு
                        2sp நெய்
                        ஆரஞ்சு கலர் 2 சிட்டிகை
                        அரை ஸ்பூன் ஏலப்பொடி
                        உப்பு ஒரு சிட்டிகை
                        'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
                        பொரிக்க நெய்/எண்ணெய்

                        சர்க்கரை பாகுகாக :
                        1 3 /4cup சர்க்கரை
                        3 /4cup தண்ணீர்

                        செய்முறை:

                        கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஒரு சிட்டிகை,ஆரஞ்சு கலர், சோடா உப்பு ஒரு சிட்டிகை எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
                        தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
                        வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
                        பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
                        பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
                        பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
                        இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
                        ஒரு பெரியபேசினில் மொத்த பூந்திகளையும் போடவும்.
                        நெய் விட்டு உலர்ந்த திராக்ஷை, கிராம்பு , முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
                        மற்றும் ஒரு அடுப்பில் சர்க்கரை பாகுகாக ஆழமான பத்திரத்தில் சர்க்கரை + தண்ணீர் விடவும். ஏலப்பொடி போடவும்.
                        கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
                        சர்க்கரை பாகை பூந்தி மேல் கொட்டவும்.
                        கரண்டியால் கிளறி விடவும்.
                        கொஞ்சம் சூடு ஆறினதும் லட்டு பிடிக்கவும்.
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #13
                          ரவா லட்டு

                          ரவா லட்டு ரொம்ப easy ஆனால் tasty sweet . எங்கவீட்டில் அனைவருக்கும் மிகப் பிடித்தமான இனிப்பு. 'Ready Made ' ஆக நாங்கள் வைத்திருப்போம்.

                          தேவையானவை :

                          2cup 'பாம்பே ரவா
                          2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
                          1cup நெய்
                          2 tabsp உடைத்த முந்திரி
                          ஏலப்பொடி

                          செய்முறை:

                          ரவையை நன்கு சிவக்க வறுக்கவும்.
                          மிக்ஸ்யில் பொடிக்கவும்
                          ஒரு பேசினில் போடவும்.
                          பொடித்த சர்க்கரையும் போடவும்.
                          ஏலப்பொடி போடவும்.
                          ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அதன் மீது கொட்டவும்.
                          நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.
                          That is all. Rava laddu ready to taste.

                          குறிப்பு: நீங்கள் மெட்ராஸில் இருப்பவரானால் வறுத்த ரவை , சர்க்கரை , ஏலம்
                          எல்லாம் போட்டு மாவு மிஷின்ல் கொடுத்தால் சுலபமாக அரைத்து தருவார்கள். நீங்கள் வீட்டில் நெயில் முந்திரி பொரித்து போட்டால் போரும்.
                          நான் எப்பவும் அதுபோல் வீட்டில் வைத்து இருப்பேன். எப்பவேண்டுமாலும் 'ரவா லட்டு' தயார் பண்ணலாம்.அதுவும் நொடியில்.
                          இந்த பொடியை பாலில் கரைத்து கொதிக்க வைத்தால், சுவையான ரவா பாயாசம் ரெடி. நீங்களும் முயன்று பாருங்களேன்.
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #14
                            ரவா லட்டு - கர்நாடகா பாணியில்

                            தேவையானவை :

                            2cup 'பாம்பே' ரவா
                            2cup சர்க்கரை (மிக்ஸ்யில் பொடிக்கவும் )
                            2cup துருவிய கொப்பரை
                            1 /2cup நெய்
                            2 tabsp உடைத்த முந்திரி
                            1tabsp உலர்ந்த திராக்ஷை
                            ஏலப்பொடி
                            1 /2cup பால்
                            குந்குமப்பூ கொஞ்சம்

                            செய்முறை:
                            ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
                            அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
                            மொத நெய் யையும் விட்டு, ரவையை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
                            நல்ல வாசனை வந்ததும், அடுப்பை அணைக்கவும்.
                            ரவையுடன் சர்க்கரை கொப்பரை சேர்த்து, கை விடாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
                            ஏலப்பொடி போடவும்.
                            வறுத்த முந்திரி, திராக்ஷையை போடவும்.
                            எல்லாவற்றையும் ஒரு பேசினில் போடவும்.
                            நடுவில் குழித்து பாலை சுட பண்ணி ஊற்றவும்.
                            நன்கு கலந்து சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.
                            ஆறினால் உருட்ட கஷ்டம் .

                            குறிப்பு: இதில் பால் சேர்ப்பதனால் 2 - 3 நாளுக்குமேல் வைத்துக்கொள்ள முடியாது.
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #15
                              சேமியா லட்டு

                              தேவையானவை :

                              2 1 /2cup சேமியா (வறுத்தது )
                              Condensed milk - 1 டின்
                              2sp நெய்
                              2 tabsp உடைத்த முந்திரி
                              ஏலப்பொடி

                              செய்முறை:

                              சேமியா வை லேசாக சுடு பண்ணி , மிக்ஸ்யில் பொடிக்கவும்.
                              ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
                              அடுத்து உலர்ந்த திராக்ஷையை வறுத்து தனியே வைக்கவும்.
                              மொத்த நெய்யையும் விட்டு, பொடித்த சேமியாவை வறுக்கவும்.
                              Condensed மில்க்கை விடவும்.
                              நன்கு கிளறவும்.
                              பந்து போல் சுருண்டு வரும் போது எறக்கி ஆறினதும் உருட்டவும்.
                              மிருதுவான 'சேமியா லட்டு' ரெடி.

                              குறிப்பு: இது போல் பாம்பே ரவா விலும் செய்யலாம். ரவையை பொடித்தோ/பொடிக்காமலோ செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம், ஒவ்வொரு சுவை.
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              Working...
                              X