Announcement

Collapse
No announcement yet.

Jayadevar - Forgive your enemies - Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Jayadevar - Forgive your enemies - Spiritual story

    பகைவனுக்கும் அருள்வாய் - J.K. SIVAN


    ஜெயதேவரின் பக்தி கீதங்களில் மனம் பறிகொடுத்த நற்குணங்கள் , பக்தி நிரம்பிய ஒரு வியாபாரி அவர் சிஷ்யனானான்.


    ஒரு நாள், தனவானான அந்த வியாபாரி சிஷ்யன், ஜெயதேவரை அவனது ஊருக்கு விஜயம் செயது, தனது இல்லத்தில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை கானம் செய்து அதை எல்லா மக்களும் கேட்டு இன்புறச்செய்யுமாறு வேண்ட ஜெயதேவரும், சிஷ்யனின் வேண்டுகோளை ஏற்று அற்புதமாக ஸ்ரீ கிருஷ்ண கான நிகழ்ச்சி நடந்தது.


    பக்தி இல்லாதவர்கள் கூட இந்த கிருஷ்ண கானத்தின் மூலம் கிருஷ்ணனை லயிக்கும்படி செய்தார். இப்படியே சில நாள் சென்றது.


    ஒருநாள் ஜெயதேவர் சிஷ்யனிடம், ''அப்பனே, நான் என் ஆஸ்ரமம் செல்கிறேன் என்று தம் இருப்பிடம் திரும்ப வணிகனிடம் விடைபெற குரு சேவையில் திளைத்த பக்தனான அவ்வணிகன் பிரியாவிடை கொடுத்தான். ஜெயதேவர் பொன்னும் பொருளும் விரும்பாதவராகையால், அவருக்கு தெரியாமல் பொன்னையும், பொருளையும் ஓர் வண்டியில் ஏற்றி குருவை அவ்வண்டியில் அமர்த்தி இரு காவலாளிகளை அவரது ஊர்வரை சென்று விட்டு வரச்செய்தான். மேலும், இபொருள்களை குரு பத்தினியிடம் பணிவுடன் ஒப்படைக்கும்படி சொன்னான். அக்காவலாளிகள் இருவரும், அவ்வண்டியுடன் சிறிது தூரம் சென்ற பின் வேறு ஒருவனை குருவிற்கு காவல் செல்லுமாறு கூறிவிட்டு, அவிருவரும் தம் வீடு திரும்பினர். சிறிது நீரம் கழித்து, அந்த வேலை ஆளும் ஜெயதேவரிடம் அனுமதி பெற்று வீடு திரும்பினான். இதனால், ஜெயதேவர் தானே வண்டியை ஒட்டிச் சென்றார். இதை எல்லாம் கவனித்த இரு திருடர்கள், ஜெயதேவரை வழிமறிக்க, அவர் அவர்களின் விருப்பம் அறிந்து வண்டியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி நடந்தார். சந்தேகத்துடன் ஜெயதேவரை பார்த்த திருடர்களுக்கு திடீர் என ஒரு யோசனை தோன்றியது. அதனால், மறுபடி திரும்பி வந்து, ஜெயதேவரை கொல்ல நினைத்தனர். ஏதோ எண்ணம் மனதில் தோன்ற, அவர்கள் ஜெயதேவருடைய கை கால்களை வெட்டி, அவரை ஒரு பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்.


    பூரி ஜகநாத க்ஷேத்ரத்தை ஒட்டிய சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனின் ராஜ்ஜியம். அவன் ஒரு நாள் வீரர்களோடு வேட்டையாட காட்டுக்குச் சென்றான். தாகம். எங்காவது நீர் கிடைக்க தேடும்போது காட்டின் நடுவே ஒரு கிணறு தென்பட்டது. அதில் ஏதோ ஓசை கேட்டதால் எட்டிப்பார்த்தான். ஒளிமிகுந்த தேஜஸோடு ஒரு யோகி கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டான். ராஜா சிவபக்தன். யாரோ யோகி தபஸ்வி கிணற்றில் தவறி விழுந்து விட்டார் என்று பதறினான். அவனது ஆட்கள் உள்ளே இறங்கி அந்த யோகியை வெளியே .கொண்டு வந்தார்கள்.


    'அடாடா இது என்ன கோரம்? அந்த யோகியின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு அல்லவோ இருந்தன. நான் இந்த நாட்டை நல்ல முறையில் ஆண்டு வருகிறேன். என் ஆட்சியில் இப்படி ஒரு அக்ரமமா? இந்த யோகிக்கு யார் தீங்கிழைத்தது என்று ராஜா விசனப்பட்டான். கண்களில் நீர் பெருகியது. கிணற்றில் கிடந்தவர் ஜெயதேவர். வெளியே எடுத்தபோதும் அவர் சமாதி நிலையில் தான் இருந்தார்.


    சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஜெயதேவர் செவிகளில் மன்னரின் சொற்கள் விழவே, அவர் ராஜாவைப் பார்த்து ''அரசே, கோபம் வேண்டாம், யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. என் ஊழ்வினையும் இறைவன் திருவுள்ளமும் அப்படி இருக்க யார் தான் என்ன செய்ய முடியும்? தவிரவும் இறைவன் பேரருளின் முன்பு இந்த உடலுக்கு ஏற்பட்ட இந்த சிறு துன்பம் அற்பமானது. கவலைப் படாதே, கோபப்படாதே, கண்ணீர் விடாதே''


    கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்த மன்னரை தேற்றினார் ஜெயதேவர்.


    ராஜாவுக்கு ஆச்சர்யம். யார் இவர் இவ்வளவு உத்தம ஞானி? கைகால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் இவ்வளவு சாந்தமா? பெரியார்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்கின்றனர் என்று அவரைப் பணிந்து நின்றான். பின்னர் மெல்ல பல்லக்கிலே ஏற்றி ஜெயதேவரை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்று தன குருவாக ஏற்றுகொண்டான். அரசவை மருத்துவர்கள் ஜெயதேவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர். மன்னனும் இவருக்கு பணிவிடை செய்வதே தன் வாழ்வில் முக்தி என கருதி அவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தான்.


    ''மன்னா, நீ உன் கடமையில் கவனம் செலுத்து. உன் பிரஜைகளின் நலன் தான் உன் நலன். முதலில் நீ கடமையை செய். ஆத்ம விசாரணை அப்பறம் நேரம் இருந்தபோது நடத்து. ஜெயதேவர் ராஜாவுக்கு ராஜரீக முறைகளை, வழிகளை போதித்தார். அர்ஜுனன் கண்ணனின் உபதேசத்தால் கட்டுப்பட் டதைப்போல கிரவுஞ்ச ராஜாவும் ஜெயதேவர் சொல்லுக்கு பணிந்தான். சாதுக்கள், சந்யாசிகள் எல்லோருக்கும் பொன்னும் பொருளும் தானம் செய்தான்.


    க்ரௌஞ்ச மன்னன், சனியாசிகளுக்கு பொன்னும், பொருளும் தருவதை அறிந்த ஜெயதேவரை வெட்டியத திருடர்கள் தாங்களும் சன்யாசி வேஷம் தரித்து அரண்மனைக்குச் சென்றனர். ஆனால், அங்கு ஜெயதேவரைக் கண்டதும் மனதில் எங்கே அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பயம் உண்டாயிற்று. ஜெயதேவர் அவர்களை அடையாளம் தெரிந்து கொண்டாலும் தன் சிம்மாசனத்திலிருந்து ஊர்ந்து வந்து அவர்களுக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, நன்கு கவனித்து, வேண்டிய பொருட்களை ராஜாவிடமிருந்து பெற்று செல்லுமாறு செய்தார். இரு காவலாளிகளை துணையாக அனுப்பிவைத்தான்.


    பாதிவழியில் ராஜாவின் காவலாளிகளுக்கு அந்த திருடர்கள் மீது சந்தேகம் எழ, அந்த போலி சன்யாசிகளை நோக்கி, "ஏன் ஜெயதேவர் தங்களிடம் இவ்வளவு கருணை என்று காரணம் கேட்க அந்த போலி சன்யாசிகள், "ஜெயதேவரும் நாங்களும் ஓர் அரசரிடம் பணி புரிந்தபோது நல்லெண்ணம் இல்லாத அந்த அரசன், ஏதோ ஒரு காரணம் சொல்லி, ஜெயதேவரை காட்டிற்கு கூடிச்சென்று கொன்று விடுமாறு கட்டளை இட்டார். ஆனால், நாங்கள் கொல்ல மனமில்லாது கை கால்களை வெட்டி உயிர்ப்பிச்சை அளித்தோம்", என்று பொய் சொன்னபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. திடீரெண்டு பூமி பிளந்து அந்த திருடர்கள் இருவரும் அக்குழியில் விழுந்து மடிந்தனர். இதைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியுடன், அரசரிடமும், ஜெயதேவரிடமும் இச்செய்தியை சொல்ல, ஜெயதேவர் கண்ணீர் விட்டு ஸ்ரீஹரியை பலவாறு துதித்து தம்மை விரோதித்தவர்களை மன்னித்து, ஸ்ரீஹரி திருவடியில் சேர்த்துக் கொள்ளுமாறு பிராத்தித்தார்.


    துஷ்டர்களையும், சத்ருக்களையும் ஸ்ரீஹரியின் பக்தர்களாகவே பார்க்கும் குணமுடைய ஜெயதேவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம்தர, மன்னனும் அக்காட்சியைக் கண்டு, மனம் மகிழ்ந்து இறைவனை வணங்கினான். அந்தக்கணமே ஜெயதேவர் தாம் இழந்த கைகளும் கால்களும் திரும்ப வரப்பெற்றார். ராஜா, ஜெயதேவரின் மனைவி பத்மாவதி, ராணி, மற்றும் அனைவரும் அவரது பக்தியையும், ஸ்ரீ கிருஷ்ணனின் அருளையும் உணர்ந்து பக்தி பரவசமானார்கள்.
Working...
X