Kamasikaashtakam of Vedant desikar in tamil
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
தேசிகரின் காமாசிகாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களையும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகத்தையும் கொண்டது. நூற்றியெட்டு திவ்யதேசங்களுள் ஒன்றான திருவேளுக்கை என்னும் ஸ்தளத்தில் கோவில் கொண்டுள்ள காமாஸிகா நரசிம்ஹஸ்துதி.
காம என்றால் இச்சை ஆஸிக என்றால் அமர்ந்துள்ள என்பது பொருள். திருவேளுக்கை என்பது திருவேள்இருக்கை என்பதின் மருவல். திருவேள் அதாவது லக்ஷ்மிபதி அவனுடைய இருக்காய் என்பது பொருள்.
இப்போது ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.
ச்ருதீநாம் உத்தரம்பாகம் வேகவத்யா: ச தக்ஷிணம் காமாத் அதிவஸன் ஜீயாத் கஸ்சித் அத்புதகேஸரீ
வேதங்களின் உத்தர (பின்) பாகத்திலும் வேகவதீ நதியின் தெற்கிலும் தன்னிச்சையாக கோவில் கொண்ட அத்புதமான சிங்கப்பிரான் வெல்க.
வேதங்களின் உத்தரபாகமாவது உபநிஷத் . அதில் சொல்லப்பட்ட விஷயம் ப்ரும்மம். ஆக நரசிம்ஹன் தான் ப்ரும்மம் என்று பொருள்.
கவிசாதுர்யத்தினால் உத்தர, தக்ஷிண(வடக்கு தெற்கு) என்ற சொற்களை கையாண்டு உத்தர என்ற சொல்லின் பின்னால் வருவது என்னும் பொருளில் வேதத்தின் பின் பகுதி அதாவது உபநிஷத் என்று குறிப்பிடுகிறார். தேசிகருடைய நடையில் இப்படி நிறைய கவித்துவ நிபுணத்தைக் காணலாம். பாதி சிம்ஹம் பாதி மனிதன் ஆனதால் அத்புத கேசரி என்கிறார்.
இந்த நரசிம்ஹஸ்வரூபம் பிரம்மசஸ்வரூபம். ஏனென்றால் இந்த அவதாரம் த்வந்த்வாதீதம் . அதாவது ஒன்றுக்கொன்று எதிர்மறையாய் உள்ளவைகளைக் கடந்தது.
நரசிம்ஹன் மனிதனுமல்ல மிருகமும் அல்ல. அவன்தோன்றியது இரவும் அல்ல பகலும் அல்ல. அந்திவேளை. ஹிரண்யகசிபுவைக் கொன்றது நிலத்திலும் அல்ல. ஆகாயத்திலும் அல்ல. தன் மடியில்.
ஹிரண்யனின் வரத்தின்படி அவ்வாறு அவனைக்கொல்ல வேண்டி இருந்தது என்றாலும் அது ஒரு தத்வார்த்தத்தையே காட்டுகிறது.
ப்ரஹ்லாதன் பக்தன் அவனுடைய "நாராயணன்எங்கும் உள்ளான்." என்று கூறிய வாக்கைக் காக்க தூணில் இருந்து தோன்றினது போல இன்னொரு பக்தனான பிரம்மா கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இவ்வளவு சிரமம் எடுக்கவேண்டியதாயிற்று!
2.தபநேந்து அக்னி நயன: தாபான் அபசிநோது ந: தாபநீய ரஹஸ்யானாம் சார்: காமாசிகா ஹரி:
எவனுக்கு சூரியன் சந்திரன் அக்னி இவை மூன்று கண்களோ அந்த நரசிம்ஹன், தாபநீய உபநிஷத்தின் சாரமாக உள்ளவன் நம்மை காக்கட்டும்.
நரசிம்ஹன் மூன்று கண்களை உடையவன். அதனால் தான் ஆழ்வார் அவனை முக்கண்ணப்பா என்கிறார். அவை சூரியன் சந்திரன் ஆகிய இரு கண்களுடன் அக்னி மூன்றாவது கண்ணாக நெற்றியில் துலங்குகிறது. ஏன் மூன்று கண்கள் என்றால் . .மூன்றுவிதமான தாபங்களை தீர்க்கவே என்று பொருள்.
நம்மை வருத்தும் துயர்கள் மூன்றுவிதமானவை. ஆதி பௌதிகம், மற்ற உயிர்களால் வருபவை. ஆதிதைவிகம், இயற்கை உத்பாதங்கள். ஆத்யாத்மிகம், நம் உள்ளே இருந்து வரும் உடல் மனது சம்பந்தமான இடர்கள்.
தாபநீய உபநிஷத் நரசிம்ஹனின் பெருமையைப் பேசுவது. அதனால் தாபநீய உபநிஷத்தின் சாரம் என்று நரசிம்ஹனை கூறிகிறார் தேசிகர்
.காமாஸிகாஹரி என்ற சொல் ஹரி என்பதால் நாராயணனையும் சிங்கத்துக்கும் ஹரி என்ற பெயர் இருப்பதால் நரசிம்ஹனையும் குறிக்கிறது.
3.ஆகண்டம் ஆதிபுருஷம் கண்டீரவம் உபரி குண்டித ஆராதிம் வேகோபகண்ட ஸங்காத் விமுக்த வைகுண்ட பஹுமதிம் உபாசே(से)
கழுத்துவரை ஆதிபுருஷனாகவும் அதற்குமேல் சிங்க ரூபத்திலும் தோன்றி அசுரனை வதைத்து வேகவதீ நதிக்கரையில் விருப்பம் கொண்டு வைகுண்டத்தை விட்டு இங்கு எழுந்தருளிய பெருமானை வணங்குகிறேன்.
ஆகண்டம் , கழுத்து வரை ஆதிபுருஷனாகிய தன் ச்வரூபத்திலேயே நின்று
உபரி, அதன் மேல் கண்டீரவம் சிங்க உருவாகி நின்றவன் .
ஆராதிம் எதிரியான ஹிரண்யனை குண்டித, அழித்தவன்.
வேகோபகண்ட வேதவதி நதிக்கரை. ஸங்காத் அதன் மீது விருப்பத்தினால்
விமுக்தவைகுண்ட பஹுமதி, வைகுண்டத்தை விடுத்து வந்தருள் செய்தான்.
சிங்கத்திற்கு கண்டீரவம் என்ற பெயர் அதன் கர்ஜனையைக் குறிக்கும்.
5.ஸ்வஸ்தானேஷு மருத்கணான் நியமயன் ஸ்வாதீனஸர்வேந்த்ரிய:
பர்யங்கஸ்திர தாரணாப்ரகடித பிரத்யங்முகாவஸ்தித்தி:
ப்ராயேண ப்ரணிபேதுஷாம் ப்ரபுரஸௌ யோகம் நிஜம் சிக்ஷயன்
காமான் ஆதனுதாத் அசேஷஜகதாம் காமாசிகாகேசரீ
காமாஸிகா நரசிம்ஹன், மருத் முதலிய தேவர்களை அந்தந்த பதவிகளில் நியமித்து இந்த்ரியங்களுக்கு இறைவனாகி பர்யங்க பந்தம் என்ற நிலையில் யோகா நரசிம்ஹனாக அமர்ந்து அன்த்ர்முகத்யானத்தைக் காட்டுபவனாய் தன்னை வணங்குபவர்க்கு தன்னை அடியும் வழியைக் காட்டுபவனாயும் உள்ள அந்தப் பிரபு எல்லோருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றட்டும்.
நரசிம்ஹன் அல்லது நாராயணன் என்ற உபநிஷத் ப்ரஹ்மத்தின் ஆணைப்படி எல்லா தேவர்களும் தத்தம் கடமைகளைச் செய்கிறார்கள். கடோபநிஷத் சொல்கிறது,
'bhayaadhasya agniH thapathi bhayaatthapathi suryaH bhyaath indhrascha vaayuscha mrthyurDhaavathi panchamaH,' (Kata.II-3)
அவனிடத்தில் உள்ள அச்சத்தினால் அக்னி எரிகிறது சூரியன் பிரகாசிக்கிறான், அவ்வாறே இந்திரன் வாயு முதலிய தேவர்களும் தத்தம் வேலைகளை செய்கிறார்கள். ம்ருத்யு என்கிற காலதேவனும் அவர் கட்டளைக்கு கீழ்ப்படிந்தே செல்கிறான்.
ஸ்வாதீனஸர்வேந்த்ரிய:- ஹ்ருஷீகசன் என்று நாராயணனுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு அர்த்தம் இந்த்ரியங்களுக்கு ஈசன் என்பதாகும்.அதாவது இந்த்ரியங்களுக்கு அதிபர்களான தேவர்கள் அவனுக்குட்பட்டவ்ர் என்பது இதன் கருத்து.
பர்யங்க பந்தம் என்பது யோக நரசிம்ஹனின் நிலை. இதன் மூலம் அவனை அடையும் மார்க்கம் காட்டப்படுகிறது. அதாவது பஞ்சபிராணன்களையும் பஞ்ச இந்த்ரியங்களையும் ஒடுக்குவது.
பிரத்யங்முகாவஸ்திதி என்பது பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் இவை மூலம் அந்தர்முக தியானம்.
பிரத்யக் என்றால் மேற்குதிசையைக் குறிக்கும். காமாசிகா நரசிம்ஹர் மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார்.இதனாலும் பிரத்யங்முகாவஸ்திதி என்பது அவர் உள்ள நிலையை குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த சொல்லின் சிலேடையினால் தேசிகர் நரசிம்ஹன் மேற்கு திசையை நோக்கி அமர்ந்ததினாலேயே அவரை அடையும் மார்க்கத்தைக் காட்டுகிறார் என்று கொள்ளலாம்.
ஸ்வஸ்தானேஷு மருத்கணான் நியமயன் என்பது பிராணனை கட்டுப்படுத்துவதையும் குறிக்கும் ஏன் என்றால் மருத் என்ற சொல் பிராணன் முதலிய வஆப்வையும் குறிக்கும்.
இவ்வாறு தேசிகருடைய சொல் வண்ணம் அருமையான உட்பொருளைக் கொண்டது
6. விகஸ்வரநகவருக்ஷதஹிரண்யவக்ஷஸ்தலீ
நிரர்கலவிநிர்கலத் ருதிரசஸிந்துசந்த்த்யாயிதா:
அவனது மதநாஸிகாமனுஜபஞ்சவக்த்ரஸ்ய மாம்
அஹம் பிரதமிகாமித: பிரகடிதாஹவபாஹவ:
ஹிரண்யகசிபுவின் மார்பை வஜ்ரம் போன்ற அகன்ற நகங்களால்பிளந்து ஓடிய இரத்த ஆற்றினால் அந்தியின் சிவப்புடன் கூடியவையும் போட்டி போட்டுக்கொண்டு பக்தர்களின் எதிரிகளை அழிப்பதுமான காமாஸிகாநரசிம்ஹனின் கரங்கள் நம்மைக் காக்கட்டும்.
ஹிரண்யனின் மார்பை ( வக்ஷஸ்தலீ) அகன்ற ( விகஸ்வர) நகங்களால் பிளந்தபோது உதிரம் அளவுகடங்காமல் (நிரர்கல) பெருகி ( விநிர்கலத்) ரத்த ஆறு என ( ருதிரசஸிந்து) என ஓடியது. அதனால்சிங்கப்பிரானின் நகங்கள் அந்திச்சிவப்பைத் தோற்றுவித்தன. அப்படிப்பட்ட அந்த காமாஸிகாநரசிம்ஹனின் கைகள் பக்தர்களின் எதிரிகளுடன் போர் புரிய நான் முதல் நான் முதல் (அஹம் பிரதிமிகாமித) எனப் போட்டி போடுகின்றன.
காமாஸிகா என்ற பதத்திற்கு தேசிகர் மதனாஸிகா என்ற சொல்லை ப் பயன்படுத்தி இருக்கிறார். காம என்றால் மதனன் என்றும் பொருள் அல்லவா? இதுவும் ஒரு கவி சமத்காரம்..
மனுச பஞ்ச வக்த்ர என்னும் சொல் மனிதனும் சிங்கமும் ஆன நரசிம்ஹரைக் குறிக்கிறது
7.
ஸடாபடல பீஷண்ஏ(णे) ஸரபஸ அட்டஹாஸோத்படே
ஸ்புரத்க்ருதி பரிஸ்புரத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
க்ருபாகபடகேஸரின் தனுஜடிம்பதத்தஸ்தனா
ஸரோஜசத்ருசா த்ருசா வ்யதிபிஷஜ்ய தே வ்ய்ஜ்யதே
கிருபையினால் மாய சிங்க வடிவில் தோன்றிய பிரானே! உன்னுடைய உருவத்துக்கு மாறான நடவடிக்கையினால் உன் நிஜ ரூபம் தெரிகிறது. பயங்கரமான பிடரி மயிர், உரத்து பயமளிக்கும் அட்டஹாசமான சிரிப்பு, கோபத்தில் துடிக்கும் புருவம், இவற்றிற்கிடையே உன்னுடைய தாமரைக்கண்ணால் தயையுடன் அந்த அசுரக்குழந்தையை ஒரு தாயின் தயையுடன் கூடிய பார்வை.
பகவான் நரசிம்ஹராக பயங்கரமான உருவத்துடன் காட்சி அளிக்கிறார். சிலிர்க்கும் பிடரி மயிர் ,(சடா) உரத்த அட்டஹாசம். அவர் புருவம் கோபத்தில் துடிக்கிறது( ஸ்புரத்க்ருதிபரிஸ்புரத்). ஆயினும் பக்தர்கள் இதனால் ஏமாறவில்லை என்று கூறுகிறார் தேசிகர், அவனை கபடகேஸரி என்பதன் மூலம். இதேபோல கோபாலவிம்சதியில் கண்ணனை மித்யாகோபன், பொய்யாக இடையன் வேஷம் போட்டவன் என்கிறார்.
ஏன் ஏமாறவில்லை என்றால் அவன் பிரஹ்லாதனைப் பார்க்கும் பார்வையில் பாலூட்டும் தாயின் பரிவு தெரிகிறது.
முந்தைய ஸ்லோகத்தில் நரசிம்ஹனை விஷம்விலோச்சணன் என்று குறிப்பிட்டார். இதற்கு மூன்று கண் என்று ஒரு பொருள். ( sama means even and visham means odd thatis odd no. of eyes ) ஒரு கண் சூரியனைபோல் பக்தர்களை துன்புருத்துவோரைச் சுட்டெரிக்கும். இன்னொரு கண் நிலவைப்போல் பக்தர்களுக்குக் குளிர்ந்திருக்கும்.
அவன் எந்த உருவம் கொண்டாலும் அவனுடைய கமலக்கண் மூலம் அவனைத் தெரிந்துகொள்ளலாம். இந்த ஸ்லோகத்தின் விளைவாக எனக்கு ஒரு கற்பனை தோன்றியது . கடைசியில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.
8. த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிம் அன்யை:
த்வயி ச அரக்ஷதிரக்ஷகை: கிம் அன்யை:
இதி நிச்சிததீ: ஸ்ரயாமி நித்யம்
ந்ருஹரே வேகவதீ தடாச்ரயம் த்வாம்
காக்க நீ இருக்கையில் வேறு யார் வேண்டும்? நீ காக்கவில்லை என்றால் வேறு யாரால் பயன்? இந்த நினைவுடன் வேகவதி நதிக்கரையில் கோயில் கொண்டிருக்கும் உன்னை சரணடைகிறேன். நரசிம்ஹா.
அதாவது நாராயணன்தான் மற்ற தேவதைகளுக்கு சக்தி கொடுப்பவன். ஆதலால் அவன் இருக்கையில் வேறு எங்கும் போகவேண்டாம். அவன் ஆகாவிடில் வேறு யாராலும் முடியாது. காகாசுர வ்ருத்தாந்தம் அம்பரீஷ சரிதம் முதலியவை உதாரணம்.
இத்துடன் காமாசிகாஷ்டகம் எட்டு ஸ்லோகங்கள் முடிவுறுகின்றன.
கடைசி ஸ்லோகம் பலஸ்ருதி.
9.இத்தம் ஸ்துத:சக்ருத் இஹ அஷ்டபி: ஏஷ பத்ய:
ஸ்ரீ வேங்கடேசரசிதை: த்ரிதசேந்த்ரவந்த்ய:
துர்தாந்தகோரவிதுரத்விரதேந்திரபேதீ
காமாஸிகாநரஹரி: விதநோது காமான்
வேங்கட நாதனால் செய்யப்பட்டஇந்த எட்டு சுலோகங்களால் ஒருமுறை துதித்தாலும் தேவர்களால் வணங்கப்படும், ஜெயிக்கமுடியாத பயங்கரமான பாபம் என்னும் யானையைக் கொல்லும், சிம்ஹமாகிற காமாஸிகா நரசிம்ஹன் வேண்டுவதை அளிப்பான்.
த்ரிதசேந்திர என்ற சொல் தேவர்களைக் குறிக்கிறது, இதன் பொருள் தேவர்கள் குழந்தைப்பருவம் , பால்யம், இளமை என்ற மூன்று தசைகளை மட்டுமே கொண்டவர்கள். த்விரதேந்திர என்பது யானையைக் குறிக்கும் சொல். இரண்டு, (த்வி) தந்தங்கள் (ரத) கொண்டது என்பதனால்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends