Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 8 adhyaya 1,2,3,4- gajendra moksha in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8- கஜேந்திர மோக்ஷம்


    அத்தியாயம் 1


    இதுவரை சுகர் முதல் மன்வந்தரமான ஸ்வாயம்புவ மனுவின் .வம்சத்தை விவரித்தார். இப்போது பரீக்ஷித் மற்ற மன்வந்தரங்களைப் பற்றியும் அவற்றில் ஏற்பட்ட பகவானுடைய அவதாரங்களைப் பற்றியும் கூறுமாறு கேட்க அதைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார்.


    (ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு, தேவர்கள், சப்தரிஷிகள், மனுபுத்திரரகள், இந்திரன் இவர்கள் வேறுபடுவர். இவ்வாறு பதினான்கு மன்வந்தரங்கள் பிரம்மாவின் பகல் எனப்படும். ஒவ்வொரு மன்வந்தரமும் மனித கணக்கின்படி, 3௦.8 கோடி வருடங்கள்.)


    கஜேந்திரமோக்ஷம் நடைபெற்றது நாலாவது மன்வந்தரத்தில் என்று கூறிய சுகர் அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.


    அத்தியாயம் 2


    திரிகூடம் என்ற பெயர் கொண்ட ஒரு சிறந்த மலை உண்டு. அதன் தாழ்வரையில் வருணனுக்கு உரித்தானதும் ருதுமத் என்றபெயர் கொண்டதுமான ஒரு உத்தியான வனம் இருந்தது. அது தேவஸ்த்ரீகள் விளையாடும் இடம்.


    அம்மலையிலும் வனத்திலும் ஒரு சிறந்த யானை அரசனான கஜேந்திரன் பெண்யானைகளுடன் வசித்து வந்தது. வேனிற்காலத்தில் வெய்யிலால் தாபமுற்று பெண்யானைகளால் சூழப்பட்டு மத ஜலத்தைப் பெருக்கிக்கொண்டு மதத்தைப் பருகும் வண்டுகள் சூழ, தூரத்தில் உள்ள தடாகத்தில் இருந்து வந்த தாமரை வாசனையை முகர்ந்து தாகத்தினால் துன்புற்ற தன் கூட்டத்துடன் அங்கு விரைந்து சென்றது.


    அங்கு அந்தத் தடாகத்தில் மூழ்கி தெளிவானதும், தாமரை கந்தத்துடன் கூடியதுமான அந்த நீரை ஆசை தீரப் பருகி, துதிக்கையால் அந்த நீரை எடுத்து தன்மேல் வாரி இறைத்துக் கொண்டு களைப்பு நீங்கியது. பிறகு தன் பெண் யானைகளையும் குட்டி யானைகளையும் துதிக்கையால் எடுத்த நீரைக்கொண்டு ஸ்நானம் செய்வித்தது
    . பகவானுடைய மாயையால் மதிமயக்கம் உற்று வரப்போகும் ஆபத்தை எண்ணவில்லை.


    அப்போது விதி வசத்தால் அங்கு வந்த ஒரு முதலை கஜேந்திரனின் காலைக் கவ்வி அதை இழுக்க, எதிரபாராது வந்த துன்பத்தை அடைந்த யானை தன் பலம் கொண்ட மட்டும் போராடியது. அதைக்கண்ட பெண் யானைகள் தீனமாகக் கதறின. அதைக் கேட்டு அங்கு வந்த மற்ற யானைகளால் கஜேந்திரனை மீட்க இயலவில்லை.


    நீருக்குள் இழுக்கப்பட்ட யானையின் மனம் உடல் இரண்டும் படிப்படியாக பலமிழந்தன. இதற்கு மாறாக நீரில் வாழும் பிராணியான முதலைக்கு இவை வளர்ந்தன. இவ்விதம் பிராண சங்கடத்தை அடைந்தபோது தன்னை விடுவித்துக்கொள்ள நெடுங்காலம் முயன்றும் முடியாமல் போகவே தற்செயலாகப் பின்வரும் புத்தியை அடைந்தது.


    "எல்லாவற்றினும் வலியதும், எக்காலத்தையும் முடிப்பதும், எதிர்க்க முடியாத வேகத்துடன் எத்திக்கிலும் பாய்வதுமான கால சர்ப்பத்தினிடம் பயந்து சரண் புகுந்தவனை எந்த ஒரு ஈசன் பரிபாலிக்கின்றானோ, எவனிடம் யமனும் பயந்து ஓடுகின்றானோ, அவனை நான் சரணம் அடைகிறேன்."
    ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 8-கஜேந்திரன் ஸ்துதி


    அத்தியாயம் 3
    கஜேந்திரன் ஸ்துதி


    " எவனால் இவ்வுலகம் உயிருள்ளதாகிறதோ அந்த ஆதிசக்தியான பகவானுக்கு நமஸ்காரம்.
    இவ்வுலகு எவனிடமிருந்து உண்டாகிறதோ, எவன் வடிவாகவே உள்ளதோ, எவன் அதன் காரிய காரணத்திற்கு அப்பாற்பட்டவனோ அவனைச் சரண் அடைகிறேன்.


    தேவர்களும் ரிஷிகளும் கூட அறியாத நிலையில் உள்ளவனும், நடிகன் போல பல ரூபங்கள் எடுப்பவனும் ஆன, அளவற்ற சக்தியை உடைய பரப்ரம்மமாகிய அவனுக்கு நமஸ்காரம்.


    சாட்சியாகவும் பரமாத்மாவாகவும் வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவனும் , பரிசுத்தமான ஞானியரால் மட்டும் அறியப்படுபவனும் ஆன அவனுக்கு நமஸ்காரம்.


    அனைத்திற்கும் காரணமாகி தனக்குக் காரணம் இல்லாத வேதவடிவினனும் ,க்ஷேத்ரக்ஞனும், எல்லாவற்றிற்கும் பிரபுவும் சாட்சியும் ஆன அவனுக்கு நமஸ்காரம்.


    என் போன்ற சரண்புகுந்த அறிவிலிகளின் தளைகளைக் களைபவனும், அளவு கடந்த கருணை உள்ளவனும், ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.


    அவன் தேவனுமல்லன் அசுரனும் அல்லன். மனிதனும் அல்லன். பசுபக்ஷியும் அல்லன். ஆணுமல்லன் பெண்ணுமல்லன். பிறப்பிறப்புடைய்வன் அல்லன். குணம், கர்மம், உளது, இலது அப்பால் நீக்கமற நிறைகின்ற அவன் தோன்றி என்னைக் காக்கவேண்டும்.


    (ஆணல்லன் பெண்ணல்லன் அலியும் அல்லன், காணலும் ஆகான் , உளன் அல்லன் இல்லை அல்லன்) நம்மாழ்வார் திருவாய்மொழி.


    நான் உயிர் வாழ விரும்பவில்லை. அவிவேகத்தால் சூழப்பட்ட இந்த யானைப் பிறவியை விட்டு மோக்ஷத்தையே விரும்புகிறேன்.


    ( முதலையிடம் இருந்து விடுதலை அல்ல கஜேந்திரனின் குறிக்கோள். மோக்ஷம் அடைவதே அதன் நோக்கம்.)


    உலகை ஆக்கியவரும், உலகே ஆகியவரும் , ஆயினும் உலகல்லாதவரும், உலகத்தையே உடைமையாகக் கொண்டவரும், உலகின் ஆத்மாவும், பிறப்பற்ற பிரம்மமும் ஆக விளங்கும் அவனை வணங்குகிறேன்.


    யோகத்தால் கர்மங்கள் ஒடுங்கி யோகபாவனை கூடிய இதயத்தில் யோகிகள் எவனைப் பார்க்கின்றார்களோ அந்த யோகேச்வரனை நான் நமஸ்கரிக்கிறேன்.


    எவனுடைய மாயையால் இந்த ஜீவன் தனது ஆத்மாவை அறிந்துகொள்ளவில்லையோ அந்த அளவுகடந்த மகிமை உடைய பகவானைச் சரண் அடைகிறேன்."


    இவ்வாறு நிர்விசேஷப்ரம்மத்தை துதித்து நின்ற கஜேந்திரனிடம் மற்ற தேவர்கள் வராமல் போக, அப்போது அனைத்திற்கும் ஆத்மாவும் சர்வதேவஸ்வஹரிரூபியாகவும் உள்ள ஹரியானவர் வேதரூபியான கருடன் மேல் சக்ராயுதம் ஏந்தி அங்கு விரைந்து வந்தார்.,


    அவரைக் கண்ட யானை தாமரை ஏந்திய தன் துதிக்கையைத் உயரத் தூக்கி மிகுந்த பிரயாசையுடன் "நாராயணா , அகிலகுருவே, பகவானே உனக்கு நமஸ்காரம்" என்று கூவிற்று.


    கருணை மிகுந்தவராய் பகவான் தடாகத்தில் இருந்து யானையை முதலையுடன் தூக்கிவிட்டு சக்கராயுதத்தால் முதலை வாயைப் பிளந்து யானையை விடுவித்தார்.


    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8
    அத்தியாயம் 4


    அத்தியாயம் 4
    அப்போது பிரம்மாவையும் சிவனையும் முன்னிட்டுக்கொண்டு தேவர்களும் ரிஷிகளும்கந்தர்வர்களும் ஹரியின் அச்செயலைக் கொண்டாடிப் பூமாரி பொழிந்தனர்.


    முதலையாக சாபம் பெற்றவன் ஹூஹூ என்ற கந்தர்வன் . அவன் ஒரு சமயம் ஆற்றில் தேவல ரிஷியின் காலைப் பிடித்து விளையாட்டாக இழுத்ததால் அவரால் சபிக்கப்பட்டு இப்போது தன் சுய ரூபத்தை அடைந்தான். கஜேந்திரனும் பகவானின் ஸ்பர்சத்தினால் அக்ஞானம் நீங்கப் பெற்று பகவானின் பாரிஷத பதவியை அடைந்தான்.
    ,
    அவன் முன் ஜன்மத்தில் இந்த்ரத்யும்னன் என்ற அரசனாக இருந்தவன். அவன் மலயபர்வதம் சென்று பகவான் ஹரியை வழிபட்டுக் கொண்டிருந்தான். அபோது அங்கு அகஸ்திய முனிவர் வந்தார். அவன் மௌன வ்ரதத்தில் இருந்ததால் அவரை முறையாக வரவேற்காததால் அவர் சினந்து, "இவன் சாதுவல்ல. மதிகெட்டவன் பெரியோர்களை அவமதிப்பவன்.யானை போல் ஜடமான புத்தியுடைய இவன் யானையாகக் கடவது" என்று சபித்தார்.அதனால் யானையாகப் பிறந்தவனுக்கு முன் ஜன்ம நினைவாக ஹரிபக்தி தொடர்ந்தது.


    (அவன் செய்த குற்றம் என்னவென்றால் எது தர்மம் என்பதை சரிவரப் புரிந்து கொள்ளாததே ஆகும். மௌனவ்ரதம் ஹரியை பூசிப்பது இவை சாதாரண தர்மம். மகான்களையும் பாகவதர்களையும் பூசிப்பது என்பது விசேஷ தர்மம். அப்போது சாதாரண தர்மம் இரண்டாவது இடம் பெறுகிறது.)


    இந்த கஜேந்திரனின் சரிதத்தைக் கேட்பவருக்கு சுவர்க்கம் , கீர்த்தி இவை உண்டாகும். கலி தோஷத்தைப் போக்கும் என்று கூறிய சுகர் பகவான் எல்லோரும் கேட்டிருக்கையில் பகவான் கஜேந்திரனிடம் மொழிந்தது பற்றி விவரித்தார்.
    பகவான் கூறியது.


    " என்னையும் உன்னையும் இந்த தடாகம் மலை முதலிய காட்சிகளையும், எனது அவதாரங்களையும், சூரியன், அக்னி, சந்திரன், பிரணவம், சத்தியம், யோகமாயை, பசு, அழிவில்லாத தர்மம் , தக்ஷ புத்திரிகள், கங்கை முதலிய புண்ணிய நதிகளையும், சப்தரிஷிகளையும் , என்னுடைய ரூபங்களையும் யார் விடியற்காலையில் எழுந்து மனதை அடக்கி நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர். அவர்களுக்கு நான் பிரயாண காலத்தில்தேளிவான மதியைத் தருகிறேன்."
Working...
X