Announcement

Collapse
No announcement yet.

Tapas of Arjuna-Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tapas of Arjuna-Periyavaa

    Tapas of Arjuna-Periyavaa
    அவாளுக்குத் தெரியாதது எது?


    பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்.(மெய் சிலிர்க்கும் கட்டுரை).


    கட்டுரையாளர்-ரா-வேங்கடசாமி
    தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


    இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது.
    இளையாத்தங்குடியில் முதன் முறையாக
    வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்தது.
    அங்கே மகானும் எழுந்தருளி அனுக்கிரகம்
    செய்து கொண்டு இருந்த சமயம் அது.


    ஒருநாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள்,
    தொல் பொருள் இலாகா அதிகாரிகள்
    எல்லோரையும் மகான் கூப்பிட்டு அனுப்பினார்.
    நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான
    அறிவுரைகளை வழங்கினார்.பின்னர்,
    "தமிழ் நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள்
    மிக சிறப்பானவை" என்று அந்த பெரிய
    மகாநாட்டில் பங்கு பெற்ற மேதாவிகளிடம்
    மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக
    இதைக் கேட்டார்.பதிலளிப்பது மிகவும் எளிதாக
    இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில்,
    "தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில்
    செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பங்களே
    மிக சிறப்பானவை" என்று உடனே பதில்
    சொல்லிவிட்டனர்.


    "சரி.அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது?
    என்று ஸ்ரீபெரியவா அவர்களிடம் கேட்டார்.
    "அர்ஜுனன் தபஸ்" என்றனர்."அந்த சிற்பத்தின்
    போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீபெரியவா
    கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்து
    அதை மகானிடம் காட்டினர்.


    அந்த பெரிய புகைப்படத்தினை அவர்கள்
    ஸ்ரீபெரியவாள் முன் வைத்து நிற்க, அதை அவர்
    சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார்.பிறகு சொன்னார்.


    "இந்த சிற்பத்திலே அர்ஜுனன் பஞ்சாக்னி நடுவிலே
    தபஸ் பண்ற மாதிரி இருக்கு.இப்படி தபஸ் பண்ற
    நேரம் உச்சிவேளைன்னு நமக்கு தெரியறது மாதிரி
    சிற்பி செஞ்சிருக்கார்.அது எப்படின்னு யாராவது
    சொல்ல முடியுமா" என்று ஸ்ரீபெரியவா கேட்டார்.


    புதிர் போன்ற அக்கேள்விக்கு பதில் சொல்ல அங்கே
    யாருக்குமே தெரியவில்லை.சென்னை தொல் பொருள் ஆராய்ச்சி இயக்குனர் திரு நாகசாமி உட்பட அங்கு வந்திருந்த அனைத்து ஸ்தபதிகளுக்கும் இதற்கான விடை தெரியவில்லை.எல்லோரும் சிந்தித்தபடி நிற்க ஸ்ரீபெரியவா, "நல்லா யோசனை செஞ்சி பார்த்துண்டு நாளைக்கு வந்து சொல்லுங்களேன்" என்று அவர்களது தர்ம சங்கடத்தை அந்த நேரம் விலக்கி அவர்களை
    அனுப்பிவைத்தார்.


    ஆனால் அதற்கான தக்க பதில் அவர்களின்
    யோசனையில் உதிக்காததால் அதே தர்ம
    சங்கடத்துடன் அடுத்த நாளும் ஸ்ரீபெரியவா
    சன்னதியில் வந்து நின்றனர்."எங்களுக்கு நிச்சயமா
    எதுவும் தெரியல்லே...ஸ்ரீபெரியவா தான் எங்களுக்கு
    விளக்கம் தரணும்" என்றார்கள் பவ்யமாக.


    ஸ்ரீபெரியவா சொன்னார்........


    "சுத்திலும் நெருப்பா சூழ்ந்திருக்க பஞ்சாக்னி தபஸ்
    சரியா பகல் 12 மணிக்கு மேலே ஒரு முகூர்த்த காலம். அதாவது 1.30 மணி நேரம் செய்ய வேண்டிய தபஸ்,


    இதை அர்ஜுனன் அந்த நேரத்திலே தான்
    செஞ்சிருக்காருன்னு சிற்பத்திலே காட்ட முடியாது
    இல்லையா? அதனாலே சிற்பத்தோட சம்பந்தப்படாம ஒரு ஓரம் வெறும் எலும்புக் கூடாக ஒரு முனிவரை சிற்பி செதுக்கியிருக்கார். அந்த முனிவர் சைகையால் முத்திரை போட்டுண்டு சூரியனை தரிசிக்கிற மாதிரி இருக்கு. எப்பவும் இது போல முத்திரை போட்டு சூரியனை பார்க்கிற நேரம், சூரியன் நடுப்பகல்லே தலைக்கு நேர்மேலே உச்சியிலே வர்ற போதுதான். இதைத்தான் சிற்பி சூரியனையா, அந்த முனிவரை செதுக்கி அந்த நேரத்தை நாம தெரிஞ்சுக்கிற மாதிரி
    பண்ணியிருக்கார்."


    இப்படி சூட்சுமான விஷயங்களை ஸ்ரீபெரியவாளாலே மட்டுந்தான் விளக்க முடியும்.எத்தனை படிச்சு இருந்தாலும் , எங்களால் இதைத் தெரிஞ்சுக்க முடியாது" என்ற அவர்கள் ஸ்ரீபெரியவாளை பூர்ணமாக அன்று
    உணர்ந்து வணங்கி எழுந்தனர்
Working...
X