Announcement

Collapse
No announcement yet.

Aitreya Upanishad -capture of food

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Aitreya Upanishad -capture of food

    Aitreya Upanishad -capture of food
    ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
    பகுதி - 6
    பராவித்யா -------------
    உணவைப் படைத்தார்:


    கடவுள் உலகைப் படைத்து, அதனை வழிநடத்த தேவ சக்திகளையும் படைத்து மனிதனையும் படைத்ததை கவிதை நயத்துடன் இந்த அத்தியாயம் விளக்குகிறது.


    உணவைப் படைத்தார்:
    ----------------------------------
    ஸ ஈக்ஷதேமே நு லோகாச்ச லோகாபாவாச்ச அன்னமேப்ய: ஸ்ருஜா இதி II1II


    பொருள்:
    -------------


    'உலகங்களையும் அதன் காவலர்களையும் படைத்து விட்டேன். இனி அவர்களுக்கு உணவை உண்டாக்குவேன்' என்று கடவுள் நினைத்தார்.


    ஸோஅபோஅப்யதபத் தாப்யோஅபிதப்தாப்யோ மூர்த்திரஜாயத I
    யா வை ஸா மூர்த்திரஜாயதான்னம் வை தத் II 2 II


    பொருள்:
    -------------


    கடவுள் தண்ணீரைப் பற்றி சிந்தித்தார். தண்ணீரிலிருந்து ஓர் உருவம் தோன்றியது.


    அது உணவே.


    ( இயற்கையின் படைப்பியல் பற்றி விளக்கும் ஸ்லோகங்களாக இவை உள்ளன. பகுத்தறிவு வாதமான எல்லாம் இயற்கை என்பது இங்கே அடிபட்டுப் போகும். குழந்தை இயற்கை அல்ல, யாரோ இருவரால் உருவாக்கப்பட்டது. ஓவியம் இயற்கையல்ல யாரோ ஒரு கலைஞரால் வரையப்பட்டது. இசை இயற்கையல்ல. சப்தஸ்வரங்களை பலரும் விரித்து உருவாக்குவது!!


    அட முட்டாள் மனிதனே இத்தனை சிறிய படைப்புகளுக்குமே படைப்பாளி என்றொருவன் இருக்கையில் இத்தனை பிரம்மாண்டமான, இதை விடப் பிரம்மாண்டமாக எதுவுமற்ற இந்த பிரபஞ்சம் மட்டிலும் எப்படிப் படைப்பாளியின்றி தானாக இருக்கக் கூடும்??


    'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவன் வாக்கு இங்கு வெளிப்படுத்தப் படுகிறது.


    பிரபஞ்சம் முழுதிலும் உள்ள பற்பல கிரகங்களும் உயிர்களின்றி இருப்பது ஏன்?

    அங்கு நீர் இல்லாத காரணத்தால் தான்!


    இன்னமும் சில கிரகங்களில் நீர் பனிக்கட்டியாக உறைந்து நிற்கும். அங்கும் கூட உயிரினங்கள் இருப்பதில்லை! நீர் என்றால் வடிவில் வராத நீர்!! பிரவாகமெடுத்து ஓடக் கூடிய நீர். அவ்வாறு உள்ள நீர் சரியான ஈரப் பதத்துடன் உள்ள ஒன்று.


    அந்த நீர் நீராக இல்லாமல் ஏதேனும் சிறிது ஈரப்பதமாக எங்கேனும் பாறையிடுக்கில், மண்ணில் பொதிந்திருந்தால் போதும்!! அங்கு தானாக நுண்ணுயிரிகள், செடிகள், விருட்சங்கள் போன்றவை தோன்றும் என்பது உயிரியல் கற்றவர்களுக்குத் தெரிந்த ஒன்று.


    இதைத்தான் இந்த ஸ்லோகத்தில் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது).


    பிடிக்க இயலவில்லை :
    -----------------------------------


    ததேததபிஸ்ருஷ்ட்டம் பராஙத்யஜிகாம்ஸத் I தத்வாசாஜிக்ருஷத் தன்னாசக்னோத்வாசா க்ரஹீதும் I ஸ யத்தைனத்வாசா அக்ரஹைஷ்யத் அபிவ்யாஹ்ருத்ய ஹைவான்னம் அத்ரப்ரஸ்யத் II 3 II


    பொருள்:
    -------------


    கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட ஆரம்பித்தது. மனிதன் அதை வாக்கினால் (கூப்பிடுவது) பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை.


    வாக்கினால் பிடிக்க முடிந்திருந்தால் 'உணவு' என்று சொல்வதாலேயே அவன் திருப்தியடைந்திருப்பான்.


    (இங்கு வரக்கூடிய ஸ்லோகங்கள் ஓர் அற்புதமான உருவகம். உணவு எதற்குரியது என்பதை இது மறைமுகமாக விளக்குகிறது. அந்தந்த உடலுறுப்புக்குத் பொருந்தும் விஷயங்களால் தான் அதைப் பொறுத்த இயலும் என்னும் உண்மை இங்கு சொல்லப்படுகிறது.)

    அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு ஒருவன் கலங்கலாம், அதற்காக வருந்தி அழலாம் , அதன் மூலம் துன்பமடைந்தவன் சிறிது ஆறுதலைப் பெற இயலும்!!


    ஆனால் ஒருவன் அடுத்தவருக்காக உணவு உண்டு அவனுடைய வயிற்றில் உணவு நிரம்பிய உணர்வை ஏற்படுத்த இயலுமா??


    இல்லை போலித்தனமாக உண்ணாமலேயே 'நான் சாப்பிட்டு விட்டேன்' என்று சொன்னால் வயிறு நிரம்பிய உணர்வு வருமா??


    தம் ப்ராணேனாஜிக்ருஷத் தன்னாசக்னோத் ப்ராணேன க்ரஹீதும் I ஸ யத்தைனத் ப்ராணேன அக்ரஹைஷ்யத் அபிப்ராண்ய ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் II 4 II


    பொருள்:
    -------------

    ஓட முயற்சித்த உணவை மனிதன் முகர்வதன் மூலம் பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை.


    முடிந்திருந்தால் உணவை முகர்வதலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.


    தச்சக்ஷுஷாஜிக்ருஷத் தன்னாசக்னோச்சஷுஷா க்ரஹீதும் I ஸ யத்தைனத் சக்ஷுஷா அக்ரஹைஷ்யத் த்ருஷ்ட்வா ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் II 5 II


    பொருள்:
    -------------

    ஓட முயற்சித்த உணவை மனிதன் பார்வையால் பிடிக்க முயற்சித்தான்.


    முடியவில்லை. பார்வையால் பிடிக்க முடிந்திருந்தால் உணவைப் பார்ப்பதாலேயே அவன் திருப்தியடைந்திருப்பான்.


    எதனாலும் இயலவில்லை:
    ----------------------------------------


    தச்ச்ரோத்ரேணாஜிக்ருஷத் தன்னாசக்னோத் ச்ரோத்ரேண க்ரஹீதும் I ஸ யத்தைனத் ச்ரோத்ரேண அக்ரஹைஷ்யத் ச்ருத்வா ஹைவான்னம் அத்ரப்ஸயத் II 6 II


    பொருள்:
    -------------


    ஓட முயற்சித்த உணவை மனிதன் கேட்பதன் மூலம் பிடிக்க முயற்சித்தான்,


    முடியவில்லை. கேட்பதால் பிடிக்க முடிந்திருந்தால் உணவைப் பற்றி பேசுவதைக் கேட்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.


    தத் த்வசாஜிக்ருஷத் தன்னாசக்னோத் த்வசா க்ரஹீதும் I ஸ யத்தைனத் த்வசா அக்ரஹைஷ்யத் ஸ்ப்ருஷ்ட்வா ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் II 7 II


    பொருள்:
    --------------


    ஓட முயற்சித்த உணவை மனிதன் தொடு உணர்ச்சியால் பிடிக்க முயற்சித்தான்.


    முடியவில்லை. தொடு உணர்ச்சியால் பிடிக்க முடிந்திருந்தால் உணவைத் தொடுவதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான் . (அவன் வயிறு நிறைந்து போயிருக்கும்.)


    தன்மனசாஅஜிக்ருஷத் தன்னாசக்னோன் மனஸா க்ரஹீதும் I ஸ யத்தைனன் மனஸா அக்ரஹைஷ்யத் த்வாத்வா ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் II 8 II


    பொருள்:
    -------------
    ஓட முயற்சித்த உணவை மனிதன் மனத்தால் பிடிக்க முயற்சித்தான்.


    முடியவில்லை. மனத்தால் பிடிக்க முடிந்திருந்தால் உணவை நினைப்பதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.


    தச்சிச்னேன அஜிக்ருஷத் தன்னாசக்னோத் சிச்னேன க்ரஹீதும் I ஸ யத்தைனத் சிச்னேன அக்ரஹைஷ்யத் விஸ்ருஜ்ய ஹைவான்னம் அத்ரப்ஸ்யத் II 9 II


    பொருள்:
    -------------


    ஓட முயற்சித்த உணவை மனிதன் குறியின் மூலம் பிடிக்க முயற்சித்தான்,


    முடியவில்லை. குறியின் மூலம் பிடிக்க முடிந்திருந்தால் உணவை வெளிப்படுத்துவதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.


    ததபானேனாஜிக்ருஷத் ததாவயத் I ஸைஷோஅன்னஸ்ய க்ரஹோ யத்வாயுரன்னாயுர்வா ஏஷ யத்வாயு: II 10 II


    பொருள்:
    -------------


    ஓட முயற்சித்த உணவை மனிதன் அபானனால் பிடிக்க முயற்சித்தான்.


    அப்போது அவனால் பிடிக்க முடிந்தது.


    அபானன்தான் உணவைப் பிடிக்கிறது. எனவே அபானனே உணவின் மூலம் வாழ்க்கையைத் தாங்குகிறது.


    பிராண சக்தியின் ஒரு அம்சமே அபானன். வாய் வழியாக உள்ளே செல்கின்ற சக்தி இது.


    வாய் வழியாக உள்ளே செல்கின்ற உணவை ஏற்றுக்கொண்டு, உரிய அவயங்களுகுத் தேவையான அளவு பகிர்ந்து அழிப்பது அபானன் ஆகும்.


    எனவேதான் அபானனால் உணவைப் பிடிக்க முடிந்தது, அபானனே வாழ்க்கையைத் தாங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Working...
X