Pls share in your known Brahmin groups.


May not be relevant to this group but may be helpful to few deserving poor Brahmin students. Hence I am sharing this post here. Hope Admin will not mistake me. 🙏


Here’s a chance we can give back to our community


ஆங்கில வழிக்கல்வி - தங்குமிடம் - உணவு - உடை இலவசம் ....

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




பெரிய தொழிலதிபரின் பெரும் முயற்சியினால் காஞ்சி மாவட்டம் - கல்பாக்கம் அருகில் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் (ஆங்கில வழி ) ஸ்வாமி தயாநந்தா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி ( Higher secondary school ) பெரிய அளவில் தற்போது நடைபெற்று வருகிறது .


அப்பள்ளியின் கௌரவ ஆலோசகர் மற்றும் முழு மேற்பார்வையாளராக கடந்த சில ஆண்டுகளாக அடியேன் கைங்கர்யம் பண்ணி வருகிறேன் .


அப்பள்ளியில் உணவும் - உடையும் , படிக்கவும் , தங்கவும் இலவசமாக ( school fees and food will be free ) அளித்து அதிக பட்சமாக 25 பிராம்மண ( வசதி குறைந்த) ஆண் மாணவர்களை *ஜூன் 2019* முதல் சேர்க்க விரும்புகிறேன் . அதற்கான பூர்வாங்க வசதியும் நிர்வாகத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட உள்ளது . இந்த வசதி + 2 வரை கிடைக்கும் . இதன் முழு பொறுப்பும் அடியேனின் மேற்பார்வையில் நடைபெறும் .


நமது பிராம்மண சமுதாயத்தைச் சார்ந்த வசதி குறைந்தவர்கள் இதை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் .


மேலும் இளையோர் / ஓய்வு பெற்றோர் ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்களும் அடியேனை தொடர்பு கொள்ளவும் .


*எதிர்கால திட்டம்* விரைவில் அங்கு வேத பாடசாலையும் ஏற்படுத்தப்பட்டு நமது கலாச்சாரப்படி காலை 6 - 8 மணி வரை வேத வகுப்புகள் .


காலை 9 - 00 முதல் மாலை 4 மணிவரை பிற மாணவர்களைப்போல உடையணிந்து சீருடையில் ரெகுலராக பள்ளிக்குச் சென்று ஆங்கில வழி அரசுக் கல்வி படிப்பு .


மீண்டும் மாலை 6.00 முதல் 8.00 மணி வரை வேத வகுப்பு .


ஒரே நேரத்தில் வேதமும் - ஸம்ஸ்க்ருத மொழியுடன் இக்காலத்திற்குத் தேவையான நவீன ஆங்கிலவழி கல்வியையும் நமது ப்ராம்மண குழந்தைகள் சிறு வயதிலேயே பெறுவார்கள் .


இது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் .


தங்களது உறவினர் / தெரிந்தவர் குழந்தைகள் யாராவது இருந்தால் அடையாலம் கண்டு உடன் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லவும் .


மேற்கண்ட நமது ப்ராம்மண சமுதாய நலன் சார்ந்த கௌரவ - Honorary கைங்கர்யத்தில் இணைய விரும்புபவர்களும் என்னை தொடர்பு கொள்ளவும் . இதில் இணைபவர்கள் யாரும் தங்களது கைப்பணம் செலவழிக்க தேவையில்லை .


தாஸன் தெய்யார் ராம்ராஜ் . 7010268732.