Announcement

Collapse
No announcement yet.

Parashar bhattar finds fault in Mohini avatar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Parashar bhattar finds fault in Mohini avatar

    Parashar bhattar finds fault in Mohini avatar
    ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.கூரத்தாழ்வானின் திருக்குமாரர். ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்து கொண்டிருந்த பட்டருக்கு, ஸ்ரீரங்கநாதனை விட, ஸ்ரீ.ரங்கநாச்சியாரிடம் தான் மிகுந்த ஈடுபாடு ,பக்தி.


    இதைக் கண்ணுற்ற அரங்கனுக்கு ஒரே பொருமல்.' நம்மிடம் இல்லாத எந்த தனித்தன்மை நம் பிராட்டியிடம் இவர் கண்டு விட்டார் ? சரி நேரம் வரும்போது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்'….. எனக் காத்திருந்தார்.


    அதற்கான நேரமும் வந்தது .' அத்யயன உத்சவம் ( வைகுண்ட ஏகாதசி) ஆரம்பமாயிற்று.வைகுண்ட ஏகாதசி அன்று முதல் நாள் எப்பொழுதும்


    ஸ்ரீ.நம்பெருமாள், ' நாச்சியார் திருக்கோலம்' சாற்றிக் கொண்டு , அதி அற்புதமான ' மோஹினி அலங்காரத்துடன்' பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.


    அன்றும் அதே போல ' மோஹினி அலங்காரம் ' அழகுற சாற்றிக் கொண்டு, புறப்பாட்டுக்கு எழுந்தருளும் முன்பாக ,


    அர்ச்சகரை அழைத்து , ஸ்ரீ.பராசர பட்டரை தனிமையில் தன்னிடம் அழைத்து வரும்படியாக ஆஞ்ஞாபித்தார்.


    அர்ச்சகர் விண்ணப்பத்திற்கிணங்க, ஸ்ரீ.பட்டரும் திரைக்கு பின்பாக எழுந்தருளி இருந்த ஸ்ரீ.நம்பெருமாள் முன்பு சென்று அவரைப் பணிந்தார்.


    ஸ்ரீ.நம்பெருமாள் பட்டரிடம்" என்ன பட்டரே! நம் நாச்சியார் திருக்கோலம் எப்படி ? உம்முடைய நாச்சியாரைப் போலவே நாமும் அழகுற இருக்கிறோம் இல்லையா ? பதலளியுங்கள்"…… என்று வினவ,


    ஸ்ரீ.பட்டரும் பெருமாளை ஒரு முறை அவருடைய திருமுடி முதல் திருவடி பரியந்தம் ஏற இறங்க பார்வையிட்ட பின்பு "


    தேவரீர் இந்த நாச்சியார் திருக்கோலத்தில் அதி சௌந்தர்யத்துடன் தான் சேவை சாதிக்கிறீர்.ஆனாலும் …….. என்று இழுத்த மாதிரி நிறுத்தினார்.


    பெருமாள் " என்ன பட்டரே! ஏன் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி விட்டு மென்று விழுங்குகிறீர்? உம் நாச்சியாரைப் போலவே தானே இருக்கிறேன்? சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லுங்கள்"…. என்று கேட்க,


    பட்டர் பெருமாளிடம்," ஸ்வாமி! தங்கள் நாச்சியார் திருக்கோலம் அதி அற்புதம் தான்.அதில் எள்ளளவும் எனக்கு சந்தேகம் இல்லை,


    ஆனால் எம்முடைய நாச்சியாரின் கருணையைப் பொழியும் பார்வை உம்மால் பார்க்க இயலாது.


    உம்முடையப் புருஷப் பார்வை உம்மை எம் நாச்சியாரிடமிருந்து வேறு படுத்திக் காட்டி விடுகிறதே!


    நீவிர் என்ன முயன்றாலும் எம் நாச்சியாரின் கருணையை அப்படியே பொழியும் பார்வையை உம்மால் பார்க்க இயலாது"……. என்று சொல்லி முடித்தாராம்.


    இதைக் கேட்ட பெருமாளுக்கு உள்ளூர பெருமகிழ்ச்சி.தம் நாச்சியாரின் பெருமை ஒரு பக்தனின் வாயிலாக வெளிப்பட்டதில் பரமாத்மா பேருவகை அடைந்தார் என்பது சரித்ரம்.


    எனவே நாம் திருக் கோயில்களுக்கு செல்ல நேர்கையில், பெருமாளின் சன்னதி முன்பு தாயாரின் ப்ரபாவங்களைச் சொல்லும் ஸ்தோத்திரங்களையும்,


    தாயாரை சேவிக்கும் போது, அவள் முன்பு பெருமாளின் ஸ்தோத்திரங்களையும் சொல்லும் போது


    இருவரும் ஒருவர் மற்றவரின் ப்ரபாவங்களைக் கேட்டு மனமுவந்து நம்மை அனுக்ரஹிக்கிறார்கள் என்பது சான்றோர் வாக்கு .


    அவ்வாறே நாமும் பின்பற்றி , திவ்யதம்பதிகளின் கருணா கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாவோம்.
    ஸ்ரீ.ரங்கநாதன் ஸ்ரீ.ரங்கநாச்சியார் திருவடிகளே சரணம்.
Working...
X