ஆச்சரியம் எது.
நாம் காணும் இவ்வளவு பெரிய உடல் ஒரு துளி சுக்கிலத்திருந்து எப்படி உண்டாகிறது.


ஒன்பது துவாரமுள்ள இந்த உடலில் மூச்சு போய் வந்து கொண்டிருப்பது மூலம் உயிர் தரிப்பது எப்படி.
ஒரு சிறு பொரி நெருப்பில் இந்த உடலே எரிந்து சாம்பல் ஆவது எப்படி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அகண்டமான பிருத்வியில் ( திரோதானம்) பிறப்பு (சிருஷ்டி) வளர்ப்பு (ஸ்திதி) இறப்பு (ஸம்ஹாரம்) இம்மூன்றும் முடிந்து அகண்ட வெளியான ஆகாயத்தில் ( அருளல்) லயமாகிறது.

இதை எல்லாம் செய்வது ஒரு சக்தி. இதை தெய்வம் என்றும் சொல்லலாம்.
இந்த சக்தி நம் உள்ளேயே உறைகிறது. இதை நாம் அறிய முற்படவேண்டும்.


இந்த உடலிலுள்ள ஒளிரும் ஞானத்தின் மெளனத்தை , அண்டத்தின் அழகை அனைத்தையும் அளாவி நிற்கும் அழிவில்லாத ஒன்றை ஆன்மா எங்கிறோம்.


அனைத்தையும் விட ஆன்மாவே அருமையுடையது; இனிமை உடையது எங்கிறது ப்ருஹதாரண்ய உப நிஷத். திரு நாவுகரசரும் என்னை விட எனக்கு இனியவர்கள்
வேறு யாரும் இல்லை .ஆனால் என்னுள்ளே உள்ள ஈசன் என்னை காட்டிலும் இனியவன் எங்கிறார்.


உலத்திலுமுட் பொருளாக விளங்கி நிற்கும் பரம்பொருளே நம் உள்ளத்தில் உள்பொருளாக நிகழ்கிறது என்பதை உணர் ந்து , அதனை புரிந்து கொள்வதுதான் , நம்மை நாமே அறிந்து கொள்வது ஆகும்.


ஐம் புலன் களும் அடங்கி மநதிலே அமைதி நிலவி , அறிவு ஒரு முனைப்பட்டு இருக்கும் போது ஆன்ம ஒளி தெளிவாக புலப்படுகிறது. என்கிறது கடோப நிஷத்.

அனைத்திலும் அமைந்து விளங்கும் ப்ரும்மம் தான் , நம் உடலிலும் ஆன்மாவாக ஒளி வீசி நிற்கிறது. ப்ரும்மத்தினை பற்றி இந்த ஞானத்தை பெற்றவர்கள் பிரும்மமாகவே ஆகி விடுகின்றனர் என் கிறது முண்டகோபனிஷத். இத தான் ஸ்ரீ வித்யா உபாசனையில் உபாசகன் தேவியாகவே ஆகி விடுகின்றான் என்று சொல்ல படுகிறது.


இந்த இறைமையை எப்படி அனுபவிப்பது. ஜபம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. எந்த ஜபம் செய்ய படுகிறதோ அப்போது அந்த தெய்வத்தை பற்றி நாம் அறிந்து கொண்டதெல்லாம் நம் மனதில் எழ வேன்டும். இறைமை பண்புகளை நினைக்கும்போது இறைமையினை அனுபவித்ததாகிறது.


ஸ்வேதாஸ்வர உபநிஷத் நம் அகத்தில் ஒளிரும் ஆன்ம ஒளியினை ,பரத்தில் ஒளிரும் பிரும்ம ஒளியுடன் ஒன்றாக்க வேண்டும் எங்கிறது. இவ்விரண்டும் ஒன்றே என்று உணர்ந்தால் போதும். அந்த உணர்விலேயே அவை ஒன்றாகி விடுகிறது.
கண் காது மூலம் இன்பத்தை அனுபவிக்க ஆதாரமாக உள்ளது ஆன்மா. இந்த ஆன்மா இன்ப வடிவானது. இறைவனை தியானிக்கும் போது ஏற்படும் இன்பம் ஆன்மாவினால் தான் உணர முடியும்.


இந்த ஆனந்தத்தை அனுபவிப்பது இந்த உடலா, உயிறா ஆன்மாவா. இந்த ஆனந்தம் ஆன்மாவிடமிருந்து வருகிறது. இதை மறைபொருளாக இருந்து அனுபவிப்பது ஆத்மாவே.


ஆதி சங்கரரின் வேதாந்த பேரிகை சொல்கிறது :-மனிதன் சரீரத்தினுடைய பஞ்ச கரணங்கள் மூலம் எந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறானோ அந்த ஆனந்தமே ஆத்மா தான். இந்த ஆனந்தம் பெற சாந்தி ஏற்பட வேண்டும். சாந்தி என்றால் மனம் சலனம் இல்லாமல் இருப்பது. சலனமும் சாந்தியும் எதிர் நிலைகள். உண்மையான நிலையான பேரின்பமாகிய சத்சித் எங்கின்ற ஆனந்தத்தை அளிக்கும் தாய் சாந்தி.
கண்ணன் தன் கீதையில் இந்த சாந்தி இல்லாதவனுக்கு சுகம் எங்கிருந்து வரும் எங்கிறார்.


ஆதி சங்கரர் கூறுகிறார் :- இறைவனின் திருவருளும், குருவருளும் இருந்து புலன் அடக்கமும் இருந்தால் சாந்தி நிலை ஏற்படும் எங்கிறார். திருவள்ளுவரும் இதை சொல்கிறார். இன்பத்துள் இன்பம் விழையான் தான் துன்பம் துன்பத்துள் வருதல் இலன் . இங்கு துன்பம் என்பது அமைதி இன்மை.


இன்பத்தை நாடி செல்லும் போது தான் துன்பம் ஏற்படுகிறது. ஊர் மேய்வது தான் உள்ளத்தின் பொல்லாத்தனம். உள்ளம் அடங்க அடங்க அமைதி ஏற்படும். இந்திரியங்களால் ஏற்படும் இன்பம் , ஆரம்பத்தில் இன்பமாக இருந்து பின்பு துன்பமாகும். ஆத்ம ஞான அடிப்படையில் வரும் இன்பம் பேரின்பம்.


யோகம் என்றால் சேர்க்கை. பல பொருட்களுடன் நாம் வாழ்க்கயில் சேர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த சேர்க்கை நிரந்தரமானதில்லை.அதனால் மன நிலை அலை பாய்கிறது. முடிவான ஒரு பொருளுடன் என்னாளும் சேர்ந்து விட்டோம் என்றால் அதுவே யோகம். அஞ்ஞான மன இருளால் பல விகாரம் தோன்றுகிறது. அதை ஆத்ம விசாரத்தால் தாண்டி ஒன்றினை ஒன்றுவதே யோகம்.


யோகம் உள்ளிருந்தே மலர்வது. செயலை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வேள்வியாக செய்வதே யோகம். இதையே பகவான் கீதையில் யோக: கர்வஸுகெளஸம் எங்கிறார்.


நமது மனதிற்கு மூலமாக இருப்பது பரமாத்மா ஒன்று தான். மனதை இந்த பரமாத்மாவிடம் திருப்புவதற்காகவே சுவாசத்தை அடக்குகிறார்கள். ஏனென்றால் எண்ணம் உதிக்கும் வேர் எதுவோ அதுவே சுவாசத்தின் வேரும். எனவே சுவாசத்தை கட்டுபடுத்தினால் மனம் அடங்கி விடுகிறது.


ஐம்புலன் களையும் ,மனதையும், அறிவையும் ஒரு நிலைபடுத்தி யோகம் செய்வது சாத்தியம் என் கிறது கடோபனிஷத். அஷ்டாங்க யோகம் மனிதன் தன் நிலையிலிருந்து தேவ நிலை அடைவதற்கான படிகள். யோகத்திற்க்கு உடலை கருவியாக்கி கொண்டு உயிரையும், உள்ளத்தையும் மனதையும் பண்படுத்தி உள்ளத்தினாலாகிய ஆத்மனை அடைந்து இன்புருதலே. மனது நிற்கும்போது சுவாசம் நிற்கிறது. சுவாசம் அடங்கினால் மனதும் அடங்கும்.


யோகம் இருவகைபடும். ஆதாரம் ; நிராதாரம். நம் உடலில் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் உறையும் மூர்த்தங்களை அடிக்கடி நினைக்க ஆன்ம உணர்வு ஏற்படும். இது ஆதார யோகம். இந்த நிலை வந்த பின் இந்த அருள் சக்தியை உள்ளக்கண் கொண்டு உணர முடியும். அதன் பின் தான் வேறு அச்சக்தி வேறு என்ற நினைவு நீங்கும். முக்திக்கு உரிய மோனம் சித்திக்கும். இதயத்தில் இறை நிலை நிலைத்து நிற்கும்.