Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 8 adhyaya 18 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8-அத்தியாயம் 18


    அத்தியாயம் 18
    பகவானுடைய அவதார காலம் நெருங்கியபோது திசைகள் நிர்மலமாயின. நீர்நிலைகள் தெளிந்தன. மக்கள் மகிழ்ச்சியுற்றனர். வானோரும் வேதியரும் மகிழ்வுற்றனர்.


    வாமனர் ஆவணி மாதம் சுக்லபக்ஷம் ஸ்ரவண நஷத்திரத்துடன் கூடிய த்வாதசியில் அபிஜித் முஹுர்த்தத்தில் அவதரித்தார். நான்கு புஜங்களுடனும் சங்கு சக்கரம் பீதாம்பரம் இவைகளுடனும் தாமரை போன்ற கண்களுடனும் தோன்றினார். கச்யபரும் அதிதியும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் அற்புத நடிகனைப்போல் உருமாறி குட்டை பிரம்மச்சாரியாக ஆனார்.


    ரிஷிகள் அவருக்கு ஜாதகர்மம் நாமகரணம் இவைகளைச் செய்தனர். சூரியனே காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். உபவீதத்தை ப்ரஹஸ்பதி கொடுக்க கச்யபர் மேகலையைக் கொடுத்தார்.


    பூதேவி மான் தோல் கொடுத்தாள்.மரங்களுக்குப் பதியாகிய சந்திரன் தண்டத்தைக் கொடுத்தான். உலக நாயகரான வாமனருக்கு கௌபீனமும் வஸ்திரமும் தாயான அதிதியால் கொடுக்கப்பட்டன. ஆகாசத்தின் அதிதேவதை குடை கொடுத்தது.


    பிரம்மா கமண்டலுவையும் சப்தரிஷிகள் தர்ப்பைகளையும் கொடுத்தனர். அழிவற்ற வடிவினராகிய அவருக்கு சரஸ்வதி அக்ஷமாலையைக் கொடுக்க குபேரன் பிக்ஷாபாத்திரத்தை அளித்தான்.


    அன்னபூரணியான பார்வதி தேவி வாமனருக்கு பிக்ஷை அளித்தாள். இவ்விதம் போற்றப் பெற்ற வாமனர் பிரம்மரிஷிகள் நிறைந்த அந்த சபையை தனது பிரம்மதேஜஸால் பிரகாசிக்கச்செய்தார்


    பிறகு வாமனர் அக்னியை பிரதிஷ்டை செய்து ஹோமம் செய்தபிறகு மகாபலியின் யாகசாலையை நோக்கிப் புறப்பட்டார். நர்மதையின் வடக்குக் கரையில் அமைந்த அந்த யாகசாலையில் உள்ள ரித்விக்குகள் சூரியனைப்போல் பிரகாசித்த வாமனரைக் கண்ணுற்றனர்.


    அவருடைய தேஜஸ்ஸால் கவரப்பட்டு அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று எதிர்கொண்டு வரவேற்றனர்.
    பலிச்சக்கரவர்த்தியும் அவருடைய உருவத்தால் கவரப்பட்டு மகிழ்ச்சி பொங்கியவனாய் அவருக்கு ஆசனம் அளித்து அவருடைய திருவடிகளுக்கு நீராட்டி அவரை பூஜித்தான்.


    பிறகு அவன் கூறினான்.
    "பிரம்மஸ்வரூபியான தங்களுக்கு நமஸ்காரம். பூஜித்தற்குரியவரே எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அதையெல்லாம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். நீர் பிரம்மசாரியாதலால் பொருளில் நாட்டமுடையவராக நினைக்கிறேன்.


    பசுவோ, பொன்னோ, பொருளோ விவாகத்திற்குரிய பெண்ணோ, குதிரைகளோ, யானைகளோ, தேர்களோ, எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்."


    அவாப்த சமஸ்த காமனும், லக்ஷ்மீபதியுமான பகவானிடம் இவ்விதம் கூறினான்!


    உண்மையில் நாமும் இவ்விதம்தான் செய்கிறோம். பகவானிடம் என் பிரார்ததனை நிறைவேறினால்
    இதை செய்கிறேன் அதைசெய்கிறேன் என்று சொல்கிறோமே அதுவும் அகந்தைதான். எல்லாம அவனுடையதாக் இருக்க நாம் எதை அவனுக்கு அளிப்பது?
Working...
X